அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 5 ஏப்ரல், 2014

சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும், சுயதொழில் ஊக்குவிப்பு நன்கொடை வழங்கலும்.

                 -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
              ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள சிரேஷ்ட பிரஜைகளைக் கௌரவிப்பதோடு, சமூர்த்திப் பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான மாணியம் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.எம்.பஸீர், ஏ.எம்.தபீக், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்ஹம்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், கணக்காளர் ஏ.எல்.மஃறூப் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிரேஷ்ட பிரஜைகளையும், சமூர்த்திப் பயனாளிகளையும் கௌரவித்த பிரதம அதிதி மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' நமது சமயம் நமக்குப் போதித்தவைகளை நாம் மறந்து செயற்படுகின்றோம். இஸ்லாம் கூறியபடி மஹர் கொடுத்துப் பெண் எடுப்பதற்குப் பதிலாக, பெண்ணிடமிருந்து கொழுத்த சீதனத்தை எதிர்பார்க்கிறோம். குர்ஆன் சொன்னபடி சொத்துப் பங்கீடு செய்வதற்கு எதிர்மாறாக எல்லாவற்றையும் பெண்ணிற்குக் கொடுத்து விட்டு, ஆண்களை வெறுங்கையோடு விடுகிறோம். வயதான தாய், தந்தையரை ஆண்மக்களே பராமரிக்க வேண்டும்.என்று இஸ்லாம் கூறும்போது, இன்று எத்தனை பேர் இதனைச் செய்கிறோம். நாம் நிறையவே மாற வேண்டியுள்ளது. நாம் மாறாத வரை, நமது தலைவிதியை அல்லாஹ் ஒரு போதும் மாற்ற மாட்டான்' எனத் தெரிவித்தார். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter