அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 10 ஏப்ரல், 2014

உடங்கா கிராம மக்களுக்கான ஒன்று கூடலும், நடமாடும் சேவையும். -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடங்கா கிராம மக்களின் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும், உபகாரங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று உடங்கா கிராமத்தில் இடம் பெற்றது.

உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம்,சுதேச வைத்தியம், மற்றும்  சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும்; பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.கே.எம்.றகுமான், பிரதேச சபை உறுப்பினர் ஏ.றியால் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.ஏ.எல்.சஃபீர், பொது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.எம்.பஸீர்,இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்ஹம்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், கணக்காளர் ஏ.எல்.மஃறூப் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பிரதேச மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இனங்காணப்பட்டு, உடனுக்குடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதே வேளை சமூர்த்திப் பயனாளிகளுக்கும்,வயோதிபர்களுக்கும் நன்கொடைகள் வழங்கப் பட்டதோடு,'திரியபியச' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடொன்றும் அமைச்சர் மன்சூரினால் வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் ' நீங்கள் எல்லோரும் வாக்களித்ததனால் தான் நான் இன்று அமைச்சராக இருக்கிறேன். அதனால் கஷ்டம், துயரம் எதுவுமே பாராது எந்நேரத்திலும் உங்கள் குறை,நிறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பது எனது கடமை. தீர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று காலையில் கூட 20க்கு மேற்பட்ட தாய்மார்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.' எனத் தெரிவித்தார்.












                                                                                                                                                                                                                                                                                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter