அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நிந்தவூர் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் (IT Campus) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. -பிரதம அதிதி பைஸால் காசீம் எம்.பி-



நிந்தவூர் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் (IT Campus) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

-பிரதம அதிதி பைஸால் காசீம் எம்.பி-         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் கோட்டக் கல்விக் காரியாலயமும்> ஐ.ரி.கெம்பசும் இணைந்து நடாத்திய பட்டமளிப்பு (சான்றிதழ் வழங்கும்) விழா இன்று (02.02.2014) நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நடைபெறறறது.
ஐ.ரி.கெம்பசின் முகாமைத்துவப் பணிப்பாளர் யூ.முஜிபுர் றகுமான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்> நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 1100 இளைஞர்> யூவதிகளுக்கு பட்டங்களும்> சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ' இன்றுள்ள இளைஞர்கள் கல்விமான்கள்> அறிஞர்களின் அறிவுரைகளைச் செவிமடுக்காத காரணத்தினால்தான் இன்று இலங்கையில் தொழில் பெற முடியாமல்> சவூதி போன்ற நாடுகளைத் தேடி ஓட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே நமது இளைஞர்கள் கல்வியில் கூடிய கரிசனை காட்ட வேண்டும். வுழிகாட்டுகின்றவர்களை மதித்து நடக்க வேண்டும்'  எனக் கேட்டுக் கொண்டார்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter