அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 20 டிசம்பர், 2012

வெள்ளத்தில் மிதக்கும் மாவடிப்பள்ளிப் பாலம்; நமது அமைச்சர்கள் அக்கறை கொள்ள மாட்டார்களா? உலமாக் கட்சி விசனம்!



flood.J6652PG
மாரி காலத்தில் வெள்ளத்தினால் தடைப்படும் நீண்ட கால பிரச்சினையான மாவடிப்பள்ளி தாம்போதியை திருத்துவதில் முஸ்லிம் கட்சித் தலைவர்களின் அசிரத்தை விசனத்துக்குரியதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கல்முனையிலிருந்து சம்மாந்துறை, அம்பாறை நோக்கிச்செல்லும் பிரதான வீதியில் குறுக்கிடும் மாவடிப்பள்ளி பாலம் மாரி காலத்தில் நீரால் நிரம்பி வழிவதையும் வாகனங்கள் போக முடியாத நிலையையும் நாம் அறிந்த வரை கடந்த நாற்பது வருடங்களாக காண்கிறோம்.
இத்தகைய நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலை தரும் விடயமாகும்.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள இரண்டு முஸ்லிம் கட்சிகள் அரசில் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றன. இதன் தலைவர்களான அதாவுள்ளாவும் ஹக்கீமும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக இருக்கின்றனர். 1989ம் ஆண்டு முதல் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் உள்ளது. ஆனாலும் இப்பிரச்சினை வருடா வருடம் வருவதும் வெள்ளம் வற்றியபின் மறந்து விடுவதுமாகவே உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முறையான வடிகாண்களோ, பாலங்களோ அமைக்கப்படாhமல் வெறுமனே அறைகுறையாக இவை செயற்படுத்தப் பட்டுள்ளதால் நீரோட்டம் தடைப்பட்டு மக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஓவ்வொரு வருடத்தின் மாரிகாலத்திலும் மாணவர்களும், பிரயாணிகளும் பயணம் செய்ய முடியாமல் இரு பக்கமும் தவித்து நிற்கும் காட்சி உறங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளுக்கு இன்னமும் உணர்வைத்தரவில்லை.
இந்த மாவட்டத்தில் ஹக்கீமுக்கு என்பதினாயிரம் வாக்குகளும், அதாவுள்ளாவுக்கு முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளும் உள்ளன. இவற்றைக் காட்டி தமது பிழைப்பை நடத்தும் இவர்கள் மக்களின் அன்றாட பிழைப்பு பற்றி அக்கறை காட்டவேயில்லை. தேர்தல் காலத்தில் தவிர வேறு காலங்களில் மக்களை எட்டியும் பாhக்காத இத்தகைய தலைமைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களின் இத்தகைய நீண்ட காலப்பிரச்சினை பற்றி அக்கறை இருக்காது என்பது உண்மைதான்.
ஆனாலும் மக்களும் தேர்தல் வந்தால் இத்தகைய போலிகளுக்கு கூஜா தூக்குபவர்களாகவும் தமது பிரச்சினைகளை முற்றாக மறந்து விடுபவர்களாகவும் இருப்பதுதான் மிகப்பெரும் பலவீனமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter