
-மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பங்கேற்பு-
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மேதினக் கூட்டம் இன்று (01) நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சங்கத்தின் தலைவரும், நிந்தவூர் பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவருமான வை.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கலாநிதி.எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சிறி லங்கா தமிழ் மீடியா அலாயன்ஸ் உதவித் தலைவர் எஸ்.பேரின்பராசா, முன்னாள் அதிபர்களான எம்.எம்.றகீம், வீ.ஜெகநாதன், நிந்தவூர் பிரதேச சபைச் செயலாளர் எம்.ஏ.ஜஃபர், சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.இஸ்மாயில், சங்கத்தின் செயலாளர் கே.நடராஜா, ஊடகவியலாளர் ஏ.புஹாது, கிராம சேவகர்கள், சமூர்தித் உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், பாட்டாளி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
'; இலங்கையில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எதிர்காலத்தில் ஒரு தாய் மக்களாக வாழக்கூடிய நிலைமையை உருவாக்குவதோடு, எல்லா இனத்தவரையும் சமமாக மதித்து நடக்கக் கூடிய சூழலைப் பேணுவதற்கு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்முமென்று ' இம்மேதினக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக