அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 30 ஜனவரி, 2013

ஒலுவில் அல்-ஜாயிஸாவுக்கு ஜெமீல் MPC ஒரு லட்சம் ரூபா ஒதுக்கீடு!



Jayisa-Jameel (1)

ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தனது 2012 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட நிதியில் ஒரு லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்து பேன்ட் வாத்தியக் கருவிகளை கொள்வனவு செய்து வழங்கியுள்ளார்.
இவற்றைக் கையளிக்கும் வைபவமும் மகளிர் பேன்ட் வாத்தியக் குழு அங்குரார்ப்பண நிகழ்வும் அண்மையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
Jayisa-Jameel (3)Jayisa-Jameel (2)Jayisa-Jameel (4)

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடை நீதிமன்றினால் ரத்து; தாராளமாக திரையிடலாம் என அனுமதி!


Wisp

தமிழக அரசு விதித்த தடையை நீக்கி விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு சற்று நேரத்திற்கு முன்னர் நீதிபதி வெங்கட்ராமன் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்தார். இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வந்தார்.
இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிலையில இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன்.
இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார். மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும்.
இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, சென்சார் போர்டு தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.
ஆனால் தீர்ப்பு 10 மணிக்குத்தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதியிடமிருந்து பின்னர் அறிவிப்பு வந்தது. இதனால் தீர்ப்பை அறியக் காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஏன் இத்தனை தாமதம் என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில் ஒரு வழியாக பத்து மணிக்கு தீர்ப்பு வெளியானது.
அதன்படி விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 24ம் தேதி தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையிடலாம் என்று நீதிபதி அறிவித்தார். மேலும் தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். கோர்ட் வளாகம் தவிர கோர்ட்டுக்கு வெளியேயயும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் கோர்ட்டுக்குள் குழுமியிருந்த வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
உயர்நீதிமன்றத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 144 தடை உத்தரவுக்கும் தடை அதேபோல பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவுக்கும் தடை விதித்து நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.
விஸ்வரூரபம் படத்தின் காட்சி அமைப்புகளுக்கான ஆதார அடிப்படையில்தான் சான்றிதழ் கொடுத்தோம். படத்தில் 14 காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே சான்று அளிக்கப்பட்டது என்று மத்திய தணிக்கை வாரியம் விளக்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விஸ்வரூபம் தடை நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்திய தணிக்கை வாரியமும் தனது தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், மொத்தம் 14 காட்சிகளை படத்திலிருந்து நீக்க உத்தரவிட்டோம். அதன்படி நீக்கப்பட்டது.
மேலும், சர்ச்சைக்குரிய 1.8 நிமிட நேர காட்சி ஒன்றும் படத்திலிருந்து நீக்கப்பட்டது. காட்சி அமைப்புகளுக்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் படத்திற்கான சான்றிதழை அளித்தோம். முற்றிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டே சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
@தட்ஸ்தமிழ்

திங்கள், 21 ஜனவரி, 2013

பாதாள உலக குழுக்களை கூண்டோடு ஒழிக்க விசேட திட்டம்!


Gota

பாதாள உலக குழுக்களை முற்றாக ஒழிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுபதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் எனவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதாள உலக குழு தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் தகவல்களை வழங்கினால், நாட்டுக்கு கேடாக இருக்கும் பாதாள உலக குழுக்களை அடக்குவது சிரமமான காரியமாக இருக்காது. எனினும் நாட்டில் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்களை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இது குறித்து தினமும் காவற்துறை நிலையங்களுக்கு தெளிவூப்படுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை பாதாள உலக குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்து கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும், அரசியல்வாதிகள் அல்லது வேறு தரப்பினர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், அவர்களுக்கு எதிராகவூம் தகுதி தராதரமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பாதாளக் குழுக்கள் தடையாக இருப்பதாகவூம் அவர்களை நாட்டில் இருந்து முற்றுமுழுதாக பாதாளக்குழுவினை இல்லாது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கற்பழிக்கப்பட்டு பெற்றோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட இளம் பெண்!


Murder

தமிழகத்தின், ஈரோடு மாவட்டம் சிவகிரி அரச மருத்துவமனை அருகில் உள்ள ஒரு காலி இடத்தில் ஒரு இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
அப்பெண்ணுக்கு வயது 20க்குள் இருக்கும் என்று தெரிகிறது. கல்லூரி மாணவியாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இன்று (21,01,2013) அதிகாலை 2 அல்லது 3 மணி அளவில் இங்கு கொண்டு வந்து எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ நடந்த பகுதி கிராமப்புரம் என்பதால் மக்கள் மத்தியில் ஒரு பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. பொன்னி பார்வையிட்டார், இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

நான் கொலைகாரன் இல்லை. என்னை நம்புங்கள்!


MS

களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலை சம்பவத்துடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அது தனிப்பட்ட காரணத்திற்காக செய்யப்பட்ட கொலை என நான் நம்புகின்றேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
“களனி தொகுதி அமைப்பாளர் பதவியை மீண்டும் ஏற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரினால் நான் தயாராகவே உள்ளேன்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓர் ஒழுக்கமிக்க கட்சியாகும். எனக்கு களனித் தொகுதியில் 25 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நான் களனி மக்களுக்கு செய்த சேவைகளை நன்கு அறிவர். இதனால் என்னால் களனி மக்களை மறக்க முடியாது.
நான் நீதி நியாயத்திற்காக போராடுபவன். நான் கொலைகாரன் இல்லை. என்னை நம்புங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 17 ஜனவரி, 2013

நிந்தவூர் வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்; முதலமைச்சர் உறுதி!







-ஐ.எம்.பாயிஸ்-
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை, தேசிய உற்பத்தித் திறன் (2010-2011) விருது பெற்றதை முன்னிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15) பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உபதலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.நசீர் அஹ்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகவும் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம், ஹசன் அலி, மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம் ஏ.எம்.தாஹிர், உப தவிசாளர் எம் எம் எம் அன்சார், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ரிபா உம்மாஹ் ஜலீல், கல்முனை பிராந்திய சுகதார சேவைப் பணிப்பாளர் எம் எஸ்.இப்ராலெப்பை மற்றும் சுகாதாரத்துறை உயர் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய உற்பத்தி திறன் போட்டியில் இவ்வைத்தியசாலை விருது பெறுவதற்கு தலைமை தாங்கி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.மாஹிர் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதற்கான வெற்றிக் கேடயத்தை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.மாஹிரிடம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் கையளித்தார்.
அதேவேளை இவ்வைத்தியசாலைக்கான இணையத்தளத்தையும் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது சுமார் 20 விசேட தேவையுடையோருக்கு சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பைசால் காஸிம் எம்.பி. முதலமைச்சருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்; இவ்வைத்தியசாலையை மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையினை விரைவில் நிறைவேற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
கடந்த வருடம் தேசிய ரீதியாக அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு இடையிலான தேசிய உற்பத்தி திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 123 வைத்தியசாலைகளுள் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை விருதுக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதன், 9 ஜனவரி, 2013

சகோதரி றிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு  அறிவித்தது.

இன்று புதன்கிழமை, 9 ஆம் திகதி, இலங்கை நேரப்டி 11.40 மணியளவில் சகோதரரி றிசானா மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


தான் பணிபுரிந்த வீட்டில் குழந்தைக்கு பால் கொடுத்த போது அக்குழந்தை மரணமடைந்ததை அடுத்து ரிசானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு சவுதி நீதமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ரிசானாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் இறுதியில் ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது


இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு மாத குழந்தையொன்றைக் கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபிய நேரப்படி இன்று முற்பகல் 11.40 அளவில் தண்டனை நிறைவேற்றப்பட்டமையை இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் 

அமைச்சர் மேர்வின் சில்வாதான் கொலைக்கார சூத்திரதாரி..! உடன் கைதுசெய்ய வலியுறுத்து..!!


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் அமைச்சர் மர்வின் சில்வாவிற்கு தொடர்பிருப்பதாக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

களனி பிரதேச சபையில் 08-01-2013 இடம்பெற்ற செய்தி சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் பிரசன்ன ரனவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அமைச்சர் மர்வின் சில்வாவின் அடியாட்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அமைச்சர் மர்வின் சில்வாவும் கைது செய்யப்பட வேண்டும் களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரனவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் லங்கா விஜித்தகுமார கருத்து வெளியிடுகையில், காவல்துறையினர் தமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதற்கு முன்னரும் பல தடவைகள் தமது முறைப்பாடுகளை காவல்துறையினர் கவனத்தில் கொண்டு செயற்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவல களனியில் வராகொட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக வைத்து கடந்த சனிக்கிழமை மாலை இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் களனி மற்றும் கிரிபத்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். (Sfm)


முஸ்லிம்கள் தமது அரசியல் தலைமைகளையிட்டு விழித்துக் கொள்ள வேண்டும்..!


(எஸ்.றிபான்)

2013.01.08 ஆம் திகதி (நேற்று) திவிநெகும சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 107 பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அசாங்கத்துடன் பங்காளிகளாக உள்ள சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

திவிநெகும சட்ட மூலத்திற்கு வாக்களித்துள்ளதன் மூலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது இரட்டை வேசத்தை மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளது.

திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள். இவ்வாக்களிப்பு விடயத்தில் கிழக்கு மாகாண சபையின் மு.காவின் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் முக்கிய பங்கு வகித்திருந்தார். இதன் போது அவர் பெரும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டார்.

இச்சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் உள்ள மு.காவின் உறுப்பினர்கள் கட்சியுடன் கலந்து பேசவில்லை என்று தெரிவிக்கபட்டு விசாரணைகளும் மேற் கொள்ளப்பட்டன. 

விசாரணைகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும், அவ்விசாரணை பற்றிய விபரம் இது வரை வெளியிடப்படவில்லை. இவ்விசாரணை ஒரு கண் துடைப்பு என்றும், மக்களின் விமர்சனங்களுக்கு தற்காலிகமானதொரு போர்வையாகவே மு.கா விசாரணை மேற் கொண்டு வருகின்றதென அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள். 

மேலும், பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலம் வாக்களிப்புக்கு வரும் போது மு.கா ஆதரவாக வாக்களிக்குமென்று நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இதே வேளை, மு.காவின் தலைவர் ரவூப்ஹக்கிம் கடந்த 2012.10.22ஆம் திகதி இரவு சம்மாந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் 'கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தது சேதாரமற்ற விட்டுக் கொடுப்பு. ஆனால், திவிநெகும சட்டத்திற்கான விட்டுக் கொடுப்பு சேதாரமான விட்டுக் கொடுப்பாகும். ஆனால், கட்சியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காவே ஆதரவாக வாக்களிக்பட்டுள்ளது.' என்று தெரிவித்து இருந்தார்.

கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தை கட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்று மு.கா தமது புளித்துப் போன காரணத்தை முன் வைத்தது. தற்போது திவிநெகும சட்ட மூலத்தில் மு.கா 14 திருத்தங்களை முன் வைத்ததாகவும், அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்ததாகவும் அதனால்தான் பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்ததாக மு.கா தெரிவித்துள்ளது.

திவிநெகும சட்ட மூலத்தில் 14 திருத்தங்களை மு.கா முன் வைத்தது உண்மையாயின் அதனை வெளிப்படுத்தல் வேண்டும். ஆனால், இப்பத்தி எழுதும் வரை மு.கா அந்த 14 திருத்தங்களையும் வெளியிடவில்லை.

2012.12.29ஆம் திகதி நடைபெறற் மு.காவின் 24வது பேராளர் மாநாட்டில் மாகாண சபை முறையையும், அதன் அதிகாரங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானம் எடுத்து விட்டு, அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது நாட்கள் கழிந்த நிலையில் மு.கா மாகாண சபையின் அதிகாரங்களில் பலவற்றை மத்திய அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளும் திவிநெகும சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தியன் மூலமாக மு.கா மீண்டுமொரு தடவை கொள்கைப் பிறழ்வு வேலையை கச்சிதமாக செய்துள்ளது. 

கிழக்கு மாகாண சபையில் மு.காவின் உறுப்பினர்கள் திவிநெகும சடட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னதாக மேல்மாகாண சபையில் உள்ள மு.காவின் உறுப்பினர்கள் திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த போது, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவி;ல்லை. இதன் மூலமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களையும், கட்சியின் ஆதரவாளர்களையும் ஏமாற்றுவதற்காகவே மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை விசாரணை செய்தது. பாராளுமன்றத்தில் திவிநெகுமவிற்கு ஆதரவாக வாக்களித்தள்ளதனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மீது மேற் கொண்ட விசாரணை ஒரு போலியாகவே இருக்க வேண்டுமென்று அக்கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மு.கா என்ன நடந்தாலும் அரசாங்கத்தை விட்டு விலகாது என்பது உண்மையாகும். ஆதலால், அரசாங்கம் கொண்டு வரும் எதற்கும் கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கவே செய்யும். தேர்தல் வரும் போது, காட்டமான முறையில் அரசாங்கத்தையும், பேரினவாதிகளையும் தாக்கிப் பேசி, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் கதைகளையும், இஸ்லாத்ததையும் பாதுகாத்துக் கொள்ளும் கருமவீரர்களாக தங்களை காட்டிக் கொண்டால் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பி;க்கையில்தான் மு.கா தாம் நினைத்தவாரெல்லாம் முடிவுகளை எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும் அனைத்தையும் கமிஷனுக்கு விலை பேசுகின்றவர்களாக மு.காவின் மக்கள் பிரதிநிதிகள் இருப்பதனால், அவர்கள் தங்களது கமிஷனை அதிகரித்துக் கொள்வதற்கு திவிநெகும சட்டத்திற்கு மட்டுமன்றி, பள்ளிவாசல்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முஸ்லிம் விரோத சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அதற்கும் வாக்களிப்பார்கள்.

பல்வேறு சர்ச்சைக்குரிய 18வது சீர்திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு. அதனை தமது வரலாற்றுத் துரோகமான முடிவு என்று மக்கள் மத்தியில் வெட்டமின்றி கருத்தக்களை முன் வைக்கும் மு.கா திவிநெகும சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை ஒன்றும் ஆச்சரியமான ஒன்றல்ல.

சிறுபான்மையினரிடையே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் அஸ்ரப்பின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் அதிக தடவைகள் கூறியுள்ள மு.கா சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று கூறுவதற்கும், அஸ்ரப்பின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் கூறுவதற்கும் தகுதியறற்தொரு கட்சியாக மு.கா இருக்கின்றது.

மாகாண சபைகளின் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஈற்றில் மாகாண சபை முறையும் இல்லாமல் போய்விடும். மாகாண சபை முறையை இல்லாமல் செய்வதற்கான காரியங்களில் ஒன்றுதான் திவிநெகும சட்ட மூலம் என்பதனை மு.காவினால் பரிந்து கொள்ள முடியாது இருப்பது அக்கட்சியின் அரசியல் சூனியத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். அதே வேளை, அக்கட்சியின் கொள்கைளில் ஏறபட்டுள்ள மாற்றங்களையும் தெளிவுபடுத்துவதாக இருக்கின்றது.

திவிநெகும சட்ட மூலத்திற்கு மு.கா எதிராக வாக்களித்தாலும் குறிப்பிட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்படும். ஆதலால், மு.காவின் எதிர்ப்பு பிரயோசனமற்றதாக மாறிவிடுமென்ற கருத்தையும் மு.காவினர் முன் வைத்துள்ளனர். இக்கருத்;து சிறு பிள்ளைத்தனமான ஒன்றாகும். மு.கா எதிர் கட்சியில் இருந்த போது வரவு-செலவு திட்டங்களுக்கு எதிர்த்து வாக்களித்துள்ளது. ஆயினும் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாங்கள் எதிர்த்து வாக்களித்தாலும், வரவு-செலவு திட்டத்தை தோற்கடிக்க முடியாதென்று தெரிந்து இருந்தும் வாக்களித்துள்ள, நிலையில் திவிநெகும சட்ட மூலத்திற்கு மு.கா எதிராக வாக்களித்தாலும் குறிப்பிட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பதானது, மக்களை பிழையாக தங்களின் இஸ்டத்திற்கு அமைய வழி நடத்தும் செயலாகும்.

குறிப்பிட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்படுகின்றதா அல்லது நிறைவேற்றப்படாமல் போகின்றதா என்பது முக்கியமல்ல. நாம் என்ன கொள்கையை முன் வைத்தோம் என்பதுதான் முக்கியமாகும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கப்படும் தீர்வு மாகாண சபை முறையை மேலும், விரிவாக்குவதாக இருக்க வேண்டுமென்று தெரிவிக்கபட்டு வரும் கருத்தக்களுடன் உடன்படான கருத்துக்களை முன் வைத்த மு.கா மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கச் செய்யும் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையானது, தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் மு.காவிற்கு அக்கரையில்லை என்பதாக இருக்கின்றது. 

இதே வேளை, தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸூம் திவிநெகும சட்ட மூலத்திற்கு எதிர் பார்த்தபடி ஆதரவாக வாக்களித்துள்ளன.

அரசாங்கத்துடன் இணைந்து இருப்பதில் முஸ்லிம் கட்சிகளிடையே காணப்படும் போட்டி காரணமாகவே அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்ககைகளையும் முஸ்லிம் கட்சிகள் ஆதரித்துக் கொண்டிருக்கின்றன.

மு.கா, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை வைத்தே அரசியல் செய்து கொண்டிருக்னிறன. ஆனால், இக்கட்சிகள் தேர்தல் முடிந்ததும் முஸ்லிமகளை மறந்து ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தும் செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் இக்கட்சிகள் முஸ்லிம்களுக்குரிய எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் காணிகளும், மத உரிமைகளும் பிறவும் பறி போய்க் கொண்டிருப்பதனை கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்திருக்கின்றவைகளாகவே இருக்கின்றன. முஸ்லிம்கள் இழப்புக்களை சந்தித்துக் கொண்ட ஒவ்வொரு தடவையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளும், பைகளும் உயர்வடைந்து கொண்டே வந்துள்ளன.

ஏமாறுகின்றவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆதலால், முஸ்லிம்கள் தமது அரசியல் தலைமைகளையிட்டு விழித்துக் கொள்ள வேண்டும். விழித்துக் கொள்ளாத சமூகம், ஒரு போதும் வெளிச்சத்தை கண்டு கொள்ளாது.

Jaffna Muslim

கிழக்கு மாகாண மு.கா. உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணை தொடருகிறது - ஹசன் அலி


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்காவுக்கு எதிரான குற்றவியல் பிரேணை குறித்து முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பி.யுமான ஹசன் அலி, கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை தொடருவதாகவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து எமது இணையத்திற்கு கருத்து தெரிவித்த ஹசன் அலி மேலும் குறிப்பிடுகையில்,

திவிநெகுமே சட்ட கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவாக வாக்களித்தமை பற்றிய விசாரணை தொடருகிறது. ஒழுக்காற்று விசாரணையும் இன்னும் நிறைவு பெறவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நான்தான். ஒரு கட்சிக்கு ஒரு செயலாளர்தான் உண்டு. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் அல்ல.

எந்த அடிப்படையில் ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெற்வில்லையென்றும், அவ்விடயம் முற்றுப்பெற்றுவிட்டது என்றும் கூறினார் என்பது எனக்கு தெரியாது.

பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் திவிநெகுமேக்கு ஆதரவாக வாக்களித்தமை முஸ்லிம் காங்கிரஸின் ஒட்டுமொத்த தீர்மானம். ஆனால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் திவிநெகுமேக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

இருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் என்றவகையில் நான் கூறுகிறேன். கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணை தொடருகிறது. நான்தான் அதற்குரிய கடிதங்களை கட்சித் தலைவரின் அனுமதியுடன் அனுப்பிவைத்தேன். அவர்களிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளது என்றார்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கே திவிநெகும வழி வகுக்கும்!


Sri Ranga

மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும் சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்கும் திவிநெகும வழி வகுக்கும் என்று பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா தெரிவித்தார்.
இதன் காரணமாகவே திவிநெகும சட்ட வாக்கெடுப்பில் தான் எதிர்த்து வாக்களித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும், சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்குமான சட்டமாக திவிநெகுமவை கருதியதாலேயே நான் எதிர்த்து வாக்களித்தேன்.
திவிநெகும சட்ட மூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது என்பதால் அதனை சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எதிர்த்து முறியடித்திருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இடமாற்ற சபையின் அனுமதியின்றி கிழக்கில் ஆசிரியர் இடமாற்றங்கள் நடக்காது; மாகாண கல்வி பணிப்பாளர் நிசாம் உறுதி!


26

இடமாற்ற சபையின் அனுமதியின்றி கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் உறுதியளித்துள்ளார்.
ஆசிரியர் தொழிற் சங்கங்களிற்கும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவை செய்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவது பற்றி முன்னரே குறித்த வலயக் கல்வி பணிப்பாளர் ஊடாக சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் குறித்த ஆசிரியர் தன்னை தயார்படுத்திக் கொள்வதோடு தனக்கு பொருத்தமான பாடசாலைகளுக்கு அவர் விண்ணப்பம் செய்யவும் வசதியாக இருக்கும்’ என தொழிற் சங்கங்கள் தெரிவித்தன.
இதனை மாகாண கல்வி பணிப்பாளர் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம ஆகிவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மல்வத்து ஓயா பள்ளிவாசல் உடைப்பு; பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தேசிய முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

Metro_Breaking News1

அனுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசல் இன்று அதிகாலை சிங்கள கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அப்பள்ளிவாசலின் கூரைப் பகுதி உடைத்து அகற்றப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை மல்வத்து ஓயா பள்ளிவாசலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தேசிய முஸ்லிம் கவுன்சில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்திருப்பதாக அதன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த பள்ளிவாசலை அகற்றுமாறு கோரியும் அப்பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும் பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளிவாசல் கடந்த நவம்பர் மாதம் எரிக்கப்பட்டு சேதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

இன்று ஒரு தகவல்(பக்கம்)

மருந்து வாங்கும் போது நாம் கவனிக்கப்பட வேண்டியவை !!

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.
மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

இது பற்றிய சந்தேகம் உள்ள சென்னைவாசிகள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம். மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதய நோயை தடுக்க தக்காளி மாத்திரை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு காரணமாக சீரான ரத்த ஓட்டம் இன்மையால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க மருந்து மாத்திரைகள், உணவு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இருதய நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தக்காளி மாத்திரைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிற தோலில் 'லிகோபின்' என்ற ரசாயன பொருள் உள்ளது.

அதன்மூலம் தக்காளி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை தமணி ரத்தக் குழாயில் படியும் கொழுப்பை அகற்றி அவற்றை விரிவடைய செய்கிறது.

இதன்மூலம் ரத்த ஓட்டம் சீராகி மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இந்த மாத்திரையை தினமும் சாப்பிட வேண்டும். இதன் மூலம் இருதய நோயாகளிகள் பாதிப்பின்றி வாழ முடியும். மற்றவர்களுக்கு இருதய நோய் ஏற்படாது. இருதய நோய்க்கு மட்டுமின்றி நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

அடைமழை காரணமாக நிந்தவூரில் பல வீதிகள் பாதிப்பு; சீரமைக்க பைசல் காசிம் M.P அவசர நடவடிக்கை!



1
-நிந்தவூர் செய்தியாளர் ஐ.எம்.பாயிஸ்-
அம்பாறை மாவட்டத்தல் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நிந்தவுரின் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக முக்கிய பாதைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் போக்குவரத்துக்களை மேற்கொள்கின்றனர்.
இதனை பிரதேச மக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது இன்று காலை அவர் உடன் அவ்விடங்களுக்கு விஜயம் செய்து வீதிகளின் அவல நிலைமைகளை நேரடியாக கண்டறிந்து அவற்றை சீரமைக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக மழை காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அலியான் சந்தி வீதி, அல்மஸ்லம் பாடசாலை வீதி, சர்ஜன் இர்சாத் வீதி போன்ற பாதைகளை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தனது சொந்த நிதியில் இருந்து கிரசர் மண் வரவழைக்கப்பட்டு நிந்தவூர் 8ம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூலம் அவரது கண்காணிப்பில் உடனடியாக செப்பனிடப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகளில் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் எம் எம் எம் அன்சார் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
3
2

கி.மா கல்விப்பணிப்பாளருடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரின் சந்திப்பு இன்று!


34

மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிஸாம் அவர்களுடன் இன்று 08.01.2013 (செவ்வாய்க்கிழமை)இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.
திருகோணமலை கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களப் பணிமனையில் நடைபெறவுள்ள இச் சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் அதிபர், ஆசிரியர்களின் இடமாற்றங்கள் புதிய நியமனங்கள், கல்வி வலயங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.
இச்சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி, கிழக்கு மாகாணச் செயலாளர் எஸ்.சசிதரன், திருகோணமலை மாவட்டச் செயலாளர் பா.தேவராஜா, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.அருணாசலம், திருகோணமலை வலயச் செயலாளர் க.யோகானந்தம், பட்டிருப்பு வலயச் செயலாளர் எஸ்.கமலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாளைய தினம் காலை.11.00 மணிக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் ஆசிரியர்களையும் சந்திக்கவுள்ளதால் இடர்ப்பாடுகள் உள்ள ஆசிரியர்களை உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் அங்கீகரிக்குமென்றால்; அழிவை தடுக்க முடியாது!


images

-faji-
அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் சுயனலத்திற்காக அங்கிகரிக்குமென்றால் சமூகத்தின் அழிவை தடுக்க முடியாது. கிழக்கு மாகாணத்தையும் அதன் மாவட்டத்தையும் வரையறுத்து அரசியல் நடத்துகின்றவர்கள் தேசிய ரீதியான முஸ்லிம்களின் குரலாக இருப்பது பற்றி தேவை அற்றவர்களாக சிந்திக்கின்றனர்.
தான் சார்ந்த சூழலை திருப்தி படுத்துவதில் முனைப்பு காட்டு கின்றனர். கிழக்கு மாகான முஸ்லிம் அரசியவாதிகளின் இன்றைய போக்கு தூர நோக்கின் அடிப்படையில் பார்க்கின்ற போது கிழக்கு மாகாணத்தையும் நிருவாக நெருக்கடிகள் காவும் என்பது புலப்படுகிறது.
அரசியல் இருப்புக்காக எல்லைகள் அற்ற விட்டுக்கொடுப்புகள் இன்று இல்லாவிடினும் அடுத்த தலைமுறைக்கு பாரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குறைந்த பட்சம் தேசிய அரசியலில் இருக்கின்ற மு. காங்கிரஸ் தனது இஸ்திரதன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இதற்கான பயணத்தின் தடைகளை வெளிப்படையாக பேச தயங்குவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
மு.கா விற்குள் இருக்கும் நீறு பூத்த நெருப்பு வெளியில் வரவேண்டும். உண்மை நிலவரம் அடிமட்ட போராளிகள் வரை கண்டறியப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக்கட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். கட்சியை காட்டிகொடுக்க நினைப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டால் கட்சி முனேற்றம் அடையும் என்ற நம்பிக்கை தலைமத்துவத்துக்கும் போராளிகளுக்கும் வரவேண்டும்.
சிலரின் கட்சியியின் முக்கிய தொடர் வகிப்பு பதவி மாற்றம் தேவையா? இல்லையா? என்பது பற்றியும்மு.கா போராளிகள் சிந்திக்க வேண்டும்.
தலைவர்கள் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களால் விட்டுசெல்லப்படும் விடயங்கள் மரணிப்பது இல்லை.
அது சமூகத்தின் மீது தாக்கத்தை உண்டுபண்ணும். எனவே தலைவர்களுக்கு ஆரோக்கியமான சிந்தனை அவசியம். தனி மனித பற்று என்ற புற்று நோயை தலைவர்களும் சுயநலம் என்கின்ற புற்று நோயை போராளிகளும் கொண்டிருந்தால் விளைவுகள் அழிவுகளாக இருக்கும்.
அரசியல் வாதிகளை திசை திருப்புவது எது? பொருளாதார ஆசையா ? இறைவனை மறந்த மரணபயமா?.
அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் சுயனலத்திற்காக அங்கீகரிக்குமென்றால் சமூகத்தின் அழிவை தடுக்க முடியாது.

புதன், 2 ஜனவரி, 2013

முஸ்லிம் சமூகம் சண்டைக்கு இழுக்கப்படுகிறது - அபாயகர கட்டம் என்கிறார் ரவூப் ஹக்கீம்




(இக்பால் அலி)

தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மத ரீதியிலான அபிப்பிராயங்கள் பிணக்குகள் எழுந்துள்ளன.  இதனுடைய உள்நோக்கமாக இருப்பது பொருளாதாரம் அதீத அச்சம், பொறாமை என்பனவாகும். இது எந்தக் கலவரத்தின் போதும் உள்நோக்கத்தின் பின்னணியாக வர்த்தகமே உரித்துடையதாக இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மாவனல்லை நயாவல ஹமீதியா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் நயாவலப் பிரதேசத்தில் கல்வித்துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், பல்கலைக்கழம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பள்ளியின் நிர்வாக சபைத் தலைவர் தாஹீர் ஹாஜியார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,

சட்டக் கல்லூரி நுழைவு சம்மந்தமாக எழுந்துள்ள பிரச்சினை சம்மந்தமாக ஆராய்ந்து பார்த்தால் அதுவும் அப்படியான நோக்கத்தைக் கொண்டதாகும்.  இன்று எல்லாமே வர்த்தக மயம். மாணவர்களை பரீட்சைக்குத் தயார் படுத்துதல் என்பது கூட வர்த்தக மயமாய் உள்ளன. 

வேண்டும் என்றே இனவாத அடிப்படையில் வலிந்து முஸ்லிம் சமூகத்தைச் சண்டை இழுக்கின்றனர். ஒரு அபாயகரமான கால கட்டம் இருந்து கொண்டிருக்கிறது. இதனை சரியாக மேலிடம் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும். ஹலால் விவகாரம் பாரிய பிரச்சினையாக எழுந்துள்ளன. சரியாக அத்தாட்சிப்படுத்துகின்ற விடயம் துரதிஷ்டவசமாக சர்ச்சைக்குரியதாக உள்ளன. இது குறித்து எவ்வளவோ விளக்கமளித்து அதனை விளங்கி ஏற்றுக் கொளவதாக இல்லை. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து முஸ்லிம்களுடைய வியாபார நிலையங்களுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளனர். 

என்னுடைய பார்வையில் இதற்கு வெளிநாட்டுச் சக்திகள் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனக்கருதுகிறேன். இந்த நாட்டில் இனக் கலவரத்தை ஒரு யுத்தத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு ரீதியாக விளைவுகளை ஏற்படுத்த திட்டமிட்ட அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது குறித்து சட்டக் கல்வி தொடர்பாகவும் எதிர்வரும் எட்டாம் திகதி உரையாற்றவுள்ளேன் இதனை தர்க்க ரீதியாக அல்லாமல் விவாத ரீதியாக அல்லாமல் அறிவு சார் ரீதியாகத்தான் இதனை அனுக வேண்டியுள்ளது.

மானவல்லை நகர் இது போன்ற சவால்களுக்கு முகம் கொடுக்கப்பட்டு மீண்டும் கட்டிஎழுப்பப்பட்ட நகர். கல்வித்தறையில் மீளவும் உரிய பௌதீக வளங்கள் இல்லாமல் மீளவும் சிறப்புப் பெற்று வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் சைபுதீன் மாவனவ்லை பிரதேச சபை உறுப்பினர் முஹமட் கப்பார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








site counter