
இதுகுறித்து எமது இணையத்திற்கு கருத்து தெரிவித்த ஹசன் அலி மேலும் குறிப்பிடுகையில்,
திவிநெகுமே சட்ட கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவாக வாக்களித்தமை பற்றிய விசாரணை தொடருகிறது. ஒழுக்காற்று விசாரணையும் இன்னும் நிறைவு பெறவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நான்தான். ஒரு கட்சிக்கு ஒரு செயலாளர்தான் உண்டு. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் அல்ல.
எந்த அடிப்படையில் ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெற்வில்லையென்றும், அவ்விடயம் முற்றுப்பெற்றுவிட்டது என்றும் கூறினார் என்பது எனக்கு தெரியாது.
பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் திவிநெகுமேக்கு ஆதரவாக வாக்களித்தமை முஸ்லிம் காங்கிரஸின் ஒட்டுமொத்த தீர்மானம். ஆனால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் திவிநெகுமேக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.
இருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் என்றவகையில் நான் கூறுகிறேன். கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணை தொடருகிறது. நான்தான் அதற்குரிய கடிதங்களை கட்சித் தலைவரின் அனுமதியுடன் அனுப்பிவைத்தேன். அவர்களிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக