அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 டிசம்பர், 2012

பாபரி மஸ்ஜித்:துயர நிகழ்விற்கு 20 ஆண்டுகள் நிறைவு


babri-masjid-demolition
இன்று பாபரி தினம். வரலாறு இருண்டுபோன கறுப்பு டிசம்பரின் இருபதாம் ஆண்டு நிறைவு. குழி தோண்டி புதைக்கப்பட்ட மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களுக்கு கனலும் எதிர்ப்புகள் மூலம் எங்களது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் மதவெறிப்பிடித்த பயங்கரவாத கூட்டம் பாபரி மஸ்ஜிதை இடித்து தள்ளியது. அந்த புனித இறை இல்லத்தின் குவி மாடங்களில் காவி கயவர்களின் கும்பல் காலால் மிதித்த பொழுது இந்தியாவின் ஆன்மாவில் பயம் மற்றும் துவேசத்தின் வகுப்புவாத நெருப்பு பற்றி எரிந்தது. ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் அக்னி குண்டத்தில் ஒரு சமுதாயம்
உயிரோடு வீசப்பட்டது.
பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து நிகழ்ந்த வகுப்பு கலவரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2500க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிர்கள் பலி வாங்கப்பட்டன.
1528-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பேரரசர் பாபரி உத்தரவின் பேரில் அவரது ஆளுநர் மீர்பாஹி பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். 1936-ஆம் ஆண்டு சன்னி சென்ட்ரல் வக்ஃப் போர்டின் கீழ் மஸ்ஜித் பதிவுச் செய்யப்பட்டது. 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி இரவு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதுக்குள் அத்துமீறி நுழைந்து மிஹ்ராபில் ராமனின் சிலையை வைத்ததைத் தொடர்ந்து இரத்தக்களரி மிகுந்த வரலாறு துவங்கியது.
1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி சோமநாத்தில் இருந்து அயோத்தியை நோக்கி அத்வானி நடத்திய ரதயாத்திரை ரத்த யாத்திரையாக மாறியது. யாருடைய உதவிகளும் கிடைக்காத அப்பாவி முஸ்லிம்களின் நெஞ்சை பிளந்துகொண்டு அத்வானியின் ரதம் உருண்டது.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி ஏற்கனவே தீட்டிய சதித்திட்டத்தின் அடிப்படையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பாபரி மஸ்ஜிதை தகர்த்தனர். கரசேவகர்கள் என்ற காவி கபோதிகளின் கும்பல் மஸ்ஜிதை இடித்து தள்ளும்போது தடுக்க முனையாமல் மாநில போலீசும், மத்திய ராணுவ படையினரும் பார்வையாளர்களாக நின்றனர். பிரதமர் நரசிம்மராவ் மெளன விரதம் மேற்கொண்டார். சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து 1992 டிசம்பர் ஏழாம் நாள், பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் என்று நரசிம்மராவ் தேசத்திற்கு வாக்குறுதியளித்தார். இருபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதுவரை மஸ்ஜித் கட்டப்படவில்லை.
பாபரி மஸ்ஜித் நிலைப் பெற்றிருந்த இடத்தின் உரிமையியல் வழக்கில் பல தசாப்தங்கள் கழிந்த பிறகும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. 2010 செப்டம்பர் 30-ஆம் தேதி அலகபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அளித்த விசித்திரமான தீர்ப்பு 3 தரப்பினருக்கு மஸ்ஜித் இருந்த இடத்தை பாகப் பிரிவினைச்செய்தது. அதனை எதிர்த்து அளிக்கப்பட்ட மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
(தூதுஒன்லைன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter