அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 டிசம்பர், 2012

சவூதி அரேபியாவை விமர்சிக்கலாம், புனிதத்துவமிக்க ஷரீஆ சட்டத்தை விமர்சிக்கமுடியாது


பாராளுமன்றத்தில் ஷரீஆ சட்டம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்த கருத்துக்களானது ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கள் அல்லவென அக்கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசீம் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, 5 ஆம் திகதி உரையாற்றியுள்ள அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

ஷரீஆ சட்டம் தொடர்பிலன் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்த கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஷரீஆ சட்டம் புனிதத்துவம் மிக்கது. அதனை விமர்சிக்கமுடியாது. அச்சட்டம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்த கருத்துக்கள் அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. சவூதி அரேபியாவை விமர்சிக்கலாம், ஆனால் ஷரீஆ சட்டத்தை விமர்சிக்கமுடியாது எனவம் கபீர் ஹாசிம் எம்.பி. பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter