அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 டிசம்பர், 2012

பிலிப்பைன்ஸில் சூறாவளி கோரத் தாண்டவம்; 280 பேர் பலி; லட்சக் கணக்கானோர் பாதிப்பு!



பிலிப்பைன்ஸில் வீசுகின்ற கடுமையான சூறாவளியால் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
‘போபா’ எனப் பெயரிடப்பட்ட இந்த சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியான மின்டானோ பகுதியை தாக்கியபோது, கொம்பொஸ்ரலா பள்ளத்தாக்கு மாகாணத்தில் மாத்திரம் குறைந்தது 156 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் அந்தப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளனர். ஆயினும் தனியான இடங்களில் வாழ்கின்ற சமுதாயத்தினரை எட்டுவதில் கஷ்டங்கள் உள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த சூறாவளி தென் சீனாவின் கடலுக்கு வியாழக்கிழமை நகர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter