அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 டிசம்பர், 2012

அமைச்சர் டக்ளஸின் துணிச்சல்; 13ஆம் திருத்தத்திற்கு ஆதரவான எம்.பி.க்களை அணி திரட்டுகிறார்!


13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றக் குழு அறையில் இடம்பெறவுள்ளது.
ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மிகவும் துணிச்சலுடன் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் ஆளும் மற்றும் எதிரணி எம்.பி.க்கள் பலர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், முஸ்லிம் எம்.பி.க்களுக்குப் புறம்பாக இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள எம்.பி.க்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும் என்பதற்கான ஆதரவை வெளிப்படுத்துவர் என்று அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter