அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 டிசம்பர், 2012

கல்முனையில் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு


கல்முனை மின்பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களிலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் என கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் M.R.பர்ஹான் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை காலை 8 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாட்களுக்கு மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார்.
அம்பாறை உப மின் நிலைய கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட கல்முனை, மருதமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, சவளக்கடை, வளத்தாப்பிட்டி, நிந்தவூர், காரைத்தீவு, சாய்ந்தமருது, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில், பாணம் ஆகிய பிரதேசங்களிலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின்விநியோகம் தடைப்படும் என அக்கரைப்பற்று பிராந்திய மின் பொறியியலாளர் நூறுல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்த மின்வெட்டு நாளை காலை 8 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து வரும் அதி வலு கொண்ட மின் மார்க்கங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகளே இந்த மின் விநியோகத் தடைக்கான காரணம் என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter