அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 29 நவம்பர், 2012

1300 கி.மீ. தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்தது




MORE VIDEOS
இஸ்லாமாபாத் : அணுகுண்டை தாங்கி சென்று 1,300 கி.மீ. இலக்கை தாக்கும் சக்தி படைத்த புதிய ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று சோதனை செய்தது. பயிற்சிக்காக ஏவுகணையை சோதனை செய்ததாகவும், சோதனை வெற்றி என்றும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது. காவ்ரி என்று அழைக்கப்படும் ஹாட்ப்,5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் சோதனை செய்தது.

இது இந்தியாவின் உட்பகுதியை தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக ஏவுகணை சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், எங்கிருந்து சோதனை செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

முஹம்மது நபி அவமதிப்பு திரைப்படம் - எகிப்தில் 7 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு


நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து, படம் தயாரித்த ஏழு பேருக்கு, எகிப்து கோர்ட், மரண தண்டனை அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின், நியூயார்க் நகர இரட்டைக் கோபுர தகர்ப்பு நினைவு தினம், செப்., 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை, கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள, முஸ்லிம்கள் இதற்கு கண்டனம் செய்தனர். எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக, பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார். 

இந்த படத்தை தயாரித்த, எகிப்து நாட்டைச் சேர்ந்த, நகோலா பாஸ்லி உள்ளிட்ட ஏழு கிறிஸ்துவர்கள், தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்த சர்ச்சைக்குரிய படம் தயாரித்தவர்கள் மீதான வழக்கில், கெய்ரோ கிரிமினல் கோர்ட், நேற்று 28-11-2012 தீர்ப்பு கூறியது. மத துவேஷம் மற்றும் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, ஏழு பேருக்கு, மரண தண்டனை அளிப்பதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பலஸ்தீனர்களின் போராட்டத்தில் இலங்கை கைகோர்த்து நிற்கும் - மஹிந்த அறிவிப்பு




பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் 29-11-2012 இன்றாகும். இதனையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

பலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை, இறைமை என்பன இன்னமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்களது நிலத்தில் அதிகமான பகுதி அவர்களுக்கு இல்லாதுபோயுள்ளது என்பதனையும் சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டுவதற்கு பலஸ்தீன ஒருமைப்பாட்டுதினம் முக்கியத்துவம் பெறுகின்றது.

பலஸ்தீன மக்கள் நியாயத்துவம் மற்றும் பிறர் உடமையாக்க முடியாத தமது உரிமைகள் என்பவற்றை அடைந்துகொள்வதற்காக பலதசாப்த காலமாக மேற்கொண்டுவரும் போராட்டத்தில் இலங்கை மக்களும் அவர்களுடன் கைகோர்த்து நிற்பதுடன், எதிர்காலத்திலும் அவ்வாறே அமையும். 

இஸ்ரேலுடன் காணப்படுகின்ற இறைமைமிக்க பலஸ்தீன அரசு ஒன்றினை உருவாக்கும் இறுதிக் குறிக்கோளுடன் சமாதானத்திற்கான சகல வழிகளையும் தேடிப்பார்த்தல் வேண்டும். அதனால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு முயற்சித்தல் வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்கும் சமாதானம் கிட்டும்.

பலஸ்தீன மக்களின் அரசியல் ஐக்கியத்துவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்பன ஐக்கிய நாடுகளின் முன்மொழிவின் மீது இரு நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கான தீர்வினை வெற்றிகொள்ள காரணமாக அமைவதுடன் இலங்கையானது இந்நிலைக்கு தமது மனப்பூர்வமான ஒத்துழைப்பினை வழங்கும். கரடுமுரடான அரசியல் மற்றும் பொருளாதார பாதைக்கு மத்தியிலும் கூட தாபனங்களை கட்டியெழுப்புவதில் பலஸ்தீன அதிகாரசபை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

பலஸ்தீன கனவு நனவாகுமா..? உலகெங்கும் பரபரப்பு - இன்று மாலை முடிவு தெரியவரும்..!




(tn) பலஸ்தீனம் ஐ. நா. வின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று  29-11-2012 சமர்ப்பிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மாலை ஐ. நா. பொதுச் சபையில் இந்த விண்ணப்பத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐ. நா.  உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதன் மூலம் இஸ்ரேலுடன் இரு நாட்டு தீர்வுத்திட்டத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முக்கிய படியாக அமையும் என பலஸ்தீன நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேல், அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நியூயோர்க்கில் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ. நா. வின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதற்கு 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பலம்வாய்ந்த பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் தேவைப்படாது. இதற்கு 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச் சபையின் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் மாத்திரமே போதுமானது. ஆனால் பொதுச் சபையில் இருக்கும் மூன்றில் இரண்டு நாடுகள், அதாவது 132 நாடுகள் பலஸ்தீன் தேசத்தை அங்கீகரித்துள்ளன. எனவே இன்றைய வாக்கெடுப்பில் பலஸ்தீனம் வெற்றிபெறுவது உறுதியானது.


பொதுச்சபையில் பலஸ்தீன விண்ணப்பத்தின் வாக்கெடுப்புக்கு முன்னர் இன்றைய தினம் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் 193 அங்கத்துவ நாடுகளின் முன்னிலையில் தமது உரையை நிகழ்த்தவுள்ளதாக ஐ. நா. வின் பலஸ்தீன தூதுக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 2011 செப்டெம்பரில் ஐ. நா. வின் முழு அங்கத்துவ நாட்டுக்காக பலஸ்தீனம் விண்ணப்பித்த போது அமெரிக்காவின் எதிர்ப்பால் அது தடைப்பட்டது. ஐ. நா. வின் முழு அங்கத்துவ நாடாவதற்கு அதன் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்தை பெறவேண்டும். 

எனினும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான அமெரிக்கா இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மீறி வந்தால் தாம் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விண்ணப்பத்தை ரத்துச் செய்வதாக அமெரிக்கா எச்சரித்தது. இந்த விடயத்தில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டே ஐ. நா.வை அணுகியிருக்க வேண்டும் என அமெரிக்கா அப்போது விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் பலஸ்தீனின் உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்திற்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பலஸ்தீனம் தனிநாடு குறித்து யூத தேசத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாறாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகி நின்று ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கக்கூடாது என அமெரிக்கா, இஸ்ரேல் விமர்சித்துள்ளன.

“இந்த செயற்பாடு பலஸ்தீன மக்கள் தனிநாட்டை பெறும் முயற்சியை நெருங்கச் செய்யும் என நாம் நினைக்கவில்லை” என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலான் கடந்த திங்கட்கிழமை வொஷிங்டனில் வைத்து ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். “இது தவறான முடிவு என நாம் நம்புகிறோம்” எனக் கூறிய அவர் “அதற்கு நாம் எதிராக செயற்படுவோம்” என வலியுறுத்தினார். இது தொடர்பில் வாக்களிக்கவுள்ள ஏனைய நாடுகளுக்கு தமது நிலைப்பாடு குறத்து அறிவுறுத்தவுள்ளதாக நுலான் மேலும் கூறினார்.

பிரான்ஸ் ஆதரவு

இதனிடையே பலஸ்தீனின் ஐ. நா. விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. பலஸ்தீனர்களின் தனிநாட்டு எதிர்பார்ப்புக்கு பிரான்ஸ் நீண்ட காலமாக ஆதரவு அளித்து வருகிறது. எனவே பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லவ்ரோவ் பபியஸ் அறிவித்தார்.

இது குறித்து பபியஸ் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழவையில் விளக்கம் அளிக்கும் போது, “பலஸ்தீன தனிநாட்டு பிரான்ஸ் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருவது உங்களுக்கு தெரியும். இதனால்தான் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பிரான்ஸின் பதில் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு நாம் ‘ஆம்’ என்றுதான் பதில் அளிப்போம்” என்றார்.

இதன்மூலம் ஐ நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான பிரான்ஸ் ஐரோப்பாவின் முதலாவது பிரதான நாடாக பலஸ்தீன விண்ணப்பத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதில் ஜெர்மனி எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதோடு பிரிட்டன் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. தவிர, போர்த்துக்கல், ஸ்பைன் பலஸ்தீனின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்துக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.

ஆனால் அவுஸ்திரேலியா இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த வாக்களிப்பில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ள அவுஸ்திரேலியா 27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை யான நாடுகள் ஆதரவாக வாக்களித்தால் அதற்கு தாமும் ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது. என்றாலும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியான் கில்லாட் பலஸ்தீனின் விண்ணப்பத்திற்கு எதிராக வாக்களிக்கவே திட்டமிட்டிருந்த தாகவும் தமது கட்சியின் அழுத்தத்தாலேயே வாக்களிப்பதைத் தவிர்க்க தீர்மானித்ததாகவும் தெரிய வருகிறது என அந்நாட்டின் ஏ.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்கா மற்றும் ஆதரவு நாடுகளின் வாக்குகள் இன்றியே பலஸ்தீனால் இந்த விண்ணப்பத்தின் மீது பொதுச் சபையில் வெற்றிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.சி.சி. செல்லும் வாய்ப்பு

பலஸ்தீனம் தற்போது ஐ.நா.வின் நிரந்தர பார்வையாளர் அந்தத்தைப் பெற்ற நாடாக உள்ளது. இந்த அந்தஸ்துக்கு சர்வதேச அமைப்புகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். இதன்கீழ் ஐ. நா. பொதுச்சபை கூட்டங்களில் பேசவும் செய்முறை தொடர்பான வாக்கெடுப்புகளை கொணரவும் கையொப்பமிடவும் உரிமை உள்ளது. எனினும் தனது தீர்மானங்களில் மற்றும் நிலையான கருத்துகளில் வாக்களிக்க பார்வையாளர் அந்தஸ்துள்ள நாட்டுக்கு உரிமை இல்லை. 

இந்நிலையில் உறுப்பினரல்லா பார்வையாளர்கள் ஐ. நா. பொதுச் சபை அரங்கில் உறுப்பினர் நாடுகளுக்கு அடுத்தும் பிற பார்வையாளர்களுக்கு முன்பும் அமர்த்தப்படுவர். உறுப்பினரல்லாத பார்வையாளராக அங்கத்துவம் பெறுவதன் மூலம் ஐ.நா. குறித்த நாட்டை ஒரு இறையாண்மை உள்ள தேசமாக ஏற்கும். இதன்மூலம் பொதுச் சபை விவாதங்களில் பங்கேற்க முடியும் என்பதோடு ஐ. நா. அமைப்புகளிலும் இணைய வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் (ஐ. சி. சி) இணைய வாய்ப்பு உள்ளது.

1967 ஆம் ஆண்டு எல்லையைக் கொண்ட மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய பகுதிகளைக் கொண்ட பலஸ்தீன தேசத்திற்கே ஐ. நா. உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்து கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பலஸ்தீன எல்லைகளான மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத யூத குடியேற்றங்களை அமைத்துள்ளது. இதற்கு எதிராக உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெறும் பலஸ்தீனத்துக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வரை செல்ல முடியும்.

சுவிட்சர்லாந்து கடந்த 2002 ஆம் ஆண்டுவரை ஐ. நா.வின் உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்து பெற்ற நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா, இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

எனினும் பலஸ்தீன முயற்சிக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் கடைசிவரை தனது இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பலஸ்தீனம் ஐ. நா. வின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க யுநெஸ்கோவுக்கான தனது நிதியை நிறுத்திக்கொண்டது. இதனால் யுனெஸ்கோ தனது பட்ஜட்டில் 22 வீத நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டது.

அதேபோன்று யுனெஸ்கோவில் இணைந்த பலஸ்தீனத்திற்கு எதிராகவும் அமெரிக்கா நிதி உதவியை இடைநிறுத்தியது. அதேபோன்று பலஸ்தீன் தனி நாட்டு கோரிக்கையை முன்னெடுத்தால் அதன் மீது பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க கொங்கிரஸ் சபை எச்சரித்திருந்தது. மறுபுறத்தில் 1992 இல் செய்து கொள்ளப்பட்ட ஒஸ்லோ அமைதி உடன்பாட்டை மீறியே பலஸ்தீனம் ஐ. நா. வை அணுகுவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இந்த மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இதில் இஸ்ரேலுடனான பிரச்சினையை தீர்க்குமாறு பலஸ்தீன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சென்றால் அதனைத் தடுக்க இஸ்ரேல் கடும் நடவடிக்கையை எடுக்கும் எனவும் அவர் எச்சரித்தார். எனினும் அது எவ்வாறான தடைகள் என்பது குறித்து அவர் விளக்கவில்லை. குறிப்பாக பலஸ்தீன நிர்வாகத்தை கொண்டு செல்ல இஸ்ரேல் வழங்கும் வரி வருமான பரிமாற்றத்தை நிறுத்திவிடுவது, மேற்குக்கரையை முடக்குவது என இஸ்ரேல் கடும் தடைகளை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் இந்த விண்ணப்பத்தின் மூலம் அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட தாம் முற்படவில்லை என பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இந்த விண்ணப்பத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்த அடுத்த தினத்திலேயே இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேல்- பலஸ்தீனத்திற்கு இடையில் விட்டு விட்டு கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடரும் அமைதி பேச்சுவார்த்தை மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் அதிகரிக்கும் யூதக் குடியேற்றங்கள் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மஹ்மூத் அப்பாஸின் ஐ. நா. விண்ணப்பத்திற்கு காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷாலும் ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை மு.கா ஏற்றுக்கொள்ளளாது! மேலும் வலுவூட்டப்பட வேண்டும்!



-அமைச்சரின் ஊடகச் செயலாளர்-
இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றோர் கூறிவருவதைப் போல, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள மாட்டாது எனவும், அவர்களது நிலைப்பாட்டிற்கு எதிரான அபிப்பிராயத்தை கொண்டுள்ள அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் கைகோர்த்து வருவதாகவும் அக் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
காலியில், இஸ்லாமிய புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட முஹர்ரம் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற அலிப் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். காலி, தலாபிடிய கோங்கஹ வீதியில் இந் நிகழ்வு இடம்பெற்றது. மத்ரஸாவின் அதிபர் மௌலவி சாகிர் ஹூசைன் இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
முன்னதாக காலி மல்ஹருஸூல்ஹியா தேசிய பாடசாலை பரிசளிப்பு விழாவிலும் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாக பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், காலியில் 850 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமையவுள்ள இடத்தையும் நீதியமைச்சர் ஹக்கீம், பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார மற்றும் நீதியமைச்சின் பொறியியலாளர் ஆகியோரும் சென்று பார்வையிட்டார்.
காலியில் நடந்த இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது;
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச ஆகியோர் கூறிவருவதைப் போல அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதற்கு நாங்கள் கையுயர்த்தப் போவதில்லை.
அதிகாரம் பண்முகப்படுத்தப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கத்திற்கும், பகிர்வுக்கும் ஊடாக கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம் மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய செயல்பாடு இந் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு பயனளிககக் கூடியவாறு 13 ஆவது திருத்தத்திலே உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அது இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற காரணத்தினால் வேறு விமர்சனப் பார்வை இருந்து வருகின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்திற்கு உள்ளும் புறமும், 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. அதற்கான போராட்டத்தில் நாம் அரச தரப்பிலும் கட்சித் தலைவர்கள் சிலருடன் ஓர் உடன்பாட்டுடன் உள்ளோம்.
13 ஆவதுதிருத்தம் மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் சிலரிடம் காணப்படுகின்றது.
சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றவர்கள் மட்டும் தான் இந்த அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் அல்லர். அவர்களின் போக்கிற்கு மாற்றமான நிலைப்பாட்டை உடைய என்னைப் போன்ற இன்னும் கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் அரசாங்கத்துக்குள்ளே அவ்வாறான ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இன்று நான் காலியில் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ஒரு புதிய பரிமாணத்தை காண்கின்றேன். நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம் மாணவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் தங்களுடைய கல்வியை சிங்கள மொழியில் பயின்றாலும் கூட, காலி நகர்புறத்திலே கூடுதலான முஸ்லிம மாணவர்கள் சிங்கள மொழியிலே கல்வி கற்பதை நான் பார்க்கிறேன். இங்கு அரங்கேறிய எல்லா நிகழ்வுகளிலும், குறிப்பாக துஆப் பிரார்த்தனை, சொற்பொழிவுகள் என்பனவற்றில் அநேகமானவை சிங்களத்தில் இடம்பெற்றதை நான் அவதானித்தேன்.
இதற்கு மேலாக இங்குள்ள மல்ஹருஸூல்ஹியா தேசிய பாடசாலை உட்பட ஏனைய பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்பதை காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மொழியில் படிப்பவர்கள் சிங்கள மொழியில் கற்பவர்களை விட குறைவாகவே உள்ளனர். ரிச்மண்ட், மஹிந்த, புனித அலோசியஸ் போன்ற கல்லூரிகளில் சிங்கள மொழியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் உள்ளனர்.
இதில் ஒரு பாதிப்பும் இருப்பதை நான் பார்க்கிறேன். சிங்கள மொழியை படிக்கத்தான் வேண்டும், ஆனால், கொழும்பு, கண்டி போன்ற மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதியில்; ஆகக் கூடிய இஸட் புள்ளிகளை பெறவேண்டிய நிலை இருக்கும் பொழுது அடுத்தபடியாக காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கு கூடுதல் புள்ளிகள் தேவைப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தமிழ் மொழி மூல முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அத்துடன், இம் மாவட்டங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் சிங்கள மொழி மூல முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகும்.
எனவே, இந்த நாட்டில் மன்னார், முல்லைத்தீவு, மொனராகலை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து தான் குறைந்த இஸட் புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். பின்தங்கியனவாக கருதப்படும் அந்த மாவட்டங்களை விட காலி மாத்தறை மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானது என்பது கவலைக்குரியதாகும். இவ்வாறு தமிழ் மொழி மூலக் கல்வி இப் பிரதேசங்களில் பாரதூரமான வீழ்ச்சியை அடைந்துள்ளது என்பதை புள்ளிவிபரங்களின் ஊடாக கண்கிறேன். ஆகையால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் புதிய பரிமாணம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும்.
தமிழ் மொழிப் பாடசாலைக்கான கல்வி வலயம் முன்பிருந்து பின்னர் மாகாண சபைகள் நிறுவப்பட்டபோது பண்முகப்படுத்தலோடு இல்லாமல் போய்விட்டது.
அத்துடன், ஆன்மீக ரீதியான ஒரு ஆழமான ஈடுபாட்டை தென் இலங்கையிலே குறிப்பாக காலி, வெலிகம, மாத்தறை பிரதேசங்களிலே அவதானிக்க முடிகிறது. அவ்வாறே ஆன்மீக ரீதியான முரண்பாடுகளையும் காண முடிகிறது.
தரீக்காக்களின் செயல்பாடுகளின் ஊடாக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு விதமான ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்பட்டதை மறுக்க முடியாது. காலாகாலம் இந்த நிலை பேணப்பட்டு வந்திருக்கிறது.
ஆன்மீக ஈடுபாடு, அதையொட்டிய கலாசார, பண்பாட்டு பாரம்பரியம் என்பன வரவேற்கத்தக்கதாக இருப்பதை இந்த சமூகத்தில் உள்ள பண்முகத் தன்மையின் வெளிபாடாக நான் பார்க்கிறேன். அந்தப் பண்முகத் தன்மையையும், ஆன்மீக ஈடுபாட்டையும் நாம் வளர்த்துக்கொள்ளும் அதேவேளையில் பாடசாலை கல்வியில் அண்மைக்காலமாக காணப்படும் வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கும் வழிவகைகளை தேட வேண்டும். இப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரோடு ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளேன்.
காலி என்பது முஸ்லிம்களின் ஒரு பூர்வீகப் பூமி என்றால் மிகையாகாது. பஹ்ஜதுல் இப்ராஹிமீய்யா என்பது இலங்கையில் உள்ள ஆகப் பழமை வாய்ந்த அரபு மத்ரஸாவாக திகழ்கின்றது. நூறு வருடங்களையும் தாண்டி அது இன்னமும் உயிர்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. வெலிகமயில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி இன்னொரு பழைய மத்ரஸாவாகும். பொதுவாக இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் மத்ரஸாக்கள் தோற்றம் பெறுவதற்கு முன்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தென்மேற்கு கரையோரப் பிரதேசத்தில் தான் மத்ரஸாக்கள் காணப்பட்டன என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
அத்துடன், இங்கு வாழும் பெண்களுக்கு அரபுத் தமிழில் கூடிய பரீட்சயம் இருக்கின்றது. அரபுத் தமிழில் தலைபாத்திஹா ஓதுவதற்கு இங்குள்ள பெண்களுக்கு தெரியும். அவ்வாறே ரபியுல் அவ்வல் மாதத்தில் முபாரக் மாலை இன்று ஏழு நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) மீது புகழ்பாடும் வரலாற்று சுருக்கத்தை அரபுத் தமிழில் பாடுவோரும் இப் பிரதேசத்தில் உள்ளனர்.
தமிழ் மொழியை அரபு லிபியில் எழுதும் மொழி நடையே அரபுத் தமிழ் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இது வழக்கிழந்து அருகிச் சென்றாலும் தென்மேற்கு இலங்கையில் அது இன்னமும் ஓரளவு புழக்கத்தில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
மௌலவி பிஷ்ருல் ஹாபியும் இந் நிகழ்வில் உரையாற்றினார்.

பனி மலைகள் வேகமாக உருகி வருவதால் கடல் மட்டம் அதிவேகமாக உயர்கிறது!


உலகில் வெப்ப நிலை உயர்ந்து வருவதன் காரணமாக கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூமியின் வெப்ப நிலை உயர்ந்து வருவதால், பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பருவநிலை மாற்றக்குழு ஆய்வின் படி, அக்குழு முன்பு கணித்ததை விட 60 சதவீதம் வேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேவேளை கட்டார், டோகாவில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக வெப்ப மயமாக்கல் குறித்து மிகுந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் , கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உறைபனி மலைகள் நிறைந்த நாடுகளில் புவி வெப்ப மயமாவதால் இவைகள் வேகமாக உருகி வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவது குறித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

6 மண்டையோடுகள் மாத்தளையில் மீட்பு

 மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்த மனித எலும்புக்கூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து மண்டையோடுகள் ஆறும் மீட்கப்பட்டுள்ளன.

இருந்த மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள்  தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை நடத்துவதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதன், 28 நவம்பர், 2012

யாசர் அராஃபத் உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு


பாலத்தீனத் தலைவர் யாசர் அராஃபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பதை கண்டறியும் முகமாக அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு அவரது உடல் ரமல்லாவில் உள்ள கல்லறையில் மீண்டும் புதைக்கப்பட்டது.
அராப்ஃத்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை இப்போது வல்லுநர்கள் ஆய்வு செய்வார்கள் என்றாலும், அதன் முடிவுகள் தெரிய பல மாதங்களாகலாம்.
அவரக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாத சூழலில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாசர் அராஃபத் காலமானார்.
கதிரியக்கத் தாதுப்பொருளான பொலோனியம் அவரது உடைகளில் இருந்தது என்று தொலைக்காட்சி அவணப்படம் ஒன்றில் செய்தி வெளியனதை அடுத்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
அவரது மரணத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருந்தது என்று பல பாலத்தீனியர்கள் சந்தேகித்தனர், ஆனால் அதை இஸ்ரேல் எப்போதுமே மறுத்துள்ளது.
அராஃபத்தின் மனைவி வேண்டிக் கொண்டதை அடுத்து அவரது மரணம் குறித்த ஒரு விசாரணை பிரான்ஸில் தொடங்கியுள்ளது. (BBC)

பதுளையில் நடப்பது என்ன? வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்


-மௌலவி HMM.இர்ஷாத்-
கடந்த 2012-08ம் மாத இறுதியில் ஒரு துண்டுப் பிரசுரம் பதுளை நகரில் வாழும் சிங்கள மக்களுக்கு மத்தியில் வினியோகிக்கப்பட்டிருந்தது .அதில் முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள், அவர்களுக்கு காணிகள் விற்காதீர்கள் 2001ம் ஆண்டு 7 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 2011ல் 14 வீதமாகி விட்டார்கள். 2021ல் 25-30 வீதமாகி விடுவார்கள். 2031ல் 50-60 வீதமாகி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் இன்னும் பலவிடயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மிக மோசமானவர்களாகவும் சித்தரித்து படங்கள் மற்றும் கருத்துக்களைத் வெளியிடும் சில வெப்தளதங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்களும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அவ்வெப்தளங்களின் முகவரிகள் அடங்கிய DVD யும் வினியோகிக்கப்பட்டிருந்தது.
மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் பதுளை நகரில் திடீரென இப்படியானதொரு கருத்து எப்படி வந்தது. இதை யார் செய்கிறார்கள் இதன் விளைவுகள் எப்படியானதாக இருக்கப்போகிறது என்ற கேள்வியோடும், எதிர்காலத்தில் பிரச்சினைகள் உருவாகாமல் எமது சமூகத்தையும் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை செய்ததில், முதற்கட்டமாக பௌத்த மத குருமார்களை சந்தித்து நிலமைகளை விளக்கிச் சொல்வது என முடிவுசெய்யப்பட்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டோம்.
இரண்டு மாதம் கழித்து 2012-10-24ம் திகதி கிடைத்த ஒரு செய்தியில்: மறுநாள் 2012-10-25ம் திகதி வியாளக்கிழமை பங்களாதேஷில் நடந்த ஒரு அசம்பாவிதத்தைக் கண்டித்து பதுளை நகரில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சிலர் தயாறாகிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதைக் காரணமாக வைத்து மறுநாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கெதிராக மீண்டும் ஆர்பாட்டமோ அல்லது கலவரமோ ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும் எனவே முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம்.
அதன்படி பதுளை ஜும்மா மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் “ஆர்பாட்டக்காரர்களினால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தாலும் நாம் சட்டத்தை மதித்து பாதுகாப்பு அதிகாரிகளின் ஊடாக முறையான நடைவடிக்கைகளை மேற்கொள்வோம். யாரும் பிரச்சினைகள் வளர இடம் கொடுக்கக்கூடாது” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதின் பேரில் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஆர்பாட்டம் நிறைவுபெற்றது.
இந்த ஊர்வலம் நடந்த பிறகுதான் இதன் பின்னணியில் இருந்து கொண்டு இனவாதக் கருத்துக்களைக் கூறி அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு இனக்கலவவரத்தை உருவாக்க முயற்சிப்பது இந்த “பொதுபல சேனா” என்ற அமைப்புத்தான் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
இதற்குப்பிறகு நடக்கவிருந்த சில அசம்பாவிதங்களும் சில நலன் விரும்பிகளின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டது.
இது நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து அதே வியாழக்கிழமை காலை 10 மணியளவில் 22-11-2012ம் திகதி பதுளை நகரில் முஸ்லிம் வியாபாரி ஒருரின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் கையுறை ஒன்றை வாங்கிக் கொண்டு அதற்கு பற்றுச் சீட்டு தருமாறு வேண்டியிருக்கிறார். சுமார் 2 மணித்தியாலயத்தின் பின் அவரின் கடைக்கு வந்த பதுளை பொலிஸ் நிலையத்ததைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் கடையில் விற்பனைக்கு வைத்திருக்கும் கையுறைகளை சோதனையிட வேண்டும் என்று வேண்டியதாகவும் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி அந்த வகையான புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகளை காட்டுமாறும் கடை உரிமையாளரை கேட்டிருக்கிருக்கின்றனர்.
அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் தாம் அப்படி புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறையையும் யாருக்கும் விற்பனை செய்யவில்லை எங்களிடம் அப்படியான கையுறைகளும் இல்லை என்று கூறியிருக்கிறார். உடனே பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே கடைக்கு வந்து கையுறை வாங்கிச் சென்ற இளைஞரை அழைத்து அவரின் கையிலிருந்த கையுறையைக் காட்டுமாறு கேட்டபோது புத்தரின் படம் பொறிக்கப்பட்ட ஒற்றைக் கையுறையை காட்டி இருக்கிறார்.
தான் இப்படியான கையுறையை யாருக்கும் விற்பனை செய்யவில்லையென்றும் தனது கடையில் இத்தகைய கையுறைகள் கிடையாது என்றும் எடுத்துக் கூறியும் பொலிஸ் அதிகாரிகள் கடையை முழுமையாக சோதனையிட்டு கடையில் இப்படியான கையுறைகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகும் கடை உரிமையாளரும், கையுறையை விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை ஊழியரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
கடைக்கு வெளியே வரும் போது வெளியூரைச் சேர்ந்த ஒருவர் கடைக்கு வெளியே நின்றுகொண்டு பல கோணங்களிலிருந்தும் கடையையும், கடை உரிமையாளரையும் படமெடுப்பதையும் அவதானித்திருக்கின்றார்.
அன்று மாலையே அங்கு எடுக்கப்பட்ட மொத்தம் 45 படங்கள் “பொதுபல சேனா” என்ற பெயரில் உள்ள பேஸ்புக் பேஜ் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது.
(குறித்த கடையில் விற்பனை செய்யப்படும் கையுறைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கையுறைகளாகும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.)
கடை உரிமையாளரும் அவரது உழியரும் கைது செய்யப்பட்டு பதுளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இது விடயமாக முறைப்பாடு செய்வதற்கு ஏற்கனவே ஒரு பௌத்த தேரர் பொலிஸ் நிலையத்திற்கு வந்திருப்பதும் மற்றொரு கையுறை அவரிடம் இருந்ததும் தெரிய வந்திருக்கிறது.
மறுநாள் காலை 10 மணியளவில் கலகக்காறர்கள் சுமார் 150 பேர் வரை பதாதைகளை ஏந்திக் கொண்டு முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும் இந்த வியாபாரிக்குத் தண்டனை வழங்கக் கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை “பொது பல சேனா” என்ற அமைப்பினர் பதுளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தார்கள். (இதில் பதுளையைச் சேர்ந்தவர்கள் 20 பேருக்கும் குறைவானவர்களே என்று ஆர்பாட்டத்தை பார்வையிட்ட பொதுமக்கள் கூறுகிறார்கள்.)
அந்தத் தகவல்களும் ஆர்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களும் அவர்களது வெப்தளத்திலேயே வெளியிடப்பட்டிருந்தது.
ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரும் இந்த “பொதுபல சேனா” என்ற அமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக இருக்கின்றார் இதுவரை நடந்த எதிர்ப்புப் பேரணிகளுக்கும் அவரே தலமை தாங்கி இருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
நீதிமன்றத்தில் வளக்கு விசாரணைக்கு வந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக பெரும்பான்மை இனத்தைச் சேர்த சட்டத்தரணிகள் ஆறு பேர், (அதில் ஒருவர் பெண் சட்டத்தரணியாவார்) சுயேச்சையாகவே கடை உரிமையாளருக்காக நீதிமன்றில் ஆஜராகி அவரின் விடுதலைக்காக பரிந்துரை செய்ததாகவும் அதன் பேரில் குறித்த கடை உரிமையாளரும் கடை ஊழியரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தலா 5000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதேநேரம் வெள்ளிக்கிழமை பதுளை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றிவிட்டு பதுளை – பண்டாறவளை வீதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் இவ்வார்பாட்டக் காரர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். முச்சக்கர வண்டியும் சேதமாக்கப்பட்டது. அவர்கள் இருவரும் றாகலையைச் சேர்நதவர்கள்.
எமது முஸ்லிம் சகோதர்கள் இருவரையும் தாக்கி அவர்களது முச்சக்கர வண்டியை சேதப்படுத்திய இரு நபர்கள் தாக்குதலுக்கு உள்ளானவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நிலையிலும், பலரும் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியும் பதுளை மஸ்ஜித் நிர்வாகிகள் வேண்டிக் கொண்டதன்பேரில் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. அவருக்குத் தேவையான உதவிகளை செய்து நாம் அவர்களை அனுப்பி வைத்தோம். சிலர் இதை வைத்து நம்மை குறைகூறி வருகிறார்கள். உண்மையில் முறைப்பாடு செய்யாமல் இருப்பதில் பலநலவுகள் இருக்கிறது என்ற ஆலோசனையின்படியே அவ்வாறு முடிசெய்யப்பட்டது.
மேற்படி கையுறை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கையுறை விற்பனை செய்யப்பட்டதாகக்கூறப்படும் கடையும், அவர்களுக்கு கொழும்பிலிருந்து கையுறைகளை அனுப்பி வைக்கும் கடையும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவ்விரு கடைகளிலும் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகள் எதுவும் இருக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மீண்டும் சனிக்கிழமை (24-11-2012) மாலை முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான 6 ஆடுகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் திருடிக்கொண்டு போய் ஒரு ஆட்டை வெட்டிப்போட்டிருக்கிறார்கள். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சனிக்கிழமை இரவிலிருந்து நகரில் மேலதிக பாதுகாப்புப் பணியில் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இன்றுவரை நகரில் ஒருவித அச்சமான நிலையே தொடர்கிறது.
30 வருட யுத்தத்தினால் இந்நாட்டில் நாம் அனுபவித்த துன்பங்கள் போதும். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக வாழும் இத்திருநாட்டில் மீண்டுமொரு இனக்கலவரம் உண்டாக இடம் கொடுக்க வேண்டாம். இது ஒரு கையுறை வியாபாரத்தினால் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. அண்மைகாலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படு வரும் சதிமுயற்சிகள் என்ற நாடகத்தின் ஒரு அங்கமே. எனவே இப்பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றே பதுளை முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவர் யசீர் அரபாத்தின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


இவர்  உயிரிழந்தமை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்தே அவரது சடலம் தோண்டி  எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யசீர் அரபாத் தனது 75ஆவது வயதில்  கடந்த 2004ஆம் ஆண்டு பரிஸில் உயிரிழந்திருந்தார்.

இவர் நஞ்சூட்டப்பட்டதன் விளைவாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இவர் பக்கவாதம் காரணமாகவே உயிரிழந்ததாக அரபாத்தின் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இன்று சந்திரகிரகணம்: இலங்கையரும் காண முடியும்


சந்திரகிரகணமொன்றைக் காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு இன்று கிட்டவுள்ளது.
இலங்கையில் இன்று இரவு இந்த சந்திரகிரகணம் தென்படும் என வானியல் நிபுணர் கலாநிதி காவன் ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சந்திரகிரகணத்தின் போது சந்திரனின் பிரகாசம் மாத்திரமே குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகுதி அளவிலான சந்திரகிரகணம் அல்லது பூரண சந்திரகிரகணத்தைப் போன்று சந்திரனின் ஒரு பகுதியோ அல்லது முழுமையாகவோ மறைவதற்கான சாத்தியம் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இன்று இரவு 7.30 தொடக்கம் 8.30 வரை சந்திரனின் பிரகாசம் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இவரது தலையை கொண்டு வாருங்கள் 60 கோடி தருகிறோம் - பாகிஸ்தான் அறிவிப்பு


தலிபான் தகவல் தொடர்பாளர் இஷானுல்லா குறித்து, தகவல் தருபவர்களுக்கு, பாகிஸ்தான் அரசு, 60 கோடி ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இவர்கள் "தேரிக் -இ- தலிபான்' என்ற பெயரில் இயங்குகின்றனர். பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் படி, அரசை வற்புறுத்தி வருகின்றனர்.பாகிஸ்தானில் நடக்கும் பெரும்பாலான குண்டு வெடிப்புகளுக்கு, இந்த அமைப்புதான் காரணமாக உள்ளது.அமைதிக்காக பிரசாரம் செய்த, மலாலா என்ற பள்ளி சிறுமியை, தலிபான்கள் சுட்டதில், மூன்று மாணவிகள் காயம் அடைந்தனர். இதில் மலாலா, தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறாள். 

இஸ்லாமாபாத்தில் "டிவி' நிலைய ஊழியரின் காரில், வெடி குண்டை வைத்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிப்பதற்கு முன், செயலிழக்க செய்யப்பட்டது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மாலிக், ஆயுதங்களை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும்' என, அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து, தேரிக்-இ-தலிபான் அமைப்பின் தகவல் தொடர்பாளர் இஷானுல்லா ரஹ்மான் குறிப்பிடுகையில், 

"வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக விளங்கும் மதசார்பற்ற அரசை, ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வரை, அமைதி நடவடிக்கைக்கு திரும்ப மாட்டோம்' என, கூறியிருந்தார்.இஷானுல்லாவின், இந்த பேட்டியினால், அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் அரசு, அவருடைய தலைக்கு 60 கோடி ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் ரெஹ்மான் மாலிக் குறிப்பிடுகையில், "தற்கொலை படை தாக்குதலில் அப்பாவி மக்களை கொல்வதை, தலிபான்கள் நியாயப்படுத்துகிறார்களா? தலிபான்கள், பணத்துக்காக, இஸ்லாமின் புகழை குலைக்கிறார்கள். இஷானுல்லாவின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 20 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும்' என்றார். 

வெற்றிப் பயணம்...




இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான (செற்றலைட்) 'சுப்றீம்செற்', நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்படது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்தே இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக சுப்றீம்செட் நிறுவனம் அறிவித்தது.

கடந்த 22ஆம் திகதி ஏவப்படவிருந்த மேற்படி செயற்கைக்கோள், சீனாவின் காலநிலை சீரின்மை மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி காரணமாக ஐந்து நாட்களுக்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









செவ்வாய், 27 நவம்பர், 2012

விண்ணில் வலம்வரவுள்ளது இலங்கையின் முதலாவது செய்மதி


இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் செட்-1  (Supreme Sat - 1)ஐ இன்று விண்ணிற்கு ஏவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சீனாவில் இருந்து நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்ட சீன சர்வதேச வானொலி சேவையின் சிங்களப் பிரிவு பணிப்பாளர் ஷென் லீ, சீன மற்றும் இலங்கை நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் பயனாக இந்த செய்மதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக கூறினார்.
சீனாவின் சீவோன் விண்வெளி மையத்தில் இருந்து இந்த செய்மதி விண்ணிற்கு ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டளவில் இந்த செய்மதியுடன் மேலும் மூன்று செய்மதிகளை விண்ணிற்கு ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் கடந்த வியாழக்கிழமை விண்ணிற்கு ஏவப்படவிருந்த போதிலும் சீரற்ற வானிலை காரணமாக அதற்குத் தடை ஏற்பட்டிருந்தது.
இந்த செயற்கைக்கோளை விண்ணிற்கு ஏவுவதன் மூலம் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணிற்கு ஏவிய ஆசியாவின் மூன்றாவது நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொள்ளும் என அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தீயீல் எரிந்த கொழும்பு செயலகத்தின் தற்போதைய தோற்றம் (படங்கள்)


கொழும்பு டாம் வீதியில் அமைந்துள்ள மாவட்டச் செயலம் நேற்று திங்கட்கிழமை தீப்பிடித்து எரிந்தது. தீயினை அடுத்து இன்று செவ்வாய்கிழமை கொழும்பு மாவட்ட செயலகத்தின் தோற்றத்தை காண்கிறீர்கள்..!







 

முஸ்லிம் காங்கிரஸ் எந்த சவாலுக்கும் முகம்கொடுக்க தயார் - தவம்


(எஸ்.அன்சப் இலாஹி)

தமிழ் பேசும் சமூகம் என்பது அதிகாரப்பரவலாக்கத்தின் ஊடாக தாங்களே தங்களது விடயங்களை செய்து கொள்கின்ற ஒரு நிலவரம் இருக்கவேண்டும் என்கின்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக உறுதியாக இருக்கின்றது. 13வது சரத்தினை நீக்குகின்ற விடயம் அதேபோன்று மாகாணசபை முறைமையை இல்லாது ஒழிக்கின்ற விடயம் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கு தயாராக உள்ளது. இம்முறைமையை மேம்படுத்துவதற்கான விடயங்களிலேயே அதிகமான கவனத்தை முஸ்லிம் காங்கிரஸ் செலுத்திருக்கிறது. நீக்குவதற்கு முயற்சிக்கின்ற யாருக்கும் இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆணித்தரமாக தனது எதிர்ப்பை தெரிவிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை அதிகாரப்பரவலாக்க விடயத்தில் மிகத் தெளிவான கொள்கையோடு இருக்கின்றது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்

அக்கரைப்பற்றில் நேற்று மாலை (26.11.2012) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்து கூறுகையில்,

வரலாற்று ரீதியாக ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் நிகழ்ந்த தங்களைத் தாங்களே ஆளுகின்ற விடயம் பற்றிய போக்கே இனப்பிரச்சினைக்கு தூபமிட்டது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிக மோசமான நெருக்குவாரங்களுக்கு தமிழ் பேசும் சமூகம் தள்ளப்பட்டதை யாரும் மறுத்துரைப்பதற்கில்லை. தமிழ் பேசும் சமூகத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக வேறு கண் கொண்டு பார்த்து அவர்களுக்கு நியாயமாக வழங்கப் படவேண்டிய அதிகாரத்தை வழங்க மறுத்ததனாலேயே ஒரு நீண்ட இரத்த வரலாறு இலங்கையில் உண்டானது. இவ் இரத்த வரலாற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே இந்தியாவினுடைய தலையீட்டின் பிரகாரம் 13வது சரத்து உருவாக்கப்பட்டதோடு அதிலே மாகாண முறைமையும் தோற்றுவிக்கப்பட்டது;.

இந்த மாகாணமுறைமை என்பது தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்திய இரத்தத்தின்  சிந்திய இரத்தத்தின் விளைவாகப் பெறப்பட்ட ஒரு விடயமாகும். அவ்வாறு பெறப்பட்ட விடயத்தினை ஒரு சிலருடைய நலன்களுக்காக நாம் விட்டுக்கொடுக்கமுடியாது. ஏனென்றால் 2000ம்களில் சந்திரிக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைப்பு முறையிலேயே மாற்றம் கொண்டுவரப்பட்டு முஸ்லிம்கெளுக்கென்று ஒரு உப ஜனாதிபதியும், தமிழர்களுக்கென்று ஒரு உப ஜனாதிபதியும் உருவாக்கப்படவேண்டும் என்கின்ற சிந்தனை மாற்றம் எற்பட்டதை நாம் எல்லோரும் அறிவோம். 

தமிழ் பேசுகின்ற சமூகம் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சூழ் நிலை இன்னும் உருவாகாத நிலையில், ஏற்கனவே அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும், அதிகாரப்பரவலாக்கத்தையும் பறித்தெடுப்பது என்பது மீண்டும் இந்த நாட்டை மிக மோசமான சூழ் நிலைக்குத்தள்ளுகின்ற ஒரு முயற்சியாக அமையும் என்று நாம் கருதுகிறோம். ஆகவே இந்த விடயத்தில் எல்லோரும் கவனமெடுத்து மாகாணசபை முறை ஊடாக இந்த அதிகாரப்பரவலாக்கத்தை இன்னும் விரிவுபடுத்தி, சிறுபான்மை சமூகம் இந்த நாட்டிலே எல்லாவிதமான விடயங்களிலும், சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்

அன்று மத்திய அரசாங்கத்திலே மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்கின்ற சிந்தனை உருவாக்கம் பெற்றதற்குப்பிறகு, இந்த மாகாணசபை முறைமை கூட அதிகாரப்பரவலாக்கத்திற்காக இருந்துவிடக்கூடாது என்று எண்ணி  அதனை இல்லாது  ஒழிக்க இப்போது சிலர் முயற்சிப்பது வன்மையாகக்கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதை நாங்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை. என்று மேலும் கூறினார்.

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு இரண்டு மாடிக்கட்டிடம் (படங்கள்)


(சுலைமான் றாபி)

கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம அனுசரணையுடன் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பை   முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இமாம் கஸ்ஸாலி வித்தியாலயதிற்கான   இரண்டு மாடி கட்டிடம்  (26-11-2012) திங்கட்கிழமை கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார  பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் NAA புஸ்பகுமாரனால் திறந்து வைக்கப்பட்டது. 

பாடசாலை அதிபர் MMA கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீக், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  AM மன்சூர், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி SLM சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில்  பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள், மாணவ   மாணவிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்   NAA புஸ்பகுமார க்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக செயலாளர் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பே விஷேட ஞாபக சினத்தினை வழங்கி கௌரவித்தார். 






நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு இரண்டு மாடிக்கட்டிடம் (படங்கள்)


(சுலைமான் றாபி)

கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம அனுசரணையுடன் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பை   முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இமாம் கஸ்ஸாலி வித்தியாலயதிற்கான   இரண்டு மாடி கட்டிடம்  (26-11-2012) திங்கட்கிழமை கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார  பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் NAA புஸ்பகுமாரனால் திறந்து வைக்கப்பட்டது. 

பாடசாலை அதிபர் MMA கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீக், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  AM மன்சூர், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி SLM சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில்  பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள், மாணவ   மாணவிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்   NAA புஸ்பகுமார க்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக செயலாளர் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பே விஷேட ஞாபக சினத்தினை வழங்கி கௌரவித்தார். 




 

மஹிந்தவின் மகன் சீனா பயணம் - இலங்கை செய்மதி இன்று விண்வெளிக்கு பாய்கிறது



அண்டவெளிக்கு கடந்த வாரம் அனுப்ப திட்டமிடப்பட்ட செய்மதி பல காரணங்களுக்காக பிற்போடப்பட்டிருந்தன. இதற்கான ஆயத்தங்கள் தற்போது மீண்டும் நிறைவடைந்த நிலையில் இன்று 27-11-2012 செய்மதி விண்ணிற்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரீம் செற் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி விஜித பீரிஸ் இது குறித்து தகவல் வழங்கிய போது, 

செய்மதியை செலுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கையைச் சேர்ந்த விண்வெளி பொறியியலாளர் ரோகித்த ராஜபக்ச உள்ளிட்ட குழவினர் சீனா நோக்கி பயணமாகியுள்ளனர்.

எனது திட்டங்களில் முற்றுப்புள்ளிக்கோ கேள்விக்குறிக்கோ இடமில்லை: மேர்வின்

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க அவர்கள் மட்டத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குறிப்பாக நாய் வேலைகளில் ஈடுபடுபவர்களை நாய்களைப் போன்று குரைத்தே தடுக்க வேண்டியுள்ளது. இருப்பினும் இந்நாட்களில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியே இருக்கின்றேன் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


இருப்பினும், களனி ஆசனத்தில் புதிய வேலைத்திட்டமொன்றைத் தான் தொடங்கியுள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளிக்கோ, காற்புள்ளிக்கோ அல்லது கேள்விக்குறிக்கோ ஒருபோதும்இடமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி பாசறை!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி பாசறையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 06 இல் அமைந்துள்ள குளோபல் டவர் ஹோட்டலில் இடம்பெற்றது.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகளின் நிருவாகம் பற்றி போதிய தெளிவை பெற்றுக்கொள்ளும் விதத்தில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களை மையப்படுத்தி இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றாலும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வும் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் சீர்திருத்தங்களும் என்ற கருப்பொருளில் பிரபல சட்டவல்லுநர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன இதில் கருத்தாழமிக்க உரையொன்றை ஆற்றினார்.
அதிகாரப் பகிர்வு. பரவலாக்கம் என்பவற்றிற்கு இடையே காணப்படும் வேறுபாடுகளையும், வலுவேறாக்கத்திற்கு இடையில் தோன்றும் முரண்பாடுகளை விபரித்துக் கூறிய அவர் மாகாண சபைகள் அதிகாரத்தை எவ்வாறு பிரயோகிக்கின்றன, மத்திய அரசு அதிகாரங்களை எப்படி பிரயோகிக்கின்றது என்பதையும், எதிர்காலத்திற்கான தமது சில முன்மொழிகளையும் குறிப்பிட்டார். இன்னும் பல பயனுள்ள அம்சங்களையும் அவர் தொட்டுப் பேசினார்.
மாகாண சபைகளின் நிருவாக முறைமையும் மாகாண சபைகளின் நிறுவன ரீதியான அம்சங்களும் என்ற தொனிப்பொருளில் ஓய்வு பெற்ற அரச உயர் அதிகாரி திரு.கே.பி. சிறிசேன நீண்ட விளக்கமொன்றை அளித்தார்.
அவர் வடமத்திய மாகாண சபை, மத்திய மாகாண சபை ஆகியவற்றின் செயலாளராகப் பணியாற்றி ஆளுநர்களின் கீழும், முதலமைச்சர்களின் கீழும் தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் வழங்கிய விளக்கம் பங்குபற்றியோரை வெகுவாகக் கவர்ந்தது.
மாகாண சபைகளின் பயன்பாடுகளை அதன் உறுப்பினர்கள் சரிவர பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை திரு. சிறிசேன நன்கு விளக்கிக் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி. கட்;சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் அஹமத், எம்.ஐ.எம். மன்சூர், மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் இதில் பங்கு பற்றினர்.

வெள்ளி, 23 நவம்பர், 2012

நாளைய வரலாறு என்னைப்பற்றி மிகவும் தவறாக இருக்கும். யூதர்களை நான் ஏன் அழித்தேன் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள். -சர்வாதிகாரி ஹிட்லர்-

நாளைய வரலாறு என்னைப்பற்றி மிகவும் தவறாக இருக்கும். யூதர்களை நான் ஏன் அழித்தேன் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள். -சர்வாதிகாரி ஹிட்லர்-

தேசிய ரீதியில் சாதனை படைத்த நிந்தவூர் மாணவனுக்கு ஆரிப் சம்சுடீன் வாழ்த்து!



-எம்.எம்.ஏ.ஸமட்-
தேசிய மட்டப் போட்டியில் இரு பதக்கங்களைப் பெற்று நிந்தவூர் பிரதேசத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை தேடிக் கொடுத்த நிந்தவூர் அல்- மதீனா வித்தியாலய மாணவன் ஆஷிக்கை மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அம்மாணவனின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று வாழ்த்தியுள்ளார்.
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பரிதி வட்டம் வீசும் போட்டில் கலந்துகொண்டு தங்கம் பதக்கத்தினையும் குண்டெறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் இம்மாணவன் பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்துக் கிடைத்த ஒரேயொரு தங்கப்ப தங்கம் இம்மாணவனினாலேயே பெறப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கான போதிய வசதிகள் எதுவும் இல்லாத இப்பாடசாலையிலிருந்து போட்டில் கலந்து கொண்டு வெற்றியீட்டி தங்கம் பதக்கம் பெற்றது இம்மாணவனின் அயராத முயற்சியும் சாதனையுமாகும்.
பிரசேத்துக்குப் பெருமை தேடிக்கொடுத்த இம்மாணவனி்ன் வீடு தேடிச்சென்று அம்மாணவனுக்கு பரிசில்களும் வழங்கிய மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் இம்மாணவனின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவியளிக்கவுள்ளதாகவும் மாணவனிடம் உறுதியளித்துள்ளார்.
வாழக்கையில் வெற்றிபெறுபவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்துவது மனித நாகரிகமாகும் அதனை மாகாண சபை உறுப்பினர் புரிந்துள்ளமை போற்றத்தக்கதாகும்.

செவ்வாய் கிரகத்தில் வரலாற்று முக்கியத்துவமிக்க விடயம் - பூமியை அதிரவைக்கக்கவுள்ளதாம்..!




(தினகரன்)செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியா சிட்டி இயந்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எனினும் அது குறித்து அவர்கள் மெளனம் காத்து வருகின்றனர்.

ஒருசில வாரங்களிலேயே சிகப்பு கிரகத்தில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது  குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வுள்ளது. கியூரியா சிட்டியின் மிக முக்கியமான ஆய்வு இயந்திரமான ‘சாம்’ ஊடாகவே இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கியூரியா சிட்டியின் இரசாயன ஆய்வுகூடமாக செயற்படும் ‘சாம்’ மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மண், வாயு மற்றும் பாறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ‘சாம்’ இயந்திரத்திற்கு உயிரினங்கள் இருப்பதற்கான அடிப்படை கட்டமைப்பை கண்டறியும் திறன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அதனது சமீபத்திய கண்டுபிடிப்பு குறித்த தகவலை வெளியிட விஞ்ஞானிகள் மறுத்து வருகின்றனர். ஆனால், அது பூமியை அதிரவைக்கக்கூடியது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த தரவு வரலாற்று புத்தகத்தில் பதியக்கூடியது. அது சிறப்பான ஒரு விடயம்” என கியூரியா சிட்டி இயந்திரத்தின் ஆய்வுக் குழுவின் தலைவர் ஜோன் கிரேட் சிங்கர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் புதிய கண்டுபிடிப்பு குறித்து எதிர்வரும் அமெரிக்க ஜியோபிசிக்கஸ் ஒன்றிய மாநாட்டில் வைத்து வெளிப்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி கலிபோர்னியாவில் ஆரம்பமாகவுள்ளது.

கியூரியா சிட்டியின் புதிய கண்டுபிடிப்பை உறுதி செய்ய அதை இருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதனாலேயே அதனை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2.5 பில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆறு சக்கரங்கள் கொண்ட கியூரியா சிட்டி இயந்திரம் கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் கொல்காட்டர் என்ற பகுதியில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு ஆண்டு பரிசோதனைக் காலத்தைக் கொண்ட கியூரியா சிட்டியில் 10 வகை ஆய்வு இயந்திரங்கள் உள்ளன.

site counter