அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 29 நவம்பர், 2012

பலஸ்தீனர்களின் போராட்டத்தில் இலங்கை கைகோர்த்து நிற்கும் - மஹிந்த அறிவிப்பு




பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் 29-11-2012 இன்றாகும். இதனையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

பலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை, இறைமை என்பன இன்னமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்களது நிலத்தில் அதிகமான பகுதி அவர்களுக்கு இல்லாதுபோயுள்ளது என்பதனையும் சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டுவதற்கு பலஸ்தீன ஒருமைப்பாட்டுதினம் முக்கியத்துவம் பெறுகின்றது.

பலஸ்தீன மக்கள் நியாயத்துவம் மற்றும் பிறர் உடமையாக்க முடியாத தமது உரிமைகள் என்பவற்றை அடைந்துகொள்வதற்காக பலதசாப்த காலமாக மேற்கொண்டுவரும் போராட்டத்தில் இலங்கை மக்களும் அவர்களுடன் கைகோர்த்து நிற்பதுடன், எதிர்காலத்திலும் அவ்வாறே அமையும். 

இஸ்ரேலுடன் காணப்படுகின்ற இறைமைமிக்க பலஸ்தீன அரசு ஒன்றினை உருவாக்கும் இறுதிக் குறிக்கோளுடன் சமாதானத்திற்கான சகல வழிகளையும் தேடிப்பார்த்தல் வேண்டும். அதனால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு முயற்சித்தல் வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்கும் சமாதானம் கிட்டும்.

பலஸ்தீன மக்களின் அரசியல் ஐக்கியத்துவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்பன ஐக்கிய நாடுகளின் முன்மொழிவின் மீது இரு நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கான தீர்வினை வெற்றிகொள்ள காரணமாக அமைவதுடன் இலங்கையானது இந்நிலைக்கு தமது மனப்பூர்வமான ஒத்துழைப்பினை வழங்கும். கரடுமுரடான அரசியல் மற்றும் பொருளாதார பாதைக்கு மத்தியிலும் கூட தாபனங்களை கட்டியெழுப்புவதில் பலஸ்தீன அதிகாரசபை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter