அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நிந்தவூர் தொழிற் பயிற்சி காரியாலய இடமாற்ற சர்ச்சை; கிழக்கு மாகாண சபையில் பிரேரணை!


(எம்.எம்.ஏ ஸமட்)
Ariff (1)நிந்தவூரிலுள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி தலைமைக் காரியாலயம் அம்பாறை நகருக்கு இடமாற்றப்படுவதை கண்டித்து இம்மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் விஷேட ஆட்சேபனைப் பிரேரனையொன்றை முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
இப்பிரேரனை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இருப்பினும் அரச நிறுவனங்களின் எந்தவொரு தலைமைக் காரியாலயமும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், இற்றைக்குப் 17 வருடங்களுக்கு முன்னர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் முயற்சியினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சித் தலைமைக் காரியாலயம் நிந்தவூரில் நிறுவப்பட்டது.

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலக விவகாரம் மு.கா. வுக்கு பலப்பரீட்சை

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலக விவகாரம் மு.கா. வுக்கு பலப்பரீட்சை
 
தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் 11 நிலையங்களும் சிங்கள பிரதேசங்களில் 6 அல்லது அதற்குக் குறைவான நிலையங்களுமே இயங்கி வருகின்றன. இவற்றுள் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பயிற்சி நிலையங்களிலே 600 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். சிங்களப் பிரதேசங்களில் 200 இற்கும் குறைவானவர்களே கற்கின்றனர். இப்படியிருக்கையில், மாணவர்களும் கிராமிய தொழிற்பயிற்சி நிலையங்களும் குறைவாகவுள்ள ஒரு பகுதிக்கு நிர்வாக அலுவலகத்தை மாற்றுவது – வியாபாரம் நடக்காத ஐயர் தெருவுக்கு ஆட்டிறைச்சிக் கடையை கொண்டு சென்ற கதையாகிவிடாதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
நிந்தவூர் கலீல் ஜிப்ரான்


நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலக இடமாற்றம் தொடர்பான சர்ச்சை இனிதே முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முயற்சிக்கு கைமேல் பலனாக அமைச்சர் வாக்குறுதி அளித்துவிட்டதால் இப்படியான நினைப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் இப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. இப்போதுதான் மிகவும் சிக்கலானதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் மாறியிருக்கின்றது.
அரச சேவைக்குள் இனவாத அரசியலின் தலையீடும் சிறுபான்மை சமூகத்திற்குள் வளர்த்து விடப்பட்டிருக்கின்ற சமூதாய அக்கறையின்மையும் காட்டிக் கொடுப்புக்களும்… தென்கிழக்கு மக்களிற்கு மறைந்த தலைவர் அஷ்ரப் விட்டுச் சென்ற ‘அமானிதத்தை’ அம்பாறைச் சிங்களவர்களுக்கு தவணை முறையில் பறிகொடுக்கும் அபாய நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது.

சனி, 25 ஜனவரி, 2014

சாய்ந்தமருது தோனா ஆற்றில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள் இணைப்பு)

By Afzal On Friday, Jan 24, 2014
ஏ.எம்.ஆஷிப்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது தோனாவில் இன்று நண்பகல் கரையொதுங்கிய இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது 2ஆம் பிரிவு, காரியப்பர் வீதியைச் சேர்ந்த உதுமாலெப்பை முஹம்மட் அப்சான் என்ற 20 வயது நிரம்பிய இளைஞனின் சடலமே இது என அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இந்த இளைஞன் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் தொழில் வாய்ப்புக்காக இன்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிற்கு பயணிக்க இருந்தார் என்றும் இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

வெளிநாடு பயணிக்க இருந்த சாய்ந்தமருது அப்சான் பயணப் பையில் சடலமாக மீட்பு!


(ஏ.எம்.ஆஷிப்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது தோனாவில் இன்று நண்பகல் கரையொதுங்கிய இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Death Bodyசாய்ந்தமருது 2ஆம் பிரிவு, காரியப்பர் வீதியைச் சேர்ந்த உதுமாலெப்பை முஹம்மட் அப்சான் என்ற 20 வயது நிரம்பிய இளைஞனின் சடலமே இது என அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி இந்த இளைஞன் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.

சனி, 18 ஜனவரி, 2014

தொ.ப. அ. சபையின் நிந்தவூர் மாவட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு மாற்ற முயற்சி








நிந்தவூரில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த 16 வருடங்களாக மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமும் அதனோடிணைந்த மாவட்ட நிர்வாக அலுவலகமும் செயற்பட்டு வந்தது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் அயராத முயற்சியால் ஒரு அரச நிறுவனத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் கரையோர பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. அதன்படி, அம்பாறை நகருக்கு வெளியே கரையோர பிரதேசத்தில் அமையப்பெற்ற ஒரிரு மாவட்ட நிர்வாக அலுலகங்களில் ஒன்றாக இது செயற்பட்டு வருகின்றது. 

நிந்தவூர் தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் முயற்சிக்கு அமைச்சர் டலஸ் ஆப்பு!


-சஹாப்தீன், எம்.ஐ.பைஷால்-
images (1)நிந்தவூரில் சுமார் 17 வருடங்களாக இயங்கிவரும் தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு இடமாற்றும் முயற்சியை உடனடியாக கைவிடுமாறு இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

நிந்தவூரிலுள்ள ஹொட்டல்கள், உணவு வழங்குமிடங்கள், விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனை. -பாவனைக்கு உதவாத பலஉணவுப் பொருட்கள் சிக்கின-

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், உணவு வழங்குமிடங்கள், விற்பனை நிலையங்களில் இன்று திடீர் பரிசோதனை நடாத்தப்பட்டதில் பாவனைக்கு உதவாத பல உணவுப்பொருட்கள் சிக்கியதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையின் பணிப்பின் பேரில், நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.திருமதி.தஸ்லீமா பஸீர் தலைமையிலான முப்பது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொண்ட குழு இன்று நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், சாப்பாட்டுக் கடைகள், தேனீர்ச் சாலைகள், மற்றும் உணவு வழங்கும் இடங்கள், மரக்கறிக் கடைகள், பழக் கடைகள் போன்ற இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர்.
இக்குழுவில் பிராந்திய உணவு,மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தக்கீர், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம், நிந்தவூர் பிரதேச பொறுப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜீவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கிழக்கு சுகாதார அமைச்சர் மன்சூரைச் சந்தித்து மகஜர்.


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.எம்.ரி.ஜாரியா தலைமையில், கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரை சம்மாந்துறையிலுள்ள அவரது மக்கள் பணியகத்தில் சந்தித்து, வைத்தியசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும், அத்தியவசியத் தேவைகளையும் எடுத்துக் கூறினர்.
இறுதியில் அவை அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சரிடம் வைத்தியதிகாரி கையளித்தார்.

நிந்தவூர் அல்-மதீனா பாலர் பகல் பராமரிப்பு நிலைய விடுகை விழா.-மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பஸீர் பிரதம அதிதி-

                 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் அல்-மதீனா பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் வருடாந்த விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் நேற்று மாலை நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

பாலர் நிலைய முகாமைதம்துவப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.ஆர்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருந்த கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் திடீரென்று இந்நியா பயணமானதால், அவரது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சுமார் 45 வருடங்களின் பின் அபிவிருத்தியைக் காணும் நிந்தவூர் மேர்சா வீதி.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூரில் பழம்பெருமை வாய்ந்த வீதிகளில் ஒன்றான 'மேர்சா வீதி' சுமார் 45 வருடங்களின் பின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
வெள்ளம் ஏற்படும் காலங்களில் இப்பிரதேச நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால் இப்பிரதேசம் முழுவதும் நீரில் மூழ்கி, இம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது வழமையாகும்.
இந்நிலைமையினை இப்பிரதேச மக்கள் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீலிடம் முறையிட்டதையடுத்து,  மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ரூபா பத்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதி 'கொங்றீட்' வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பைசால் காசீம் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு சமூக நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு. -பிரதம அதிதியாக பைசால் காசீம் எம்.பி பங்கேற்பு-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டிலிருந்து நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள அரச, மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு இலத்திரனியல் உபகரணங்களும், தளபாடங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நிந்தவூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

தொ.ப. அதிகார சபையின் நிந்தவூரில் மாவட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு மாற்ற முயற்சி

நிந்தவூரில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த 16 வருடங்களாக மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமும் அதனோடிணைந்த மாவட்ட நிர்வாக அலுவலகமும் செயற்பட்டு வந்தது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் அயராத முயற்சியால் ஒரு அரச நிறுவனத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் கரையோர பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. அதன்படி, அம்பாறை நகருக்கு வெளியே கரையோர பிரதேசத்தில் அமையப்பெற்ற ஒரிரு மாவட்ட நிர்வாக அலுலகங்களில் ஒன்றாக இது செயற்பட்டு வருகின்றது. 

இம்மாவட்டத்தின் அரச நிர்வாக நகராக திகழும் அம்பாறைக்கு இவ் அலுலகத்தை மாற்றிவிட சில சக்திகள் நீண்டகாலமாக முயற்சி செய்து வந்ததாக அறிய முடிகின்றது. இந்நிலையிலேயே சிங்களப் பிரதேசமான அம்பாறை நகருக்கு மாற்றிவிட இறுதிக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. 

site counter