(ஏ.எம்.ஆஷிப்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது தோனாவில் இன்று நண்பகல் கரையொதுங்கிய இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இந்த இளைஞன் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் தொழில் வாய்ப்புக்காக இன்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிற்கு பயணிக்க இருந்தார் என்றும் இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரியதொரு பயணப் பையில் கட்டப்பட்ட நிலையிலேயே இவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலத்தில் அடி காயங்களும் காணப்படுகின்றன.
ஆகையினால் இந்த இளைஞன் திட்டமிட்டு- அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக