அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 30 அக்டோபர், 2013

மஹிந்த சிந்தனையில் மாற்றுப்பயிர்ச் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.

மஹிந்த சிந்தனையில்
மாற்றுப்பயிர்ச் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நெல்வயல்களில் மூன்றாம் போகப் பயிர் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை இன்று (29)நிந்தவூர் , மாட்டுப்பளைக் கண்டத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியர் எஸ்.எச்.ஏ.நிஹார் தலைமையில் இடம் பெற்ற இவ்வறுவடை நிகழ்வில் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், நிந்தவூர் பிரதேச கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக், பாலமுனை மாவட்ட பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் எம்.ஐ.எம்.நியாஸ், அம்பாரை மாவட்ட உதவி

நிந்தவூரில் பாசிப்பயறு அறுவடை

நிந்தவூரில் பாசிப்பயறு அறுவடை



செவ்வாய், 29 அக்டோபர், 2013

கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சீல் வைப்பு..!

( சௌத்துல் உம்மத் )

டாக்டர் றசீட் தலைமையிலான இயக்குனர் சபையைக் கொண்டு இயங்கிய சம்மாந்துறை பல நோக்கக் கூட்டுறவுச் சங்கம் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் சகல நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இயங்கி வந்த இவ்இயக்குணர் சபை தமது சேவைக் காலத்தில் சமூர்த்திப் பயனாளிகளுக்கு வழங்குவதற்கென்று உலர் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்த வகையில் பலருக்குப் பணம் வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிய வருகிறது. 

அம்பாறை மாவட்ட சமூர்த்தி வர்த்தகக் கண்காட்சியும், விற்பனை நிலையமும் இன்று சம்மாந்துறையில் திறந்து வைப்பு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாறை மாவட்ட சமூர்த்தி வர்த்தகக் கண்காட்சியும், விற்பனை நிலையமும் இன்று சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வர்த்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் வின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத், அம்பாரை மாவட்ட சமூர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹநாயக்க, பிரதேச செயலாளர்களான எம்.ஐ.எம்.தௌபீக், எம்.மன்சூர் ஆகியோருடன் சமூர்த்தி உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூரில் சிப்தொற புலமைப் பரிசில், திரியபியச வீடுகள் கையளிப்பு. -பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு-

               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூரில் 'சிப்தொற' புலமைப் பரிசில்> 'திரியபியச' > இலவச வீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி> எம்.சி.பைசால் காசீம்> மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிந்தவூரில்; சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழா. -பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி பிரதம அதிதி-

நிந்தவூரில்; 
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழா.
-பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி பிரதம அதிதி-
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌhஸ் )



சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நிந்தவூர் சமூர்த்திப் பிரிவினர் நடாத்திய 'சமூர்த்தி கௌரவிப்பு விழா' நேற்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

வளத்தாப்பிட்டி குளம் அபிவிருத்தியும், அப்பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடும். நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் - உயரதிகாரிகளுடன் நேரடி உரையாடல்.

வளத்தாப்பிட்டி குளம் அபிவிருத்தியும், அப்பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடும்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் - உயரதிகாரிகளுடன் நேரடி உரையாடல்.
          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறைப் பிரதேச எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி குளம் அபிவிருத்தியும், அப்பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று(20) மாலை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கவிஞர். எஸ்.ஜலால்டீன் எழுதிய 'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா. -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி-

கவிஞர். எஸ்.ஜலால்டீன் எழுதிய
'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.
                  -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி-
             (ஏ.எல்.ஏறபீக் பிர்தௌஸ்)
கவிஞர்.எஸ்.ஜலால்டீன் எழுதிய ' பூப்படைந்த பூக்கள் ' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று(20) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அஷ்றப் ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் , கவிஞர். மன்சூர் ஏ.காதீர், கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்றப் ஆகியோர் கருத்துரைகள் வழங்க, நூலின் முதற் பிரதியை நூலாசிரியர், பிரதம அதிதி நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கி, நூல் வெளியீடு இடம் பெற்றது.
அதிதிக்கான முதற்பிரதியை இளம் புரவலர் ஏ.சீ.யஹியாக்கானிற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் ' கவிஞர் ஜலால்டீனைப் போன்ற யதார்த்தங்களை தமது மண்வாசனையில் சொல்லக் கூடிய நல்ல கவிஞர்கள் போற்றப்பட வேண்டும். ஊரிற்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித்தரக் கூடிய இவர்கள்; ஊக்குவிக்கப்பட வேண்டும். இக்கவிஞனின் பேனா முனை இச்சமூகத்தின் விடிவிற்கான ஒழிக்கீற்றை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்' எனப் பிரார்த்திக்கிறேன்.' எனத் தெரிவித்தார்.









செவ்வாய், 22 அக்டோபர், 2013

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்முனை வலய முன் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை. -உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் பிரதம அதிதி-

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 
கல்முனை வலய முன் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை.
-உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் பிரதம அதிதி-
          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் வாண்மை விருத்தியை மேம்படுத்தும்  நோக்கிலான பயிற்சிப்பட்டறையொன்று இன்று சனிக்கிழமை தென் கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

புதன், 16 அக்டோபர், 2013

நிந்தவூர் கடற்கரையில் (நிந்தவூர் பீச் ஹொட்டல் முன்பாக) கரையொதுங்கிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் நிந்தவூர் கடற்கரையில்  (நிந்தவூர் பீச் ஹொட்டல் முன்பாக) கரையொதுங்கிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 
இதனைப் பார்வையிட அதிக மக்கள் திரண்டுள்ளனர்.

சவூதி அரேபிய 'நிதாஉல் ஹைறாத்' நிதியுதவியில் 84 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வினியோகம். -மாகாண அமைச்சர் மன்சூர் தலைமையில் நிகழ்வு-

சவூதி அரேபிய
'நிதாஉல் ஹைறாத்' நிதியுதவியில் 84 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வினியோகம்.
  -மாகாண அமைச்சர் மன்சூர் தலைமையில் நிகழ்வு-
       ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சவூதி அரேபிய 'நிதாஉல் ஹைறாத்' (மனித அபிவிருத்திக்கான சர்வதேச ஆணைக்குழு) நிதியுதவியில் 84 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் பெறுவதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (14) சம்மாந்துறையிலுள்ள மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் பணிமனையில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சவூதி அரேபிய 'நிதாஉல் ஹைறாத்' நிறுவனப் பணிப்பாளர் அஸ்சேஷ்.காலித் அத் தாவூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் நிதாஉல் ஹைறாத் உதவிப் பணிப்பாளர்களான அஸ்சேஷ்.இபுனு பஹத், அஸ்சேஷ் இபுனு அலி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.எம்.தௌபீக், யூ.எல்.பசீர், ஏ.எம்.தபீக், சிறுவர் நன்நடத்தை பொறுப்பதிகாரி ஏ.உதுமாலெவ்வை , பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உயரதிகாரிகள், வைத்தியர்கள், மற்றும் கல்விமான்கள், பொது மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
சுமார் ரூபாய் 16 இலட்சம் பெறுமதியான காசோலைகள் இன்றைய தினம் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி எல்லோருக்குமாக வழங்கப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வாறான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் தம்மால் முன்னேடுக்கப்படுமென மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உறுதி அளித்தார்.
இறுதியில் மாகாண அமைச்சர் மன்சூரிற்கு சவூதி அரேபிய 'நிதாஉல் ஹைறாத்' நிறுவனப் பணிப்பாளர் அஸ்சேஷ்.காலித் அத் தாவூத்தினால் நினைவுப் பரிசொன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.








செவ்வாய், 8 அக்டோபர், 2013

ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3)

ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3)

riyadussaliheen image2
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,
ஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம் MP3 ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர்: மவ்லவி K.M. முஹம்மத் முஹையுத்தீன் உலவி
பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை கிளிக் செய்யவும்.
நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு முனையும் தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டு, நினைவில் நிறுத்தி வாழ்வில் கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊரிலுள்ளவர்களுக்கும், இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ் கூறும் மக்களுக்கும் இதனை CD க்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், இன்னும் பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரிய்யாவை பெற்றுக்கொள்ளவும், இறுதியில், மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும், எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக.
புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும், சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்க்கும்போதும், சமையலறையில் இருக்கும்போதுமாக, இப்படி பல நேரங்களிலும், வகைகளிலும் கேட்கலாம். மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம்.
ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் தொகுப்பு. மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் தொகுப்புகளாகக் கருதப்படும், புகாரி, முஸ்லிம், திர்மிதி.. போன்ற கிரந்தங்களிலிருந்து மக்களுக்கு மிகவும் பயன்படும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டவையே இப்புத்தகம்.
Source: tamilaudioislam.com
Image courtesy: satyamargam.com

உழ்ஹிய்யாவின் வரலாறும் அதன் சட்ட வரம்புகளும்


உழ்ஹிய்யாவின் வரலாறும் அதன் சட்ட வரம்புகளும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள்
- காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி



உழ்ஹிய்யாவின் வரலாற்றுப் பின்னணி:
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் இப்றாஹீம் நபியவர்கள் தனது தள்ளாத வயதில் இறைவனால் தனக்கருளப்பட்ட தனது மகனை அறுப்பதாக கனவில் கண்டதை நிறைவேற்ற முனைகிறார்; அவரின் இத்தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவர் தனது மகனை அறுத்துப்பலியிடுவதற்குப் பதிலாக ஒரு ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்களின் இத்தியாகத்தை நினைத்து இறைவனுக்காக அறுத்துப்பலியிடும் ஒரு வணக்கமே இன்று தியாகத்திருநாளாக உருவெடுத்திருக்கிறது.
இது சம்பந்தமான தகவல்களை அல்குர்ஆனின் 37 ஆவது அத்தியாயத்தின் 100 ஆவது வசனத்திலிருந்து 111 ஆவது வசனம் வரை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான்.
நபியவர்களின் காலத்தில் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பலிப்பிராணிகளை வாங்கி கொழுக்க வைத்து பின்னர் பெருநாளன்று அறுத்துப்பலியிடுவார்கள். இது இன்று கிராமங்களில் நடைமுறையிலிருக்கிறது.ஆனால் பெருநகரங்களில் இது சாத்தியமில்லை. எனவே பெருநாளைக்கு ஒன்றிரண்டு தினங்களுக்கு முன்பாக பலிப்பிராணிகளை வாங்கி குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு கொடுப்பது மார்க்கத்தில் தடை இல்லை.
நாங்கள் மதீனாவில் குர்பானிப் பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்துவந்தோம். முஸ்லிம்கள் அனைவருமே (பொதுவாகக் குர்பானிப் பிராணிகளை) கொழுக்க வைத்துவந்தார்கள் என உமாமா இப்னு ஸஹ்ல்(ரலி) கூறினார்.
புகாரி
குர்பானி கட்டாயக்கடமையா?
குர்பானி என்பது ஒரு வலியுறுத்தப்பட்ட சுன்னத் தானே தவிர கட்டாயாக்கடமையில்லை ஆனால் இன்று கடன் வாங்கி குர்பானி கொடுக்கிறார்கள் ஜக்காத், ஹஜ், போன்ற இஸ்லாத்தின் தலையாய வணக்கபழிபாடுகளே கடன் இருக்கும்போது கடனை நிறைவேற்றிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்கிறபோது குர்பானி என்பது கடன் வாங்கி செய்யவேண்டிய வணக்கமல்ல என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆனால் வசதியுள்ளவர்கள் அவசியம் குர்பானி கொடுக்கவேண்டும்.
பலிப்பிராணிகள் எவ்வாறு இருக்கவேண்டும்?
பலிப்பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகமாக இருக்கவேண்டும். வெளிப்படையாக பார்க்கும் போது நொண்டி, குருடு, கொம்பு உடைக்கப்பட்டது, மாறுகண் உடையது, காதுகள் முன்புறமாகவோ பின்புறமாகவோ கிழிக்கப்பட்டது போன்ற குறைகளற்றதாக இருக்கவேண்டும்.
ஒரு முறை நபியவர்கள் எங்களுக்கு முன்னால் எழுந்து நின்று உரையாற்றுகையில் நன்கு தெரியும்படியாக கண் பொட்டையான பிராணி, வெளிப்படையாகத் தெரியும் நோயுற்றிருக்கும் பிராணி, ஊனம் வெளிப்படையாகத் தெரியுமளவிற்குள்ள நொண்டியான பிராணி, எலும்பு மஜ்ஜை பலவீனமான வயது முதிர்ந்த பிராணி ஆகிய நான்கு பிராணிகளை அறுப்பது கூடாது எனத்தெரிவித்தார்கள் என பராஉ பின் ஆஸிஃப் (ரலி) அறிவிக்கிறார்
அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்
கூர்ந்து கவனித்து கண்ணிலும் காதிலும் குறை இல்லாத பிராணியையே குர்பானி கொடுக்கத் தேர்ந்தெடுக்கவேண்டும் எனவும் காதின் ஓரம் கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கிற பிராணியையும் பின் காது கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கிற பிராணியையும் காதுகள் இரண்டும் கிழிக்கப்பட்டு பிளந்திருக்கிற பிராணியையும் முன்பற்கள் விழுந்து விட்ட பிராணியையும் குர்பானி கொடுக்கக் கூடாது என்று எங்களுக்கு நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என அலீ (ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்
காலும் முட்டியும் கண்ணைச் சுற்றியுள்ள இடமும் கறுப்பு நிறமாயுள்ள செம்மறி ஆட்டுக் கிடாய் ஒன்றை குர்பானி கொடுப்பதற்காக கொண்டு வருமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்…
முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள் என அனஸ் (ரலி) கூறினார்.
புகாரி 5565.
பலிப்பிராணிகளின் வயது:
“இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்ப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக அவர் ஒதுக்கிய மாமிசமாகும். அது குர்பானியில் சேராது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் என்று அழைக்கப்படும் அன்ஸார்களில் ஒருவர் “இறைத்தூதர் அவர்களே! நான் (முன்பே) அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டைவிடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்துக்கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று விடையளித்தார்கள். பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
புகாரி 965, 968, 976, 5557, 5560
மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் முஸின்னாவைத் தான் கொடுக்கவேண்டும் என்று விளங்குகிறது. முஸின்னா என்பது பால் பற்கள் விழுந்து புதுப்பற்கள் இரண்டு முளைத்து இரண்டு வயது முழுமையடைந்திருக்க வேண்டும். ஒட்டகங்களுக்கு ஐந்து வயதிலும் ஆடு மாடுகளுக்கு இரண்டு வயதிலும் பற்கள் முளைக்கும். இதிலிருந்து ஒட்டகம் ஐந்து வயதும் ஆடு மாடுகள் இரண்டு வயதும் இருக்கவேண்டும்.
மேலும் பெண் இனங்களை குர்பானி கொடுப்பதற்கு நபிமொழிகளில் எவ்வித தடையும் வரவில்லை. ஆனால் கன்றுகளுக்கு பால் தரும் பிராணிகளை குர்பானி கொடுக்க நபிமொழியில் தடைவந்திருக்கிறது;
ஒரு நபித்தோழர் நபியவர்களுக்கு ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுக்கும் போது, “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கை செய்கிறேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்
எப்போது கொடுக்கவேண்டும்? தொழுகைக்கு முன்பா? பிறகா?
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே ‘உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்.” என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் (ரலி), “இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்” என்றார். அப்போது நபி (ஸல்) “உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்” என்று கூறினார்கள். அப்போது அவர் “இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். “ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று நபி(ஸல்) விடையளித்தார்கள் என பராஃ(ரலி) அறிவித்தார்.
புகாரி 955.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். “தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்ரை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்றார்கள் என ஜுன்தப் (ரலி) அறிவித்தார். புகாரி 985.
எனவே முற்கூறப்பட்ட நபிமொழிகளில் தொழுகைக்குப்பிறகு தான் குர்பானி கொடுக்கவேண்டும் என விளங்குகிறது. மேலும் ‘அய்யாமுத் தஷ்ரீக்’ என்று சொல்லப்படுகின்ற துல் ஹஜ் பிறை 11, 12, 13, ஆகிய தினங்களிலும் குர்பானி கொடுக்கலாம்.
கூட்டுக் குர்பானி:
நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஹுதைபிய்யா ஆண்டில் ஒட்டகம் மற்றும் மாட்டை ஏழுநபர்கள் சார்பாக குர்பானியாகக் கொடுத்தோம் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்.
முஸ்லிம்.
நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வரவே ஒருமாட்டில் ஏழுநபர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 நபர் வீதமும் நாங்கள் கூட்டு சேரந்தோம் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்.
மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் மாட்டில் ஏழு நபரும் ஒட்டகத்தில் ஏழு நபரும் அல்லது பத்து நபரும் கூட்டு சேர்நது குர்பானி கொடுக்கலாம் என விளங்குகிறது.
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்கவேண்டியவை:
துல்ஹஜ் பிறை கண்ட முதல் நாளிலிருந்து பிறை 10 அல்லது அதற்கு அடுத்த மூன்று நாட்களில் குர்பானி கொடுக்கும் வரை குடும்பத் தலைவர் தலைமுடி, நகங்களை எடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறையைக்கண்டு குர்பானி கொடுக்கும்வரை நகம் தலை முடி ஆகியவற்றை வெட்டவேண்டாம் என நபியவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம், நஸயீ.
மேலும் குடும்பத்திலுள்ள அனைவரும் மேற்கூறப்பட்ட நிபந்தனைகளைப் பேண வேண்டும் என ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் இதற்கு நபிமொழியில் எத்தகைய ஆதாரங்களும் காணப்படவில்லை. அப்படியிருந்தால் நபியவர்கள் கட்டளையிட்டிருப்பார்கள். குடும்பத்தலைவர் மட்டுமே மேற்கூறப்பட்ட நிபந்தனைளைப் பேண வேண்’டும்.
குர்பானி கொடுக்கும் போது கவனிக்கவேண்டியவை:
கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளவேண்டும். ‘அல்லாஹ்வின் நாமம்’ கூறப்படவேண்டும். பலிப்பிராணிகளை வேதனைப்படுத்தக்கூடாது. அவற்றிற்கு சிரமம் தரக்கூடாது.
ஆயிஷாவே கத்தியைக் கொண்டு வா. அதை கல்லில் கூர்மையாக்கு என நபியவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன் என அனஸ்(ரலி) கூறினார்.
புகாரி 5558.
ஆட்டையோ மாட்டையோ அறுப்பது போல ஒட்டகத்தை அறுக்கக்கூடாது அதை நிற்க வைத்து ஒரு காலை கட்டி அதன்பிறகு அறுக்கவேண்டும். பின் வரும் நபிமொழி அதற்கு ஆதாரமாக இருக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
புகாரி 1712.
“இப்னு உமர்(ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, “அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை!” என்று கூறியதை பார்த்தேன்” என ஸியாத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.
புகாரி 1713.
குர்பானி இறைச்சியை பங்கிடுதல்:
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள், அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக் கிறோம், உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது, எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்ல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக, பிறகு அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக்
கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும் இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அல் குர்ஆன் 22:36
மக்களிடத்தில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது குர்பானி இறைச்சியை மூன்று பங்காக ஆக்கி ஒருபங்கை தனக்காகவும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் மூன்றாவது பங்கை உறவினர்களுக்கும் வழங்கவேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அப்படி பங்கிடவேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.
நபி (ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
புகாரி 1717.
நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள் அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன் என அலீ(ரலி) அறிவித்தார்.
புகாரி 1718.
நபி (ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களை பலியிடுவதற்கு) என்னை நியமித்தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் பங்கிட்டுவிடுமாறும் எனக்குக்கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். இன்னொரு அறிவிப்பில் “பலிப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என அலீ(ரலி) கூறினார் என உள்ளது.
புகாரி 1716
நபி(ஸல்) அவர்கள், “உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்” என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் “இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் “நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்” என்று பதிலளித்தார்கள் என ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்
புகாரி 5569.
மேற்கூறப்பட்ட ஆதாரங்களிலிருந்து ஏழைகள் போன்ற தேவையுடை யாருக்கும் குர்பானி இறைச்சியை வழங்கலாம் எனத் தெரிகிறது. மேலும் தோலையும் இறைச்சியையும் உரித்தவருக்கு கூலியாகக் கொடுக்கக்கூடாது எனவும் அவற்றையும் ஏழைகளுக்கே வழங்கவேண்டும் எனவும் தெரிகிறது.
குர்பானியின் நோக்கம்:
பின்வரும் வசனத்தில் அதன் நோக்கத்தை இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
(எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை, ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும், அல்ல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான், ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!
அல் குர்ஆன் 22:37
எனவே குர்பானி உட்பட எந்த வணக்கமாக இருந்தாலும் அதில் இஹ்லாஸ் எனும் உளத்தூய்மை அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு வழிபாடுகள் செய்யவேண்டும்.
ஆக்கம்:
காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி M.A.
ஆசரியர் அல் ஜாமிஅதுல் ஃபிர்தௌஸியா அரபிக் கல்லூரி
இமாம் IRGT பள்ளிவாசல்
நாகர்கோவி
----------------------------------------------------------
The person that send it via email: Suhail Ali - Nintavur

திங்கள், 7 அக்டோபர், 2013

உழ்ஹிய்யா வழிகாட்டல் - 2013 ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!

 உழ்ஹிய்யா வழிகாட்டல் - 2013

ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!
01 udhiyahதற்போதைய நாட்டின் சூழ்நிலையில் சகவாழ்வையும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்திற்கொண்டு எமது அனைத்து விடயங்களிலும் நிதானமாகவும், கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல அரச சட்ட-விதி முறைகளுக்கமை அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பது ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டியுள்ளது.
அந்த வகையில் இம்முறை உழ்ஹிய்யாவின்போது பின்வரும் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
  1. உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா முஅக்கதாவாகும்
  2. எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக்காகப் பயன்படுத்த முடியும். எனினும் பௌத்த, இந்து மக்களிடையே மாடு அறுப்பதற்கு எதிரான கருத்து வலுப்பெற்றிருப்பதால், முடியுமானவரை உழ்ஹிய்யாவுக்காக ஆடுகளை பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
  3. அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிருகங்களை ஜீவகாருண்யத்துடன் நடத்தல் வேண்டும். அவற்றைக் கட்டி வைக்கும்போது உரிய இடைவெளி விடுவதுடன், அவற்றிற்கான நீர் மற்றும் தீனியை முறையாக வழங்குவது அவசியமாகும்.
  4.  விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (Transportation) பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது; 
    1. ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(GS) மிருகத்தின் உரிமை அத்தாத்சிப்படுத்தப்படல் வேண்டும். 
    2. அதனையடுத்து மிருக வைத்தியரின் (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபர சீட்டு (Cattle Voucher),சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
    3. மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
    4. மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
    5. மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.   அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:
  5. table
     (இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 - 2009.11.26) 

  6. குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
  7. குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
  8. வணக்கஸ்தலங்களில் விலங்குகளை அறுப்பது தொடர்பாக ஏனைய மதத்தவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில்udhiyya பள்ளிவாசல்களில் ஆடு, மாடுகள் குர்பான் செய்யப்படுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.  
  9.  உங்களின் பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  10. மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு. ஒரு மிருகத்தை குர்பானி செய்யும் போது ஏனைய மிருகங்கள் காணாமலும், உணர முடியாமலும் வைத்திருப்பது அவசியமாகும்.
  11. குர்பானி செய்யும் முன் கத்தியை நன்கு கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். குர்பான் செய்யாப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்புகால்இரத்தம், சாணம், தோல்) உரிய முறையில் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
  12. குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். போயா தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதையும், பங்கிடுவதையும், வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும்  முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  13. ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்.
இந்த அறிவித்தல் அனைத்து மஸ்ஜித்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் உங்களது பள்ளிவாசல் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்குமாறும் மஸ்ஜித் நிருவாகிகள் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர். 

மாகாண அமைச்சர் மன்சூரின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு.

மாகாண அமைச்சர் மன்சூரின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு.
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

'ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றுவோம் . அவர் துயர் துடைப்போம்' எனும் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கும், விளையாட்டுக் கழகங்களுக்கும், சமூக சேவை மன்றங்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியம்,சமூக சேவை,விளையாட்டுத் துறை, சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு,கூட்டுறவு அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொருட்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.பசீர் மாஸ்டர், ஏ.எம்.தபீக் , பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சுமார் ரூபாய் 20 இலட்சம் பெறுமதியான சூரிய ஒழியில் இயங்கும் உபகரணங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்ரிக் வீட்டுத் தளபாடங்கள், இரும்புக் குழாய்கள், சீமெந்துப் பைகள் எனப் பல்வேறு விதமான பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.








ஞாயிறு, 6 அக்டோபர், 2013

சர்வதேச சிறுவர் தினம் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினம்
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சர்வதேச சிறுவர் தினம்  நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரி அதிபர் எஸ்.அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் நீதியமைச்சின் சிறுவர் பிரிவுக்கான வளவாளர் எம்.அப்துல் கப்பார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இங்கு சிறுவர்களை ஊக்குவிக்கக் கூடிய விளையாட்டுக்கள் பலவும், கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இறுதியில் பாடசாலைச் சிறுவர்களுக்கு பரிசுகளும், இனிப்புப் பண்டங்களும் வழங்கி, கௌரவிக்கப்பட்டது.





சர்வதேச சிறுவர் தினம் நிந்தவூர் அல்-மினா பாடசாலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினம்
நிந்தவூர் அல்-மினா பாடசாலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சர்வதேச சிறுவர் தினம் நிந்தவூர் அல்- மினா பாடசாலையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வுகளின் இறுதியில் சிறுவர்கள் ஊர்வலமொன்றும் இடம் பெற்றது.





சர்வதேச சிறுவர் தினம் நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினம்
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சர்வதேச சிறுவர் தினம் நிந்தவூர் அல்- அஸ்றக் தேசியக் கல்லூரியிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம். சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளின் இறுதியில் சிறுவர்கள் ஊர்வலமொன்றும் இடம் பெற்றது.



site counter