தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
கல்முனை வலய முன் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை.
-உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி பீடாதிதபதி. எஸ்.இராஜேந்திரன், உப பீடாதிபதி. திருமதி.ஜுவனேஸ்வரி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கினர்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் கருத்துத் தெரிவிக்கையில் ' வெளி நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் முன்பள்ளிகளினதும், முன்பள்ளி ஆசிரியைகளினதும் தரங்கள் பேணப்பட வேண்டும். உண்மையில் முன்பள்ளிகளின் முக்கியத்துவம் இன்றியமையாததாகும். முன்பள்ளிகளுக்குச் செல்லாத அனேக மாணவர்களிடத்தில், அவர்களது நடத்தைக் கோலங்கள் வேறுபட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே முன்பள்ளிகள் விடயத்தில் அக்கரை காட்டவேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டிருக்கின்றது' எனத் தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுமானித்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் (Pஐஆ) முதுமானி பட்டப் படிப்பிற்கான முகாமைத்துவத் திறன் விருத்தித் திட்டத்தை அமூல்படுத்துவதற்காக பொது நிருவாக முகாமைத்துவ முதுமானிப்பட்டப்படிப்பினைத் தொடரும் பீ.ரி.ஏ.ஹசன் அவர்களின் முதுமானிப் பட்டத்திற்கான ஒரு செயற் திட்டமாகவே மேற்படி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றி வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னர் ஒருபோதுமில்லாத வகையில் போக்கு வரத்து வசதிகள், பகலுணவு, காலையுணவு, மற்றும் அவர்களுக்குத் தேவையான பல்வேறு வசதிகள் அனைத்தையும் மேற்படி ஏற்பாட்டாளர்கள் குழு செய்து கொடுத்திருப்பது முன்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்துள்ளதாக நிந்தவூர் அல்-மதீனா முன்பள்ளி முதன்மை ஆசிரியை செல்வி.அசனார் அறிசியா தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
செப்டெம்பர் 28 தொடக்கம் நவம்பர் 09 வரை நடைபெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறைக்கான முழுச் செலவுகளையும் ஹையறு இன்ஜினியறிங் குறூப் ஒப் கொம்பனி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் இஸட்.எம்.ஹையறு பொறுப்பேற்றிருப்பது பாராட்டத்தக்கதொரு சமூகப்பணியாகும் என கல்வியலாளர்களும், சமூக சேவகர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக