( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாறை மாவட்ட சமூர்த்தி வர்த்தகக் கண்காட்சியும், விற்பனை நிலையமும் இன்று சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் வின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத், அம்பாரை மாவட்ட சமூர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹநாயக்க, பிரதேச செயலாளர்களான எம்.ஐ.எம்.தௌபீக், எம்.மன்சூர் ஆகியோருடன் சமூர்த்தி உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களினதும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களைக் காணக் கூடியதாக இருந்தது என்றும், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதமின்றி மூவின மக்களும், அதிகாரிகளும் , இவ்வர்த்தகச் சந்தையில் பொருட் கொள்வனவிலும், விற்பனையிலும் ஈடுபட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது என்று எமது பிராந்திய செய்தியாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தெரிவிக்கிறார்.
அமைச்சர் மன்சூர் இங்கு உரைநிகழ்த்துகையில் 'மகிந்த சிந்தனையில் ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றக் கூடிய நல்ல பல திட்டங்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்க விடயமாகும். அதில் ஒன்று தான் சமூர்த்திக்கு சக்தி கொடுக்கின்ற திவிநெகும வேலைத்திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் நமது மக்கள் தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதோடு, நாட்டின் பொருளாதார விருத்திக்கும் பங்களிப்புச் செய்யக் கூடியவர்களாக மாறிவிடுகின்றனர். எனவே, இவ்வாறான நல்ல பல திட்டங்களை நடை முறைப்படுத்தி வரும் நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நீண்ட ஆயூள் வேண்டிப் பிரார்த்திப்போம்' எனக் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக