அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சீல் வைப்பு..!

( சௌத்துல் உம்மத் )

டாக்டர் றசீட் தலைமையிலான இயக்குனர் சபையைக் கொண்டு இயங்கிய சம்மாந்துறை பல நோக்கக் கூட்டுறவுச் சங்கம் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் சகல நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இயங்கி வந்த இவ்இயக்குணர் சபை தமது சேவைக் காலத்தில் சமூர்த்திப் பயனாளிகளுக்கு வழங்குவதற்கென்று உலர் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்த வகையில் பலருக்குப் பணம் வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிய வருகிறது. 


இவர்களில் கல்முனையைச் சேர்ந்த நபரொருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே சங்கம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது போன்று இன்னும் பலர் முறைப்பாடு செய்யப் போவதாகத் தெரியவருகிறது.

இதே வேளை டாக்டர் றசீட் தலைமையிலான மேற்படி குழுவினர் அண்மையில் நடைபெற்ற சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பதிய இயக்குனர் சபையைத் தெரிவதற்கான தேர்தலில்  மண்ணின் மைந்தனும், கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான எம்.ஐ.எம்.மன்சூரையும், அவரது குழுவினரையும் எதிர்த்து, வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்து மீண்டும் இயக்குனர் சபையைக் கைப்பற்றியுள்ளனர்.

பாவம் ! ஆரம்பமே சீல் வைப்பென்றால், சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை இவ்வியக்குனர் சபையினர் இழுத்துச் செல்வார்களா? இல்லை இடையில் விட்டு விட்டு ஓட்டம் பிடிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போமே!!??!!??





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter