அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நிந்தவூரில்; சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழா. -பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி பிரதம அதிதி-

நிந்தவூரில்; 
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விழா.
-பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி பிரதம அதிதி-
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌhஸ் )



சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நிந்தவூர் சமூர்த்திப் பிரிவினர் நடாத்திய 'சமூர்த்தி கௌரவிப்பு விழா' நேற்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


அம்பாரை தலைமைபை;பீட சமூர்த்தி முகாமையாளர் எம்.அச்சி முகம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம்> மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்> பிரதேச சபைச் செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல்> பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கடந்த 2010> 2011> 2012ம் ஆண்டுகளில் வறுமையைப் போக்குவதில் அதிக அக்கரை கொண்டு> மிகத் திறமையாக செயற்பட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாராட்டுப்பத்திரம்> நினைவுச் சின்னம்> பரிசுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி 'ஏழை மக்களின் வறுமையைப் போக்கக் கூடிய திவிநெகும திட்டத்தை எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் எதிர்க்கவில்லை. இது ஒரு நல்ல திட்டம். இதனை செயற்படுத்துகின்ற அதிகாரத்தை மாகாண சபைகளுக்குக் கொடுக்க வேண்டுமென்றே நாம் கூறி வந்தோம். இத்திட்டத்தில் 14 விடயங்களைத் திருத்த வேண்டுமென்று நாம் பொருளாதார அமைச்சர் பசீலிடம் சூறியிருந்தோம். அதனை அவரும் ஏற்றுக் கொண்டார்' எனத் தெரிவித்தார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter