அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

நான்காவது இறுதிப் போட்டி குறித்து பெருமையடைகிறோம்: மஹேல



இலங்கை அணி அண்மைக்காலத்தில் நான்காவது உலகக் கிண்ணமொன்றின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளமை தொடர்பாகப் பெருமையடைவதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அணியிலுள்ள அனைவரும் இந்தப் பெருமையான உணர்வைக் கொண்டிருப்பதாகவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

இலங்கை அணி மஹேல ஜெயவர்தனவின் தலைமையில் 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிகள், 2009ஆம் ஆண்டு உலக டுவென்டி டுவென்டி உலகத் தொடர் ஆகியவற்றிற்குத் தகுதிபெற்றிருந்ததோடு, 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு குமார் சங்கக்காரவின் தலைமையில் தகுதிபெற்றிருந்தது.
தற்போது இலங்கை அணி நான்காவது உலகத் தொடரொன்றின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, வெற்றிகரமான குழுவொன்றின் அங்கமாகக் காணப்படுவதில் இலங்கை வீரர்கள் அனைவரும் பெருமையடைவதாகவும், இதுவரை உலகக்கிண்ணமொன்றை வெற்றிகொள்ளாத போதிலும், நான்கு இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளமை குறித்துப் பெருமையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

நான்கு இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றமை ஆச்சரியமானது எனத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, ஒரு வீரரின் காலத்தின் ஓர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதே அதிர்ஷ்டகரமானது எனத் தெரிவித்தார்.

இலங்கை அணி இதுவரை பங்குபற்றிய 3 இறுதிப் போட்டிகளில் ஒன்று பார்படோஸிலும், ஒன்று இங்கிலாந்திலும், ஒன்று மும்பையிலும் இடம்பெற்றிருந்த நிலையில், முதன்முறையாக இலங்கையில் ஓர் இறுதிப் போட்டியில் பங்குபெறவுள்ள நிலையில் இந்த இறுதிப் போட்டியை வித்தியாசமான முறையில் எதிர்கொள்ள எதிர்பார்ப்பதாக மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானிடம் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போது அன்ஜலோ மத்தியூஸ், அஜந்த மென்டிஸ் ஆகியோர் இளைய வீரர்களாகக் காணப்பட்டார்கள் எனத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, தற்போது அணியிலுள்ள அனைவரும் அதிகமான டுவென்டி டுவென்டி போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில் இறுதிப் போட்டி குறித்து எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter