இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தம்புள்ளை பிரதி மேயர் கைது
வெள்ளிக்கிழமை, 05 ஒக்டோபர் 2012
100,000 ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் தம்புள்ளை மாநகரசபையின் பிரதி மேயர் (ஐ.ம.சு.கூ) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம் தற்போது விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இவர் இலஞ்சம் வாங்கியதற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.(மகேஷ் கீர்த்திரட்ன)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக