பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் உயர்ஸ்தானிகராலயம் நேற்று வியாழக்கிழமை தாக்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கோனிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கையர்களின் உரிமையாகும். எனினும் உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேச்சாளர் குறிப்பிட்டார்.
பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டமை தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மட் சபியூர் ரஹ்மானை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து முறையிடவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக