அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 4 அக்டோபர், 2012

தன்னை வளர்த்த பஸ் சாரதியைத் தேடி CTB பஸ்களில் பயணிக்கும் குரங்கு!


தன்னை வளர்த்த பஸ் சாரதியைத் தேடி CTB பஸ்களில் பயணிக்கும் குரங்கு!

-முஹம்மத் பத்ஹுல்லா-
தனக்கு உணவளித்து உபசரித்து வந்த பஸ் சாரதியைத் தேடி CTB பஸ்களில் குரங்கு ஒன்று பயணித்து வருகிறது.
கல்முனை பஸ் தரிப்பிடத்தில் பல வருடங்களாக இந்த குரங்கு வசித்து வருகிறது. ஆனால் அதிசயம் என்னவென்றால் இக்குரங்கு CTB பஸ் வண்டிகளில் மாத்திரமே பயணித்து வருகிறது.
இது ஏன் என்று கல்முனை CTB பஸ் சாரதி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது;
இந்த குரங்கை உணவு கொடுத்து வளர்த்தவர் எமது CTB பஸ் சாரதி ஒருவர்தான். ஆனால் அந்நபர் இறந்து விட்டார்.
அன்றிலிருந்து இக்குரங்கு CTB பஸ்களிலேயே பயணித்து வருகிறது. எங்கு சென்றாலும் மீண்டும் ஒரு CTB பஸ்ஸில் இக்குரங்கு கல்முனை பஸ் நிலையத்தை வந்து சேர்ந்து விடும்.
எந்த CTB பஸ் ஆயினும் இந்த குரங்கு அடிக்கடி சாரதியின் இருப்பிடத்தை எட்டிப்பார்க்கிறது.
சாரதியின் மரணத்திற்கு பிறகும் இவ் ஐந்தறிவு ஜீவன் அந்நபரை தேடிக்கொண்டிருப்பதனானது அதிசயமான ஓர் விடயமாகும்.
மக்கள் விருது பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான ITN அடபட்டம (Atapattama) நிகழ்ச்சியின் ஊடாகவும் இக்குரங்கு பிரசித்தம் அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter