அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 31 டிசம்பர், 2012

இந்தியப் பெண்கள் அனைவரும் பர்தா அணிய வேண்டும் – அருணகிரிநாதர்


Arunakiri

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்.
இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.
இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும்.
மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளின் உள்ளக் குமுறல்கள்; தலைமை கண்டுகொள்ளுமா?




Metro
-அஸ்ரப் ஏ சமத்-
முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளின் உள்ளக் குமுறல்கள் நேற்றை 24வது மாநாட்டில் அவர்கள் தலைமைத்துவத்துக்கும் உயர் பீடத்துக்கும் வேதனையில் தெரிவித்த விடயங்கள்
அக்கரைப்பற்று தவம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி அரசு சுனாமியினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்காமல் அம்பாறை அரசாங்க அதிபர் உட்பட அரசாங்கம் கடந்த 2 வருடமாக இழுத்தடிப்ப்பு செய்து வருகின்றது. இதற்காக கடந்த வாரம் அக்கரைப்பற்றில் ஒர் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டததிலாவது இப் பிரச்சினை பேசப்படுவதில்லை.
இதனைப் பற்றி பேசுவதற்கு முஸ்லீம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பிதலும் விடுக்கப்படுவதில்லை. அங்குள்ள நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளடக்கப்படுவதும்மில்லை.
அட்டாளைச்சேனையில் திவிநகுமு பட்டதாரிகளை நிரந்தர நியமணத்தின்போது நூற்றுக்கு நூறு வீதம் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு நியமணம் வழங்கபட்பட்டது. இப்பட்டியலில் முஸ்லீம் காங்கிரஸ் பட்டதாரிகளுக்கு பழிவாங்கள் நடைபெற்றது.
முஸ்லீம் காங்கிரஸ் நூற்றுக்கு நூறு வீத ஆதரவாளர்களைக் கொண்ட கிரமமான பாலமுனையைச் சோந்த ஒருவர் இலங்கை போக்குவரத்துச் சபையில் நியமணம் பெற்றுள்ளார். அவர் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் சேவையாற்றுகின்றார். அவரை கிழக்கு போக்குவரத்து சபைக்கு இடமாற்றம் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தார்.
ஆனால் அவர் வினயமாகக் கேட்டுக்கொண்ட விடயம் என்னவென்றால் ஒருபோதும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அல்லது அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக எனக்கு இடமாற்றம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். வேறு வழியில் முயற்சிக்கவும் என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்த அரசில் முஸ்லிம் காங்கிரஸின் பெயரையே சொல்லவேண்டாம் என கட்சியின் போராளி சொல்லக்கூடிய அளவுக்கு இந்தக் கட்சி போராளிகள் பழிவாங்கப்படுகின்றனர்.
திருக்கோவில் பொத்துவில் கரங்கோ, வாழைச்சேனைப் பகுதிகளில் முஸ்லீம்களின் நிலப்பிரச்சினைகள் இன்னும் தீர்ககப்படவில்லை. சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை முஸ்லீம் மாணவர்கள் கூடுதலாக சித்தியடைந்தாலும் அதனை முஸ்லீம் கங்கிரஸ் தலைவர் நீதியமைச்சராக இருந்தாலும் அவரது மண்டையில் இதனை போட்டு துவேசம் பேசுகின்றனர். என அக்கரைப்பற்றைச் சேர்ந்த தவம் தெரிவித்தார்.
முசாஜித் மௌலவி-வன்னி
இன்று மண்னார் போன்ற பகுதியில் வெள்ளம் மக்கள் பெரிதும் துண்பப்படுகின்றனர். இந்தத் தலைமைத்துவம் இங்கிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றதா ? அம் மக்களுக்கு ஏதாவது நிவாரணத்தை பெற்றுக் கொடுத்ததா?
முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் மண்னார் சிறையில் வாடுகின்றார் அவாகளுக்காக ஒரு சட்டத்தரணியையாவது மண்ணார் நீதிமன்றத்துக்கு இந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவம் அனுப்பி வைத்ததா? அல்லது அவரது கையடக்கத் தொலைபேசியிலாவது பேசமுடியுமா ? ஆனால் இக் கட்சிசை ஆரம்பித்த மர்ஹூம் அஸ்ரபிற்காக நான் இறுதி வரை இக் கட்சியில் இருந்தே உயிர் துறப்பேன் எனக் கூறினார். இங்கு வெளிப்படையாக பேசுவதெல்லாம் இந்த தலைமைத்துவம் இதனைக் கேட்டு கட்சி போராளிகளது உள்ளக்குமுரல்களை உணர்ந்து தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன ஆக்ரோசமாக பேசினார்
நஜீம் – திருகோணமலை
திருகோணமலையில் மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். அண்மையில் குச்சவலிப்பிரதேசத்தில் படாசாலை விடயமாக அதிபர் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கிழக்கு முதலமைச்சரினால் பழிவாங்கப்பட்ட விடயத்தை விவரித்துக் கூறப்பட்டது. குச்சவெலிப் பிரதேசம் நூறுவீதம் முஸ்லீம் காங்கரஸ் ஆதரவாளர்கள் என்றதனால் நாங்கள் பழிவாங்கப்படுகின்றோம். இதற்காக முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சா ஆசனத்தில் நஜீப் மஜீதை அமர்த்தினீர்கள்.
புஞ்சிநிலமே பிரதியமைச்சர் திருமலையில் 3 சிங்களக் கிராமத்தினை உட்படுத்தி நகரசபையில் 53 உறுப்பினர்களாக கூட்டுவதற்கு சிங்களக் குடியேறறக் கிராமத்தை உறுவாக்கி வருகின்றார்.
1965ல் நீதிமன்றம் இருந்த காணியை தொல்பொருள் உள்ள பிரதேசம் என்ற போர்வையில் 9 அரை ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளனர். இப் பிரதேசத்தில் 1521ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் முஸ்லீம்கள் வாழ்ந்த பிரதேசத்தில் முஸ்லீம் பாடசாலை ஒன்றை அமைத்துக் கொடுத்த வரலாறு உள்ளது.
எல்லை நிர்ணயம் என்ற போர்வையில் பல்வேறு எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. திருமலை மாவட்டத்திற்கு பிரதியமைச்சரோ அல்லது மாகாண அமைச்சோ முஸ்லீம் காங்கிரஸ் வழங்கவி;ல்லை.
இப்படி இந்த ராஜபக்ச அரசில் நாம் பழிவாங்கப்படுகின்றோம். நாம் தொடர்ந்து இந்த அரசில் இருப்பதா இல்லையா என்பதை தலைமைத்துவமும் அதி உயர்பீடமும் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.
ஏ.எல்.எம் ஜப்பார் மரைக்கார் – புத்தளம்
புத்தளத்தில் மறைந்த எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் செய்த சேவைக்குப் பிறகு அங்கு எவ்வித அபிவிருத்தியும் நடைபெறவில்லை. அஸ்ரப் சேர் அவர்கள் புத்தளம் சாஹிராக் கல்லூரிக்கு ஒரு கட்டத்தினை நிர்மாணித்துக் கொடுத்தார். கட்சிக் கூட்டங்கள் மற்றும் தலைவர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியில் இருந்து ஒரு சதமேனும் அப்பிரதேசத்துக்கு வழங்கப்படுவதுமில்லை என தெரிவித்தார்.
ஜலால்தீன் – சாய்ந்தமருது
வவுனியாவில் நடைபெற்ற பேராளர் மாநாட்டுக்குப்பிறகு 1 அரை வருடத்திற்குப் பிறகு இன்று இங்கு ஒன்று கூடியுள்ளோம். நாம் ஆகக் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது பேராளர் மாநாட்டை நாட்டின் பல்வேறு பிரதேசத்திற்கும் சென்று நடத்த வேண்டும். இங்கு குழுமியிருக்கின்ற ஒவ்வொருவரும் தமது மணக்குமுரல்களுட்ன் இங்கு வந்திருக்கின்றார்கள். நமது சமுகத்தின் பிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்ந்த பாடில்லை.
நளீம் – மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 ஆயிரம் வாக்குகளை எடுத்த முஸ்லீம் காங்கிரஸ் தற்பொழுது 8ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இக் கட்சி பின்தள்ளப்பட்டு வந்துள்ளது. இதற்கு காரணம் என்ன? அடிமட்ட போராளிகள் எல்லோரும் வெறுப்படைந்துள்ளார்கள்.
திவிநகும திட்டத்திலும் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம். கட்சியின் ஆதரவாளரது கடை எரிக்கப்பட்டது அதனை இந்த தலைமைத்துவம் வந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுத்ததா?
ஆனால் என்னதான் சொன்னாலும் இந்தக் கை அந்த மரத்திற்கே வாக்களிகக் பழகிவிட்டது. இந்தக் கட்சியை யாராளும் அழிக்க முடியாது. எமது எதிர்கால சந்ததியினருக்காக இந்தக் கட்சியை நாம் வளர்த்து எடுத்தல் வேண்டும்.
றம்சி -கம்பஹா
கிழக்குப் பிறகு அடுத்து வரும் மேல்மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக மேல்மாகணததில் முஸ்லீம் காங்கிரஸ் திகழப்போகின்றது. அதற்காக களுத்துறை கம்பஹா கொழும்பு போன்ற மாவட்டத்தில் இரண்டாவது சக்தியாக முஸ்லீம் சமுகம் வாழ்ந்து வருகின்றது. அதற்காக கிழக்கு சகோதரர்களே நீங்கள் பொறுத்திருங்கள். கம்பஹா மாவட்டத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லீம் காங்கிரசின் அலட்சியத்தினாலேயே அத்தணகல்லை உள்ளுராட்சித் தேர்தலில் தேர்தல் பட்டியல் நிராகரிக்கப்பட்டது.
களுத்துறை பிரதிநிதி
இனத்துவேசம், முஸ்லீம்களது பள்ளி உடைப்பு போன்ற விடயங்களில் முஸ்லீம் காங்கிரசின் செயற்பாடு எனன? நீங்கள் எடுத்த தீர்மாணம் என்ன? பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க சரியா சட்டம் பற்றி பேசியதற்கு முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் யாராவது வாய்திறந்து பேசினீர்களா?

அதிகாரப்பகிர்விற்கான படிமுறைகளைக் கீழறுப்புச் செய்யும் செயல்களை எதிர்ப்போம்; மு. கா வின் எட்டுத் தீர்மானங்கள்!



SLMC2
2012.12.29 ம் திகதியன்று நடைபெற்ற ஸ்ரீpலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர்களின் 24வது மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஸ்ரீலங்கா பல்லின, பலமத, பலமொழி கொண்ட பன்முகமானதென்றும் பிளவுபடாது ஐக்கியப்பட்டு எல்லா சமூகங்களும் தீர்மானம் எடுப்பதில் முறையான பங்கேற்பின் மூலம் சமமாக வாழமுடியுமென்றும், அரச அதிகாரத்தை திருப்தியான அதிகாரப்பகிர்வின் மூலம் பரவலாக்கி எல்லாருக்கும் வாய்ப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தல் வேண்டும் என்பவற்றையும் உள்ளடக்கியதாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்திற்கான நோக்கங்கள் இருப்பதாலும்
அதிகாரத்தைப் பரவலாக்கி ஒப்படைப்பதன் மூலம் எல்லாக்குடிமக்களுக்கும் தன்னாட்சி செய்யும் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒரு ஆக்க பூர்வமான படிமுறையாக மாகாண சபைகள் முறை அமையும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதனால் மாகாணசபைத்தேர்தல்களில் பங்குகொண்டும் இனங்களுக்கிடையேயான பிரச்சினைக்கு இசைவிணக்க முறையில் கலந்துரையாடித் தீர்வினை எட்டுவதற்கான ஸ்ரீலங்கா அரசின் எல்லா முன்னெடுப்புகளிலும் பங்கேற்று வந்திருப்பதனாலும்
கட்டுக்கடங்காது பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சமயங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மையற்ற அடர்த்தியானதுவும் மிகப்பரந்தளவிலானதுமான செயற்பாடுகள் குறித்து மிக ஆழ்ந்த கவலையோடும் கரிசனையோடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோக்குவதோடு அதிகாரம் பகிர்ந்து பரவலாக்கும் முயற்சியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிட எடுக்கப்படும் முயற்சிகளையும் நடைமுறையில் இருக்கும் மாகாணசபை முறைமையை நீர்க்கச் செய்வதன் மூலம் செயற்பாட்டிலுள்ள அதிகாரப்பரவலாக்கலை முற்றாக மூடி விட, இல்லாதொழிக்கவும் மாகாண சபை முறைமையை முற்றாக நீக்கி விடவும் எடுக்கப்படும் முயற்சிகளையும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள் குடியமர்த்துவதில் காட்டப்படும் அசிரத்தையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆழ்ந்த கரிசனையுடனும் சிரத்தையுடனும் நோக்குகிறது.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர்களாகிய நாம் பின்வரும் விடயங்களைக் குவியப்படுத்தி முன்னுரிமை தருவதற்காக தீர்மானம் எடுப்பதாவது:
  • சமய வெறுப்புணர்வூட்டும் உரைகளைப் பரப்புரை செய்வது பற்றியும் சமயங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மையற்ற பிரச்சினைகள் குறித்தும் எல்லா சமயங்களும் சமயவழிபாட்டிடங்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் எல்லா சமயச்செயற்பாடுகளும் வழிபடுமுறைகளும் மரபுகளும் பேணிப்பாதுகாக்கப்படவும் அவ்வச்சமயங்களைப் பின்பற்றுவோரின் திருப்திக்கமைய செயற்பட அனுமதிக்கப்படுவது பற்றியும் அரசு உடனடியாகக் கவனம் செலுத்துவதற்கு அரசின் மீது இயன்றவரை செல்வாக்கைப் பிரயோகித்து செயற்படுத்த அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுத்தல
  • ஆட்சிப்பகிர்வை அடைவதற்கும் எல்லாக்குடிமக்களதும எண்ணிக்கையில் சிறியதான சமூகங்கள் உள்ளடங்கலாக எல்லாச்சமூகங்களதும் மதிப்புள்ள கூட்டு வாழ்வுக்கும் அதிகாரப்பகிர்வு உறுதி செய்யப்படுதல் வேண்டுமென்ற எமது பற்றுறுதியை 24ஆம் பேராளர் மாநாட்டில் வலியுறுத்துவது சாலப்பொருத்தமானதாகும்.
  • மாகாணசபைகளுக்கான பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கச்செய்யவும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மாகாணசபை முறைமையை வலுக்குறைக்கும் அல்லது சிதைக்கும் முயற்சிகளையும் அல்லது ஏதேனும் மாற்று ஏற்பாட்டுடன் இப்போது நடைமுறையில் இருக்கும் மாகாணசபையினால் செயற்படுத்தப்படும் அதிகாரங்களைப் பிரயோகிக்கக்கூடிய உடனியங்கு அமைப்பொன்றை உருவாக்கும் அல்லது எல்லாச்சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வண்ணம் அரச அதிகாரம் பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கும் மாற்றுப் பொறிமுறையொன்று உருவாக்கப்படாது, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க எடுக்கப்படும் எல்லா எத்தனங்களையும் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களாகிய நாம் அதிகாரப்பகிர்விற்கான படிமுறைகளைக் கீழறுப்புச் செய்யும் செயல்களுக்கான முயல்வுகளை எதிர்ப்போம் என்றும் ஸ்ரீலங்காவை வாழ்விடமாகக் கொண்ட அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமைகளைப் பாதுகாக்கும் உறுதிப்படுத்தும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்விற்காகப் பற்றுறுதியோடு செயற்படுவோம் என்றும் தீர்மானம் செய்கிறோம்.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது இது முதற்கொண்டு நடைமுறையிலுள்ள மாகாணசபைகளின் அதிகாரத்தைப் படிப்படியாக அழிப்பதற்கான சட்டவாக்கங்களைக் கொண்டுவர எண்ணினாலோ அல்லது அதற்கு இலக்கு வைத்தாலோ அதனை எதிர்ப்பதோடு தற்போது நடைமுறையிலுள்ள செயன்முறையான அதிகாரப்பரவலாக்கத்தைக் கருத்துள்ளதாக்க அதனை மேலும் செம்மைப்படுத்திப் பலப்படுத்த கடும் முயற்சி செய்வோம் என்றும் உறுதி பூணுகிறோம்.
  • போர் முடிந்து 43 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் போரினால், அண்மையில் இடம் பெயர்ந்தவர்களும் நீண்டகாலமாக இடம் பெயர்ந்துள்ளவர்களும் திருப்தியளிக்கக்கூடிய இழப்பீடுகளுடன் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை.இந்நிலை தெளிவாகவும் முக்கியமாகவும் 1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து இனச்சுத்திகரிப்புச்செய்யப்பட்ட முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களாகிய நாம,; அரசாங்கம் உள்ளக இடப்பெயர்ந்தோரையும் அகதிகளையும் அத்தோடு வடமாகாணத்துக்குத் திரும்ப விரும்புகின்ற வடமாகாண முஸ்லிம்களுக்கு உதவும் வண்ணம் தகுந்த சூழலையும் ஏற்படுத்தி அவர்களது பொருளாதார சமூக கலாசார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அதற்கென மீளக்குடியமர்த்தலுக்கான தேசியக்கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த அரசு உடனடியானதும் உறுதியானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறது.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது கற்றறிந்த பாடங்கள் மற்றம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வழிப்படுத்தியும் நெறிப்படுத்தியும் செல்லவேண்டுமென தீர்மானிக்கிறது.
  • இந்த மாநாடு, தாயகத்துக்காகவும் சுயநிர்ணயத்துக்காகவும் போராடும் பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்துக்கு தனது கூட்டொருமைப்பாட்டைத் தெரிவிப்பதோடு பலஸ்தீனத்துடனான தனது உறவுகளை ஸ்ரீலங்கா அரசு மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் காஸாவில் உள்ள இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கட்டுமானங்களைக் குலைப்பதற்கு பலஸ்தீனம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆக்க பூர்வமாக ஒத்துழைக்க வேண்டுமென்றும் பலஸ்தீனிய மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் நிலையான தீர்மானங்களை எய்துவதற்குத் துணை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றது

சிறுபான்மையினரின் உயர் கல்விக்கு ஆப்பு வைக்க முயற்சி; திறமைக்கும் குழிபறிக்க சதி!



law_CI
-சத்தார் எம்.ஜாவித்-
2013 ஆம் ஆண்டிற்கான சட்டக்கல்லூரி கற்கை நெறிக்கான நுழைவுப் பரீட்சையில் இம்முறை மொத்தமாக 309 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம் மாணவர்கள். அத்துடன் இதை விட சற்றுக்குறைவன வீதத்தில் தமிழ் மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சகல மொழி மாணவர்களுக்கும் ஒரே மாதிரயான வினாப் பத்திரங்களைக் கொண்ட போட்டிப் பரீட்சையில் தமது திறமைகளை வெளிக்காட்டி இம்முறை சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டதை சில பெரும்பான்மை இனவாத கட்சிகளும், சில இனவாத சமயத் தலைவர்களும் ஜீரணிக்க முடியாது, தம்மாலும் திறமையைக் காட்ட முடியவில்லை- மற்றவனையும் முன்வரக் கூடாது என்று சிறுபான்மை இனம் மீது இனவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை சிறபான்மை இனம் மட்டுமல்ல புத்தியுள்ள பெரும்பான்மை இன புத்திஜீவிகளும் கூட இவர்களின் இந்தச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றனர்.
இன்று இதனை பொறுக்க முடியாத சில இனவாத செயற்பாட்டாளர்களும், போலிச் சமயத் தலைவர்களும் சிறுபான்மையினரான முஸ்லிம் மாணவர்களின் இந்து திறமையை சகிக்க முடியாது ஏன் தம்மால் முடியாத கையாலாகாத் தன்மையினால் இனவாதச் செயல்களில் ஈடுபட்டு முஸ்லிம் தமிழ் மாணவர்களை ஓரங்கட்டச் செய்து வருகின்றனர்.
அத்துடன் தமது இனத்தை படிக்கா விட்டாலும் அல்லது திறமை இல்லா விட்டாலும் மொக்குத்தனமாக இவ்வாறான திறமைமிக்க கல்விகளில் ஆதிக்கம் செலுத்த குறுக்கு வழிகளை மேற்கொள்கின்றனர்.
இவர்களின் இந்தச் செயற்பாடு கடந்த காலங்களில் உயர் கல்விகளிலும், உயர் தொழில் பதவிகளிலும் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இவ்வாறு திறமையற்றவர்களை உள்வாங்கி வருகின்றமையை உறுதி செய்வதாக உள்ளமை இவர்களின் தற்போதைய செயற்பாடுகள் இங்கு புலப்படுகின்றது.
இந்தச் சட்டக்கல்லுரி பட்டப்படிப்பிற்கு கடந்த 2007 மற்றும் 2008 காலகட்டங்களில் தமிழ் , முஸ்லிம் மாணவர்கள் குறைவாக தெரிவு செய்யப்பட்ட வேலைகளில் அப்போதைய தமிழ் மற்றும் சட்டவல்லுனர்களும், புத்திஜீவிகளும் சிறபான்மை மாணவர்களின் தொகையைக் கூட்டுவதற்கு குறைந்த பட்சம் இன வீதாசாரத்திற்கமைவாக எண்ணிக்கையை தருமாறு கோரியபோது அப்போதுள்ள பல முக்கியமான பெரும்பான்மை இன சட்டத்தரணிகள் அவ்வாறு செய்ய முடியாது- போட்டிப்பரீட்கையில் எவ்வளவுபேர் வேண்டுமானாலும் தெரிவு செய்யப்படுவதில் தமக்கு ஆட்சேபனையில்லை என்று கூறி தட்டிக்கழித்து விட்டனர்.
இவ்வாறு தட்டிக்கழித்த பின்னர் இப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் தமது திறமையை வெளிக்காட்டும் விதத்தில் குறித்த பரீட்சைக்கு தம்மை முழுதாக ஈடுபடுத்தி தயாராகி தோற்றி அதிகப்படி மாணவர்கள் தற்போது தெரிவாகினர்.
இது இவ்வாறு இருக்க தற்போதைய மாணவர்களின் வெற்றியை சகிக்க முடியாத முன்பு போட்டிப் பரீட்சையில் போட்டி போட்டு வருமாறு கூறிய சட்டத்தரணிகள் இன்று தாம் கூறியதற்கு மாற்றமாக தற்போது செயற்பட்டு பிரச்சினைகளை கொடுப்பதுடன் பல இனவாத மதத் தலைவர்களையும், இனவாத கட்சிகளையும் தூண்டி விடுகின்றமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறு திறமைகளைக்காட்டிய மாணவர்களின் எதிர்கால வாழ்வில் ஆப்பு வைக்கும் இனவாதிகளுக்கு அரசு தகுந்த பாடத்தை புகட்டி சிறுபான்மை மக்களின் கல்வி, தொழில் வாய்புக்களில் அதீத கவனஞ் செலுத்த வேண்டுமென சிறுபான்மை மக்கள் அரசிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றனர்.
திறமையுள்ளவர்கள் போட்டிப் பரீட்சைகளில் கூட கல்வியிலும் முன்னுக்கு வருவதை விரும்பாக இனவாதிகள் இருக்கும்போது நாட்டில் எவ்வாறு சாமதானம் ஏற்படும் ? என மக்கள் அரசிடம் கேட்கின்றனர்.
இலங்கையில் சமாதானம் நிலவுகிறது, மக்கள் எதுவித பிரச்சினைகளும் இன்றி இருக்கின்றார்கள் என்று உலகத்திற்கு பறைசாற்றும் அரசு தமது சமாதான செயற்பாட்டிற்கு ஆப்பு வைக்கும் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளில் தலையிடும் இனவாதிகளுக்கு அரசு என்ன ஆப்பை வைக்கப்போகின்றது என மக்கள் கேட்கின்றனர்.
எனவே இந்த விடயத்தில் அரசும் அரச அதிகாரிகளும் உடன் தலையிட்டு சிறுபான்மையினரின் விடயங்களில் மூக்கை நுழைப்பதை தடுக்கும் வகையிலும் சிறுபான்மையினரின் சகல விடயங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அவர்களின் திறமைகளை ஏற்று அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இனவாதிகளின் இந்தச் செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்துமாறு மக்கள் சிறபான்மை மக்கள் அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஹலால் சான்றிதழுக்காக அறிவிடப்படும் பணத்திற்கு என்ன நடக்கிறது; உலமா சபை பகிரங்கப்படுத்த வேண்டும்!



HalalMubarakஇலங்கை மக்களில் 7 வீதமானோரே ஹலால் சான்றிதழுடைய உணவுகளை உட்கொள்கின்றனர் என்பதால் ஹலால் சான்றிதழை தடை செய்ய வேண்டும் என்பது பிழையானது என்றும் ஆனாலும் இதற்காக செலுத்தப்படும் பணம் எங்கே போய்ச்சேருகிறது என்பது ஆராயப்பட வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளமையை முஸ்லிம் உலமா கட்சி பெரிதும் வரவேற்பதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“சில இனவாதிகள் ஹலால் சான்றிதழை தூக்கி பிடிப்பதற்கு அரச சார்பு இனவாதிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவரின் இது சம்பந்தமான கருத்து பாராட்டுக்குரியதாகும். ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவது அந்த உணவை முஸ்லிம்கள் உண்ணலாமா இல்லையா என்பதற்கான உத்தரவாதம் மட்டும்தான் என்பதை அவர் விளங்கியுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.
பொதுவாக இந்து, பௌத்த மக்களில் சிலர் உணவகங்களுக்கு சென்றால் அதில் அசைவம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டு உறுதிப்படுத்துவதை அன்றாடம் நாம் காண்கிறோம். விமானங்களில் கூட அசைவமா சைவமா என கேட்ட பின்பே உணவை வழங்குகிறார்கள். இவ்வாறே ஒரு முஸ்லிம் தனக்குரிய உணவு ஹலாலா (ஆகுமானதா) இல்லையா என்பதற்கான உத்தரவாதமே இந்த ஹலால் பத்திரமாகும்.
இதனை எதிர்ப்பதன் மூலம் நாட்டில் இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே மோதல்களை ஏற்படுத்தி இதன் மூலம் வாக்குகளை பெற சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அதேவேளை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஹலால் சான்றிதழுக்கான வரவுகள் செலவுகள் எவ்வளவு என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற அதன் வருடாந்த மாநாட்டில் கூட உலமா சபையின் வரவு செலவு பற்றிய அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
அதேபோல் அதன் நிர்வாகமும் பல வருடங்களாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படவில்லை. சில அரசியல் கட்சிகள் போல் உலமா சபையும் சிலரின் ஏக போக சொத்தாகவும் ஆயுட்கால தலைவர், நிர்வாகம் என்ற நிலையே காணப்படுவது கவலைக்குரியதாகும் என்பதை உலமா கட்சி அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளது. அவ்வப்போது நாம் பகிரங்கமாக வழங்கும் எமது ஆலோசனைகளை உலமா சபையின் நிர்வாகம் ஏற்காததன் காரணமாக இன்று முழு முஸ்லிம் சமூகமும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
உலமா சபையின் கணக்கு விபரம் என்பன அதன் உறுப்பினரான எமக்குக் கூட அதுவும் கல்முனை உலமா சபையின் உப தலைவரான எமக்கே தெரியாத நிலையில் மாற்று சகோதரர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? இதன் காரணமாக உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி என்ற வகையில் எம்மாலும் இனவாத கட்சிகளுக்கு பதில் அளிக்க முடியாதுள்ளது.
ஆகவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவரையும், ஊடகங்களையும் உலமா சபை அழைத்து ஹலால் சான்றிதழுக்காக அறிவிடப்படும் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அந்தத்தெளிவு சரியானதா என்பதை தே.தே.இயக்கத் தலைவர் வாயிலாக ஊடகங்களுக்கு சொல்லப்பட வழி சமைக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது” என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

தொழில்வாய்ப்புகள் உள்ளன, ஆனால் தகுதியுடையவர்கள் இல்லை - கல்வியமைச்சர் பந்துல



உலகில் எந்தவொரு பிரிவினதும் விடுபட முடியாத 3 காரணங்கள் தொடர்பாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சமகாலத்தில் வறிய நிலையில், கல்வியைப் பெறும் மாணவர்களுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.

இதன்காரணமாக, நாட்டின் மாணவர்கள் சராசரியில் 22 வீதமானவர்களே, உயர்தரத்தில், விஞ்ஞான, கணித, தொழினுட்ப, கல்வியைத் தொடர்கின்றனர்.
ஏனையவர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறையில் கல்வி பயில்கின்றனர்.

அவர்களுக்கு தகுதிக்கேற்ற தொழில்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நாளைய எதிர்காலம் அவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. தொழில்வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் அதற்கான தகுதியுடையவர்களை இந்த கல்வித்துறை உருவாக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தானில் காலாவதியான மருந்து சாப்பிட்ட 16 பேர் வபாத் - 38 பேருக்கு தீவிர சிகிச்சை




பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகர மருந்து கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட இருமல் மருந்தை சாப்பிட்டவர்கள் மயக்கமடைந்தனர். அங்கு கடந்த புதனிலிருந்து விற்கப்பட்ட இருமல் மருந்தை சாப்பிட்ட 54 பேர், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் போதைப்பொருளுக்கு அடிமையான 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 38 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

காலாவதியான மருந்தை விற்ற கடைக்காரரை போலீஸ் கைது செய்துள்ளது. லாகூரில் காலாவதியான மருந்தை சாப்பிட்டு, ஜனவரி மாதம் 100 பேரும், நவம்பர் மாதம் 19 பேரும் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. 

சவூதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு - மன்னர் அப்துல்லாஹ் அறிவிப்பு


சவூதி அரேபியாவில் சிறையில் வாடும் குற்றவாளிகளுக்கு மன்னர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். பொது உரிமை மீறல் குற்றத்தின் கீழ் சிறையில் வாடுபவர்களுக்கும், நிதிக்குற்றங்களுக்காக சிறைப்பட்டு, திவாலாகிப் போனவர்களுக்கும் அவர்தம்

குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அறிவித்துள்ளதாக சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், தனியுரிமை மீறல் குற்றம் புரிந்தவர்களுக்கும், பெரிய குற்றங்களான கொலை, வன்புணர்வு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய நாடு இஸ்லாமிய மதநெறிப்படி ஷரீயத் சட்டத்தைப் பின்பற்றி வருகிறது. அச்சட்டப்படி, பொது உரிமைக் குற்றங்கள் , தனியுரிமைக்   குற்றங்கள் என்று இருவகையாக குற்றங்கள் பகுக்கப்படுகின்றன. தனிமனிதருக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவரே  மன்னிக்கத் தகுதியானவர் என்பதால் அத்தகு குற்றங்கள் இந்த பொதுமன்னிப்பின் கீழ் வராது  என்றும் கூறப்பட்டுள்ளது.

காட்டாக, போக்குவரத்துக் குற்றங்களில் அரசு சார்பில் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டாலும், அக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு அடைந்த கைதிகள் இதனை படிப்பினையாகக் கொண்டு  குற்றங் களைந்தவர்களாக தேசத்திற்கும், பண்பாட்டிற்கும்  இனி பாடுபட முன்வர வேண்டும்  என்று இளவரசர் முஹம்மது கேட்டுக்கொண்டுள்ளார். inneram

Jaffnamuslim
 

சுயகெளரவத்தையும், கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்க்கு நாங்கள் தயாராக இல்லை - ரவூப் ஹக்கீம் (படங்கள் இணைப்பு)




(முஸ்லிம் காங்கிரஸின் ஊடக பிரிவு)

கட்சி எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு மத்தியில் புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே ஓர் அக்கினிப்பரீட்சை நடைபெற போகின்றது, அந்த அக்கினிப்பரீட்சைக்கு எப்படி முகம் கொடுப்பது.? இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24வது பேராளர் மாநாடு, தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் சனிக்கிழமை (29.12.2012) நடைபெற்ற போது அதன் இரண்டாவது அமர்வின் இறுதியில் முக்கிய உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தலைவரின் உரையின் பெரும் பகுதி பேராளர்கள் சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது. அங்கு உரையாற்றும்பொழுது தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

இன்று பிரேரணைகளையும் நாம் நிறைவேற்றி இருக்கிறோம், அந்த பிரேரணைக்கமைய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகிய நாம் எட்டுப்பேரும் அந்த அக்கினிப்பரீட்சையை எதிர் கொள்ள இருக்கிறோம். என்ன சட்டமூலமாக இருந்தாலும் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கமைய அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருகிறோம் ஏற்கனவே மாகாணசபையில் அந்த அனுபவம் ஏற்பட்டது.

இதனை கட்சியின் போராளிகள் வழி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே புதிய அதியுயர் பீடத்துக்கு இருக்கின்ற முதலாவது பணி அக்கினிப்பரீட்சையை எதிர் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதாகும். அந்த தீர்மானத்தை பொறுத்தவரை பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக எமது உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உறுதியானது.

முஸ்லிம் காங்கிரசை தாம் விரும்பிய திக்கில் இழுத்துக்கொண்டு போகலாம் என சில பத்திரிகைகள் நினைக்கின்றன அவர்களது தேவைகளுக்கமைவாக எமது கட்சி செல்ல முடியாது. நாம் பிரயோக அரசியலைச் செய்கிறோம். ஆனால் கட்சியின் அடிப்படையை தாரைவார்க்க முடியாத ஒரு முக்கியமான சவாலை நாம் முதலில் எதிர் நோக்கியிருக்கிறோம், எனவேதான் இந்த பேராளர்மாநாடும், இதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

அரசாங்கத்தோடு நாம் சில முக்கிய விடயங்களை கதைத்திருக்கிறோம், அரசமேல் மட்ட அமைச்சர்கள் சில உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள் அவ்வாறான உத்தரவாதத்தை தந்த அமைச்சர் ஒருவரே அடுத்த சில நாட்களில் எங்கள் வாக்குகளை பாராளுமன்றத்தில் எதிர்பார்த்து இருக்கிறார், நாங்கள் ஒன்றாக இருந்து ஒற்றுமையாக செயல்படுவது எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்க்கு முக்கியமானது.

நாங்கள் தனித்துவமான அரசியல் செய்கின்ற இயக்கத்தினர் என்ற காரணத்தினால் பழிவாங்கப்படுகிறோம்.நாங்கள் இரண்டரக் கலந்து, சங்கமமாகாத கட்சியின்ர் என்ற காரணத்தினால் ஓரக்கண்ணால் பார்க்கப்படுகிறோம்.

எங்களது போராளிகள் நாளும் பொழுதும் இதற்க்குப் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்,பட்டதாரிகள் நியமனம்கள் போன்ற வற்றில் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம்.

கிழக்குமாகாண முதலமைச்சர் நம்பிக்கைக்குரியவர் என்ற கருத்து எங்கள் மத்தியில் இருந்தாலும் கூட, இங்கு சிலர் கூறியவற்றை கேட்கும் பொழுது அவரைப்பற்றி மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது,  எங்களுக்கு குறிப்பாக எங்களது கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு அவர் நண்பராக இருக்கிறார் என்பதுவேறு விசயம். ஆனால் என்னவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அமைச்சராக இருக்க முடியும் இதனை நான் மிகவும் உறுதியாகவும் அறுதியாகவும் கூறுகின்றேன்.

நாங்கள் அரசாங்கத்தை விட்டு விட்டு போகமாட்டோம், அதற்க்கான ஆணையை மக்கள் எங்களுக்குத் தரவில்லை ஆனால் எங்களது சுய கெளரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்க்கு நாங்கள் தயாராக இல்லை.என்றார்

 இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத்,செயலாளர்நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலி, பொருளாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களும், உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்களும், பேராளர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







புதன், 26 டிசம்பர், 2012

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் வீதி மறியல் போராட்டம்; நுரைச்சோலை வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!


D003300220011223

-செயிட் ஆஷிப்-
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளைக் கையளிக்குமாறு கோரி இன்று புதன்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் பெரும் ஆர்ப்பாட்டமும் வீதி மறியல் போராட்டமும் இடம்பெற்றது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமலாமல் அவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இன்று காலை 9.30 மணி தொடக்கம் வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுனாமி இடம்பெற்று எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமக்காக அமைக்கப்பட்ட வீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
தமக்காக சவூதி அரேபியாவின் நிதி அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கடந்த மூன்று வருடமாக பாழடைந்த நிலையில் கிடக்கிறது எனவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்தும் அவ்வீடுகள் தமக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக்கோரியுமே தாம் வீதியில் இறங்கிப் போராடுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
தமக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு வந்து தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கர்ஜித்தனர்.
இந்த ஆர்ப்பாடம் மற்றும் வீதி மறியல் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதன்போது பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை உரிய மக்களுக்கு இனியும் தாமதிக்காமல் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய முஸ்லிம் கவுன்ஸில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள் (படங்கள்)


(எம்.பைஷல் இஸ்மாயில் + ஏ.எல்.எம்.மஸ்காத் + கே.சி.எம் அஸ்ஹர்)


அக்கரைப்ற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக பொதுமக்களினால் நடாத்தப்பட் ஆா்ப்பாட்டத்தில் மக்களினால் எடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நுரைச்சோலையில் தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை வழங்கக் கோரி இன்று காலை 26-12-2012) அம்மக்களினால் பாரிய ஆா்ப்பாட்டத்தை நடாத்தினா். 

கடந்த சுனாமியின் போது வீடுகளை இழந்த குடும்பத்த தலைவா்கள் அக்கரைப்பற்று நுரைச்சோலை தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இதுரை வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும், வழங்குமாறு கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்ட பேரணியினையில் பொலிஸார் அதை தடுக்க முற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸாருடன் முரண்பட்டு பல கருத்து மாற்றங்களும் இடம்பெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமார் 2 மணித்தியாலங்களாக அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதான வீதியினூடாக வாகனம் செல்லாமல் தடைப்பட்டிருந்தும் குறிப்பிடத்தக்கது. 







பௌத்த விகாரையில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பிக்குவுக்கு சிறை


(vi) சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. எனினும் சிறுமி க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்தமையினால் பெற்றோர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி தொடர்பாக முறைப்பாடொன்று உள்ளதாகக் கூறி விகாரைக்கு அழைத்துள்ள குறித்த பிக்கு அங்குள்ள அறையொன்றில் வைத்தே சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்க்கிறது - அஸாத் சாலி


"பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும்,  ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சிறிய பிரச்சினை எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாக அமையும் என்று முஸ்லிம்  தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

முஸ்லிம்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்துவருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்பிலிப்பிட்டியவில் சிங்களக் குழுவினரால்  முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

எம்பிலிப்பிட்டிய சந்தையில் இரண்டு முஸ்லிம் கடைகள் இருக்கின்றன. இந்த இரு கடைகளிலுள்ள வர்த்தகர்கள் சிங்களக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். ஏன் சிங்களக் குழுவினரால் அவர்கள் தாக்கப்பட்டனர்?  எதற்காகத் தாக்கப்பட்டனர்?

"சேனா' என்ற சிங்கள அமைப்பும், ஏனைள சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா எனத் தெரியவில்லை. 

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்குகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும்,  எம்.பிமார்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். அவரிடம் முறையிட்டு என்ன பயன்?

முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு, முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என சிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் அராஜக செயல்கள் அனைத்தும் சிறிய செயல்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார். 

எமது சமயத்துடனும், மக்களது வாழ்வுடனும் விளையாடுவது சிறிய செயலா?
 இதுபோன்ற சிறிய செயல்களின் எதிர்விளைவுகள் நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் இனிமேலும் தொடரக்கூடாது. 

அதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும். 

முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதனூடாக முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டுமென்றா அது எதிர்பார்க்கிறது? வேண்டாம். எம்மை ஒருபோதும் அந்த நிலைக்குத் தள்ளிவிடவேண்டாம்  என்றார் அஸாத் ஸாலி.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

டிசம்பர் 25 ஆம் திகதி யேசுநாதர் பிறக்கவில்லையாம் - பாப்பரசர் ஒப்புதல்



(இலங்கை தவ்ஹீத் ஜமாத்)

கிறிஸ்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்மஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்.தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் :16வது “பென்னடிக்ட்” போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் (‘Jesus of Nazareth: The Infancy Narratives’) என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் “டிசம்பர் 25″ என்பது தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை கூறியுள்ளார்.

டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றீர்களே!அதற்கு பைபிளில் ஆதாரம் உள்ளதா என கிறித்தவ சகோதரர்களிடத்தில் கேட்டால் பதில் இல்லாமல் இருந்து வந்தது. போப் ஆண்டவரின் விளக்கம் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான “போப்” ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகம் செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் என்ற இந்த நூல் இதற்கு முன்பு இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் எழுதியுள்ள மூன்றாம் பாகம் என்பது ஏசுவுடைய சிறு வயது முதலான நிகழ்வுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் போப் அவர்கள் ஏசுவின் பிறப்பு குறித்து பேசும்போதுதான் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் தவறு என்றும், அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே இயேசுவின் பிறப்பு நிகழ்ந்துள்ளது எனவும் போப்பாண்டவர் அறிவித்துள்ளார்.

நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் காலண்டர் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான டியானிசியஸ் எக்ஸிகுஸ் (Dionysius Exiguus) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர்தான் இந்த ஆண்டுக்கணக்கை தவறாக கூறிவிட்டார் என்று போப் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கூட இயேசுவின் பிறந்த தினம் குறித்து கிறித்தவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அடுத்த அதிர்ச்சித் தகவல் :

உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய 16ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அனைத்து கிறித்தவ சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தகவல் என்ன தெரியுமா? கிறிஸ்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பதுதான்.

இது மட்டுமல்லாமல், கிறிஸ்தவ மதத்தில் குறிப்பிடப்படும் தேவதைகள், ஆடு மேய்ப்பவர்களுக்கு இயேசு பிறக்கப் போகிறார் என்று முன்னறிவிப்பு செய்து பாடல் பாடியதாக வரக்கூடிய சம்பவங்களும் பொய் என்றும் அதற்கு எவ்விதமான சான்றுகளும் இல்லை என்றும் போப்பாண்டவர் கூறியுள்ளார்.

மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதும் பொய்யாம்:

அதுமட்டுமல்லாமல் ஏசு மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததாகக் கூறி மாட்டுத்தொழுவம் போன்று கொழு பொம்மைகளை அமைத்து கிறித்தவர்கள் பில்டப் கொடுப்பார்கள். போப் ஆண்டவர் அவர்கள் அது குறித்த உண்மைகளையும் போட்டு உடைத்துள்ளார். மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன.

இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன.

இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும் போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

மத்தேயுவுக்கும், லூக்காவுக்கும் முரண்பாடு:

ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மத்தேயு, ஏரோது என்ற மன்னன் இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் ஏசுவின் தாயார் மரியாளும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட யோசேப்பும், குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை.

இவ்வளவு முக்கியமான நிகழ்வை பரிசுத்த ஆவி ஏன் சொல்லாமல் விட்டது என்று நமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

மேற்கண்ட முரண்பாடுகளும் இது குறித்து பைபிளில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கட்டுக்கதைகள் தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இது குறித்த செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் தனது “இதுதான் பைபிள்” என்ற நூலில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார். அது குறித்த செய்தியை கீழே உள்ள செய்தியில் காண்க!

சூழ்நிலைத் தடுமாற்றம்:

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குத் தோன்றி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிப் போய் நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து இரவில் பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குப் போய் ஏரோதுவின் மரண பரியந்தம் அங்கே இருந்தான்.

(மத்தேயு 2:13,14)

இயேசு பிறந்தபோது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும் அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் அதற்குப் பயந்து இயேசுவின் பெற்றோர் இயேசுவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகிறார். ஏரோது இறந்த பிறகு கூட அவனது மகன் அரகெலாவு என்பவர் ஆட்சிக்கு வந்ததால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு (2:19-23) கூறுகிறார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரணமான நிலை நிலவியதாகக் கூறுகிறார்.

அவர்கள் பெத்லகேமிலேயே இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும் அவரது பெற்றோர் வருஷம்தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் எனவும் லூக்கா கூறுகிறார்.

(லூக்கா 2:15-52)

ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும் அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்.

பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

லூக்கா கூறுவது போல் சாதாரணமான நிலைமை இருந்ததா?

மத்தேயு கூறுவது போல் பயங்கரமான நிலை நிலவியதா?

ஆண்டுதோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உண்மையா?

அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்தது உண்மையா?

ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லாவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?

உண்மையை ஒப்புக்கொண்ட போப்:

போப் ஆண்டவர் தனது நூலில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் ஏசுவின் பிறப்பு விஷயத்தில் முரண்பட்ட செய்திகளை சொல்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டு அதை சரிக்கட்டுவதற்கு அவர் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் நோக்கம் வரலாற்றை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக நம்பிக்கையின் ஒளியை உலகிற்கு பரப்புவதுதான் என்று கூறியுள்ளார்.

போப் ஆண்டவர் கூறுவது உண்மையாக இருக்குமேயானால், முரண்பட்ட செய்திகளை அவர்கள் கூறியிருக்கக் கூடாது. அவ்வாறு இருவரும் முரண்பட்ட செய்திகளைக் கூறுவதே அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஒளியை இருளச் செய்துவிடுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எதற்குமே ஆதரமில்லை:

கிறித்தவ சகோதரர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடக்கூடிய இரண்டு பெரும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்மஸ்; மற்றொன்று ஈஸ்டர் சண்டே.

கிறிஸ்மஸ் என்பது ஏசுவின் பிறந்த தினம் என்றும், ஈஸ்டர் என்பது ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்த தினம் என்றும் கிறித்தவ சகோதரர்கள் நம்புகின்றனர்.

இதில் கிறிஸ்மஸ் டிசம்பர் 25ஆம் தேதி என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை போப் ஆண்டவர் அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.

ஓய்வுபெறும் வயதெல்லை 57 ஆக உயர்வு


(எம். எஸ். பாஹிம்)

அரசாங்க பொது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையையும் 57 வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. நிதி, திட்ட அமுலாக்கல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்தார். 

அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய காலத்தை 57 ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்த சலுகையை அரச பொது நிறுவன ஊழியர்களுக்கும் வழங்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பி.ச.பட்ஜெட்டுக்கு ஆளும் மு.கா.உறுப்பினர்கள் மூவர் எதிர்ப்பு; எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றம்!


SLMC-Logo

-செயிட் ஆஷிப்-
நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மூவரின் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை அதன் தவிசாளர் ஏ.எல்.ஏ.தாஹிர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அமர்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பிரதித் தவிசாளர் முஹம்மட் அன்ஸார், ஜப்பார் அலி மற்றும் நௌசாத் அலி ஆகிய மூவரும் பகிஷ்கரித்து சபை அமர்வுக்கு சமூகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில் இவ்வரவு-செலவுத் திட்டம் சபைக்கு சமூகமளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெப்பையினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

site counter