அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 26 டிசம்பர், 2012

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் வீதி மறியல் போராட்டம்; நுரைச்சோலை வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!


D003300220011223

-செயிட் ஆஷிப்-
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளைக் கையளிக்குமாறு கோரி இன்று புதன்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் பெரும் ஆர்ப்பாட்டமும் வீதி மறியல் போராட்டமும் இடம்பெற்றது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமலாமல் அவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இன்று காலை 9.30 மணி தொடக்கம் வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுனாமி இடம்பெற்று எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமக்காக அமைக்கப்பட்ட வீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
தமக்காக சவூதி அரேபியாவின் நிதி அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கடந்த மூன்று வருடமாக பாழடைந்த நிலையில் கிடக்கிறது எனவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்தும் அவ்வீடுகள் தமக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக்கோரியுமே தாம் வீதியில் இறங்கிப் போராடுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
தமக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு வந்து தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கர்ஜித்தனர்.
இந்த ஆர்ப்பாடம் மற்றும் வீதி மறியல் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதன்போது பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை உரிய மக்களுக்கு இனியும் தாமதிக்காமல் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய முஸ்லிம் கவுன்ஸில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter