.jpg)
நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்.
-எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசீம் அதிதிகள்-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இல்ல விளையாட்டுப் போட்டியொன்று நேற்று இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.எம்.நசீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சீ.பைசால் காசீம் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகம்வுகளில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், தென்கிழக்குப் பல்கலைக் கழக கலை, கலாச்சாரப் பிரிவின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார், சட்டத்தரணி ஏ.எம்.நசீல், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.றபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் இது போன்றதொரு விளையாட்டு விழா இதற்கு முன்னர் இடம் பெறாததால், இப்பிரதேச பொது மக்கள், பெற்றோர், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களும், ஆசிரியர்களும் 'ஸபா', 'மர்வா' என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இறுதியில் 'மர்வா' இல்லம் முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பரிசுகள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.