அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் குதிரை ஓடியவர் கைது; பரீட்சாத்திக்கு ஆயுள் தடை?


க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் குதிரை ஓடிய ஒருவர் நேற்று அம்பிலிபிட்டிய துன்கம மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை 9.15 மணியளவில் பரீட்சைத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி மேற்படி பரீட்சை மண்டபத்தில் அடையாள அட்டையில் பெயர் மாற்றம் செய்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நபர் நேற்றுக் காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பரீட்சை மோசடியில் ஈடுபட்ட நபர் உடனடியாக குட்டிகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த பரீட்சாத்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிலவேளை குறித்த பரீட்சார்த்திக்கு ஆயுள் முழுவதும் எதுவித பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடைசெய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter