அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

அட்டாளைச்சேனை பாலமுனைப் பகுதியில் இளம் குடும்ப பெண் தூக்கில் - மரணத்தில் சந்தேகம்



அம்பாறை மாவட்டம்-பாலமுனை கிராமத்தில் இளம் பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் .

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் இளம் குடும்பப் பெண் கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று மாலை 13-12-2012  மாலை 04 மணிக்கு அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாது- தூக்கில் தொங்கிய பெண் பர்வின் வயது (26) சம்மாந்துறை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்இவர் சுமார் மூன்று மாதங்களாகவே அல்-ஹிதாயா பள்ளி வீதிபாலமுனை- 01ம் பிரிவில் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொண்டு தனது நான்கு வயது மகனும்தாயாருடனும் வாழ்ந்து வந்ததாகவும்இவருடைய கணவன் றுமைஸ் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அவருடைய புதிய வீட்டு நிர்மான வேலையும் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் வேவைலையாட்கள் அங்கிருந்து வெளியாகும்  போது வீட்டில் இருந்து யாரும்  வெளிய வராததால்  பக்கத்து வீட்டில் இருந்து வந்த  பெண்  உள்ளே சென்று பார்த்தபோதே தூக்கில் தொங்கி இருக்கும் விடையம் அறிய முடிந்தது எனவும், அதனைத்தொடர்ந்து பொலிசார் அங்கு வந்து  நிர்மாண வேலை செய்தவர்களை விசாரணை செய்து மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி உரிய இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொலிசாரால் தகவல் கூறப்பட்டு இது வரை சடலம் எடுக்கப்பட வில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருவதுடன் சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter