அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

அல்குர்ஆன் மனனம் மூலம் இலங்கைக்கு பெருமை தேடித்தந்தமைக்காக அரச மரியாதை வழங்கி கௌரவிப்பு




சவுதி அரேபியாவில் கடந்த ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு இன்று அரச மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மத் றிப்தி மிஸிரியா தம்பதிகளின் மூத்த புதல்வாரன ஹாபிஸ் முஹம்மத் றிஸ்கான் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அறபுக் கல்லூரியின் மாணவரான இவர் கடந்த 2012.08.09 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களதால் நடாத்தப்பட்ட ஆல்குர்ஆன் மனனப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டு  சவூதி அறேபியாவின் மக்கா நகரில் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் ஒருவாரகாலம் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாணவர்கள் நால்வரில் ஒருவரான றிஸ்கான் 15 வயதிற்குட்பட்டோருக்கான மேற்படிப்போட்டியில் 83 நாட்டு மாணவர்களுடன் போட்டியிட்டு சர்வதேச ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவ்வாறு சர்வதேச ரிதியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்த இவருக்கு இன்று (12.12.2012காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஜனாதிபதியின் வேண்டுகோலின் பெயரில் புத்தசாசன மற்றும் மதவிவகார பதில் அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மௌலானாமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் றபீக் இஸ்மாயில்உதவிப்பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன்மேல்மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாள் நக்கீப் மௌலானா,மாணவனின் உஸ்தாதுகளான அல்ஹாபில் மௌலவி எம்.இஸட்.எம்.மஸ்ஊத்றிஸ்கானின் தந்தை முகமட் றிப்திதாயார் மிஸிரியாசகோதரி பாத்திமா சமீலா உட்பட பல பிரமுகர்கள் விமா நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஹாபிஸ் முஹம்மத் றிஸகான் விமா நிலையத்திலிருந்து அரச அமைச்சரின் தலைமையில் அரச மரியாதையுடன் தனது அறிவு இல்லமான கொழும்பு மதீனத்துல் இல்ம் அறபுக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு அங்கும் மேல்மாகாண ஆளுநர் அஷ்ஷெய்யத் அலவி மௌலானாபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், பெரியபள்ளிவாசல் நிருவாகிகள்,மத்ரஸா அதிபர் உஸ்தாத் ஏ.டபிள்யு.எம்.றியாழ்உப அதிபர் உஸ்தாத் அலி ஹஸனி மற்றம் நிருவாகிகள்மத்ரஸாவின் சக மாணவர்கள்ஏனைய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள்,புத்திஜீவிகள்மார்க்க அறிஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Al-Quran-hifl7
Al-Quran-hifl9
Al-Quran-hifl3
Al-Quran-hifl1
Al-Quran-hifl12
Al-Quran-hifl11
Al-Quran-hifl10
Al-Quran-hifl6
Al-Quran-hifl8
Al-Quran-hifl4
Al-Quran-hifl2
Al-Quran-hifl5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter