அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 3 டிசம்பர், 2012

நீதித்துறை தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றுமொரு அதிர்ச்சி..!


பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணைக்கு  எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் இன்று -3-12-2012 தீர்மானித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுத் தாக்கல் செய்திருந்த இந்த மனுவில் பாராளுமன்ற நிலையியற்  கட்டளை 78-A பிரிவை சட்டப்பூர்வமற்றது என தீர்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மனுவை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, பிரியசாத் டெப் மற்றும் ஈவா வணசுந்தர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு தொடர்பிலுள்ள ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்த நீதிமன்றம் பிரதிவாதிள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்து இரண்டு வாரங்கள் கடந்ததன் பின்னர் அது தொடர்பாக பதில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு மனுதார்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter