அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 3 டிசம்பர், 2012

எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை வரவேற்கிறார் பேரறிஞர் யூஸுப் அல் கர்ளாவி!


எகிப்து அரசினால் புதிதாக வரையப்பட்டுள்ள அரசியல் அமைப்பை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சபையின் தலைவரான செய்க் யூஸுப் அல் கர்ளாவி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பான இறுதி முடிவை மக்களே எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“எகிப்து இவ்வாறான ஓர் அரசியல் அமைப்பை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. மன்னர் ஆட்சிக் காலத்தின் போதோ புரட்சியின் போதோ இவ்வாறான யாப்பு இருக்கவில்லை“ என கர்ளாவி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எகிப்திய மக்களுக்குத் தேவையான கோட்பாடுகளையும் பெறுமானங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில் குறைபாடுகள் இருந்தால், அதனை பின்னர் ஈடு செய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் அமைப்பு சபையில் இருந்து வாபஸ் பெற்ற மதச் சார்பற்ற சக்திகளுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்: “நீங்கள் வாபஸ் பெற்றிருக்கக் கூடாது. உங்களது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்திருக்கலாம்.“

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter