ஜனாதிபதி செயலகத்திலிருந்தே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஜனாதிபதியின் பேச்சாளராக கடமையாற்றி வரும் பந்துல ஜயசேகர இடமாற்றப்பட்டு அவரது வெற்றிடத்துக்கு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றி வரும் மொஹான் சமரநாயக்க நியமிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றும் அனுராதா கே. ஹேரத் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் புதிய பேச்சாளர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பேச்சாளரான பந்துல ஜயசேகர டெய்லி நியூஸ் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக