அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

காவல்துறையினர் ஜனாதிபதி குடும்பத்தின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக மாறியுள்ளனர்; மங்கள குற்றச்சாட்டு!


நிறைவேற்று அதிகாரத்தினால் நீதிமன்றக் கட்டமைப்பு மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதல் நாட்டின் சட்டம் ஒழுங்கின் மீதான தாக்குதலாகக் கருதப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் சர்வாதிகாரத்தை முன்னெடுக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
காவல்துறையினர் ஜனாதிபதி குடும்பத்தின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக மாறியுள்ளனர்.
நீதிமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை நாட்டின் ஜனநாயகத்தின் மீது பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான அரசியல் தலையீடுகளுக்கு நீதிமன்றக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் காரணம்.
அரசியல் தலையீடுகளை எதிர்க்கக் கூடிய வல்லமை நீதிமன்றக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இருக்க வேண்டுமெனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter