அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சாராயம் வாங்கச் சென்ற முதியவர் மதுச்சாலைக்குள்ளேயே விழுந்து மரணம்!



Dead Suddenஏ.எச்.ஏ. ஹுஸைன்: 
மதுச்சாலையில் சாராயம் வாங்கச் சென்றவர் அந்த இடத்திலேயே விழுந்து மரணடைந்த சம்பவம் நேற்று  ஞாயிற்று கிழமை  பிற்பகல் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் தகவல் தெரிவிக்கையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை வாசியான 66 வயதுடைய பொன்னையா பிரான்ஸிஸ் தங்கத்துரை என்பவர், சாராயம் வாங்குவதற்காக சத்துருக்கொண்டானிலுள்ள மதுச்சாலைக்குச் சென்று, மது வாங்கி அதனை எடுத்துக் கொண்டு திரும்பும்போது, மதுச்சாலைக்குள்ளேயே விழுந்து மரணித்து விட்டதாகவும், பின்னர் உறவினர்கள் அவரது சடலத்தை தன்னாமுனையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வந்து விட்டதாகவும் கேள்விப்பட்டு தாங்கள் ஸ்தலத்திற்குச் சென்றதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற மதுச்சாலை அமைந்துள்ள சத்துருக்கொண்டான் பகுதி, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடங்குவதால் மேலதிக விசாரணை மட்டக்களப்பு பொலிசாருக்குப் பாரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன மற்றும் பொலிஸ் சார்ஜன் கே. விக்னராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்திற்குச் சென்று விசாரித்தனர்.
பிரேத பரிசோதனை மரண விசாரணைக்காக, சடலம் தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மட்டக்களப்புப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இறந்தவர் மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் அவர்களின் சகோதரர் என்று கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter