அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 10 ஆகஸ்ட், 2013

பன்சலையில் மணியடித்து இனவாதிகளை கூட்டி, கிரண்ட்பாஸ் பள்ளி மீது தாக்குதல் (Updated)

பன்சலையில் மணியடித்து இனவாதிகளை கூட்டி, கிரண்ட்பாஸ் பள்ளி மீது தாக்குதல் (Updated)

breaking newsகிரண்ட்பாஸ் சுவர்ணசிட்டி வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது  இனவாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. மஹ்ரிப் தொழுகைக்கு சுமார் 5 நிமிடங்களுக்கு முன் அங்கு வந்த இனவாதக் கும்பல் பள்ளிவாயல் மீதும், பள்ளிவாயலின் பிரதான நிர்வாகியின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு மகரிப் தொழுகைக்கு வந்த சில முஸ்லிம் சகோதரர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்காக இனவாதிகளை சேர்ப்பதற்கு அருகில் உள்ள பன்சலை ஒன்றில் இருந்து மணி அடித்து கூட்டத்தை இனவாதிகள் திரட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் நடைபெற்ற போது அங்கு காவலுக்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தாகவும் அறியவருகிறது.
அதேவேளை தற்பொழுது நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் உட்பட, கலகம் அடக்கும் பொலிஸாரும் அங்கு குழுமியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.  பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இதை உறுதிப் படுத்த முடியவில்லை.
முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடிவருகின்ற நிலையிலும், கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் செயற்பட பௌத்தசாசன அமைச்சு செயலாளர் உறுதியளித்துள்ள நிலையிலும் இவ்வாறான தாக்குதலை பௌத்த இனவாதிகள் மேற்கொண்டிருப்பது கோழைத் தனமானது என வர்ணித்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர், இதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவிடம் உடனடியாக தொடர்புகொண்டு அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து தான் விளக்கிக்கூறியதாகவும், அதற்கு அவர், குறிப்பிட்ட பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

பிந்திக்கிடைத்த தகவல்கள்

இனவாதிகளின் தாக்குதல் காரணமாக பள்ளிவாயலின் மூன்று மாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிவாயல் சுற்றயல் பகுதிகளில் பதற்றம் இன்னும் குறையவில்லை. பள்ளிவாயலை அகற்றுமாறு ராவண பலய என்ற பௌத்த தீவிரவாத அமைப்பு விடுத்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது இங்கு குறிப்பிட தக்கது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்ட வன்முறை சம்பவங்களில் 2 போலீசார் உட்பட 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு தற்போது பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா வருகை தந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter