அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 10 ஆகஸ்ட், 2013

அதிபர், ஆசிரியர்களைக் கௌரவிக்க கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முனைப்புடன் செயற்படுகிறது.

அதிபர், ஆசிரியர்களைக் கௌரவிக்க கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முனைப்புடன் செயற்படுகிறது.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

பாடசாலைகளில் மாணவர்களுக்கு சிறந்த முறையில் அறிவூட்டி, அவர்களை எதிர்கால சமூகத்தின் நற்பிரஜைகளாகத் திகழச் செய்யும் ஆசிரியர்களில் பலர்: பல விசேட திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறான விசேட திறன் கொண்ட அதிபர், ஆசிரியர்களைத் தெரிவு செய்து, அவர்களைப் பாராட்டி கௌரவிக்க கல்வி அமைச்சு முன்வந்துள்ளது.
வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் தெரிவு செய்யப்படும்  இவர்கள் மாகாணக் கல்வி அலுவலகத்தின் சிபார்சுடன் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆசிரிய தினத்தன்று பத்தரமுல்ல 'இசுருபாய' கல்வி அமைச்சில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைக் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் மேற்கொண்டு வருகிறார்.
கல்முனை வலயத்தைச் சேர்ந்த பல்வேறு விசேட திறன் கொண்ட அதிபர், ஆசிரியர்கள் தாம் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பெற்ற சாதனைச் சான்றுகளை உரிய விபரங்களுடன் இணைத்து 2013.08.14ந் திகதியிற்கு முதல் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீமிடம் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்கப் பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter