அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 25 மார்ச், 2013

நிந்தவூரில் றியல் இம்றான்’ விளையாட்டுக் கழகம் உதயம்!



IMG_20130303_152901
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
சுமார் 35 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகத்தின் தலைமைத்துவ வழிகாட்டல்கள் சீரின்மையாலும், சுயநலப்போக்குகள் அதிகரித்துள்ளமையாலும் சிரேஷ்ட விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையாலும் இம்றான் விளையாட்டுக் கழகத்திற்குள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதெனத் தெரிய வருகிறது.
இதன் விளைவாக இம்றான் வி. க சிரேஷ்ட உறுப்பினர்கள் (ஆரம்பகாலத் தொண்டர்கள்) ஒன்று சேர்ந்து புதிதாக ‘ றியல் இம்றான் வி. கழகத்தை’ உதயமாக்கியுள்ளனர் என்பது அவர்களது உரையாடல்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நிந்தவூர்-09, மர்ஹூம். அ. அஹமட் சேர் தோட்டத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
இதன் தலைவர் எம்.ஐ.தௌபீக்(ஜே.பி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றியல் இம்றான் விளையாட்டுக் கழக ஆலோசகரும் நிந்தவூர்ப் பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவருமான வை.எல்.சுலைமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அம்பாரை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகரும் லதான் விளையாட்டுக் கழகத் தலைவருமான எம்.எல்.றபீக் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வை.எல்.சுலைமா லெவ்வையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட புதிய சீருடைகள் றியல் இம்றான் வி.க. தலைவர் எம்.ஐ.தௌபீக், செயலாளர் எஸ்.எம்.ஹனீபா, செயலாளர் ஏ.நஸீர் ஆகியோர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளுக்கு இடையிடையே சிறந்த இசைமைப்புடன் கூடிய மிகப்பிரபல்யம் வாய்ந்த பாடகர்களினால் பாடல்களும் இசைக்கப்பட்டன. இதனால் அப்பிரதேசப் பெண்களும்சிறுவர்களும் இங்கு கூடியிருந்தனர்.
இறுதியில் சிறப்பானதொரு விருந்துபசாரத்துடன் மாலை 4.30க்கு இக்கூட்டமும், இசை நிகழ்சியும் முடிவுற்றது.
இந்நிகழ்வுகளில் சட்டத்தரணி. ஏ.நஸீல், துறைமுக அதிகார சபை ஊழியர்கள், இம்றான் வி.க.த்தின் தொண்மைக் கால தொண்டர்கள், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு இரசிகர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இவைகளை அவதானித்துக் கொண்டிருந்த பொது மக்களில் சிலர் ‘ எதிர்கால அரசியலுக்கான அத்திவாரமாக இருக்குமோ’ எனப்  பேசிக் கொண்டனர். பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
IMG_20130303_145716IMG_20130303_152756IMG_20130303_133603IMG_20130303_133614

1 கருத்து:

  1. உதயமான ரியல் இம்றான் விளையாட்டுக்கழகத்திற்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆரம்பிப்பது கடினமல்ல.சவால்களுடன் முன்கொண்டுசெல்வதுதான் கடினம்.உறுதியுடன் செயற்பட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு


site counter