அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 25 மார்ச், 2013

அக்கரைப்பற்றில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்ட 2 முஸ்லிம்கள் கைது




(எஸ்.ஜமால்டீன்)

இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் அநீதிகளைக் கண்டித்து அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று (25.03.2013) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் அனைத்தும் இயங்கவில்லை. ஓரிரு அரச நிறுவனங்களைத் தவிர அரச, தனியார் அலுவலகங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டு வீதித் தடைகள் ஏற்படுத்தப்படிருந்தன. இராணுவத்தினர் பின்னர் வீதித் தடைகளை நீக்கி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. 

இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையில் நிலவும் சமாதான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்போரை சட்டத்திற்கு முன் நிறுத்து! இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாதக் கெடுபிடிகளை உடன் நிறுத்து! முஸ்லிம்களின் வாழ்வியல் கலாசார விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதே! உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவ் ஹர்த்தால் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் உரிமைகள் அமைப்பு (எம்.ஆர்.ஓ) மற்றும் உள்ள10ர் அமைப்புக்கள் சிலவும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. 

Srce: Jafna Muslim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter