அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 18 அக்டோபர், 2012

கிழக்கிற்கு பெருமை தேடித் தந்த நிந்தவூர் அல்மதீனா மாணவன் ஆஷிக் கௌரவிக்கப்படுகிறார்!



-சுலைமான் றாபி- 
2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் செல்வன்.இசட்.ரி.எம்.ஆஷிக் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார்மாத்தறை ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப் பதக்கத்தினையும் குண்டு போடுதலில் 11 .85 மீற்றர் தூரம் ஏறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.
இதனை விடுத்து 2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாடு விழாவிலும் இளைஞர் கழக விளையாட்டு விழாவிலும் ஆஷிக் ஈட்டி எறிதல், பரிது வட்டம் வீசுதல் மற்றும் குண்டு போடுதல் நிகழ்சிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இதேவேளை தான் கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும் கிழக்கு மாகானதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் தங்க மகன் ஆஷிக் அவர்களுக்கு சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் ஜாபிர் கபூர் மற்றும் நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் அனஸ் அஹமட் அவர்களும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
இது தவிர தங்க மகனுக்கு பாடசாலை மாணவ மாணவிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள், பொது அமைப்புக்கள், ஊர் மக்கள் என பலராலும் வரவேற்று ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
மேலும் தங்க மகனுக்கு இன்று புதன்கிழமை தனது சொந்த பாடசாலையான நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலகமும் அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter