அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 25 டிசம்பர், 2013

மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையிலான ஊடகவியலாளர் மாநாடு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டிலான ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று (15) அட்டாளைச்சேனை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையிலான இம்மாநாட்டில் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஓல்.டீ.மனாப் ஆகியோருடன் அம்பாரை மாவட்ட கரையோர செய்தியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கட்சியில்,
அவர்களின் ஆதரவோடு, கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபையில், அமைச்சர் உதுமாலெவ்வை அமர்ந்துள்ள அதே ஆளும் தரப்பில் நானும் அமர்ந்து செயற்பட்டு வருகிறேன். ஆனால், அட்டாளைச்சேனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எந்த அபிவிருத்திப் பணிகளுக்கும் நான் இதுவரையில் அமைச்சர் உதுமாலெவ்வைக்கு எதிராகச் செயற்பட்டதில்லை. இப்படியிருந்தும் ஏனோ கல்லோயா திட்டம், கோணாவத்தை திட்டம், வீதியமைப்புக்கள் போன்றவற்றை முன்னெடுக்கும் போது மக்கள் பிரதிநிதிகளான மாகாணசபை உறுப்பினர், பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச செயலாளர், பிரதேச வாழ் புத்தி ஜீவிகள் போன்றோரது கருத்துக்கள் பெறப்படாமலும், ஒழுங்கான திட்டமிடல்கள் இல்லாமலும் செயற்படுகிறார்கள். இதனால் பொது மக்களில் சிலர் நன்மையடைய, பலர் பாதிப்புக்குள்ளாகுகின்றனர். இந்த நிலைமையைப் போக்க அமைச்சர் முன்வர வேண்டும்' எனத் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் கருத்துத் தெரிவிக்கையில் ' கல்லோயா திட்டத்தின் கீழ் கோணாவத்தை ஆறு அழகு படுத்தப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் முதலில் பொது மக்களின் பாதிப்பைக் குறைக்கும் விதத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆற்றிற்கு எல்லைக்கல் இடவேண்டும். அதன் பின்னரே அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்திருக்க வேண்டும். எல்லைக் கல் இடாமலும், ஒழுங்கான ஆரோசனைகளுடன் உருவாக்கப்பட்ட திட்டமில்லாமலும் நடைபெறும் அபிவிருத்திகளால் பணம் படைத்தோர் நண்மை அடைய, வறிய மக்கள் தமது வாழ்வாதாரத்தையும், குடியிருப்புக்களையும் இழக்க வேண்டிய நிலை உருவாகும். இந்நிலைமையை மாற்றியமைக்க அமைச்சர் உதுமாலெவ்வை உதவ வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
Visual: Mr.A.L.M.Nazeer MPC –Press Confirance.         ( Ampara Rafeek )








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter