( V.vy;.V.wgPf; gph;njs]; )
நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த அல்-ஹாபிழ்- மௌலவி யு.சு.முஹம்மது ஆதில் (ஷர்கி) அவர்கள் கெய்ரோ அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்; 2013-2014ம் ஆண்டிற்;கான புலமைப்பரிசிலைப் பெற்று ஷரிஆ கற்கை நெறியை மேற்கௌ;வதற்காக எதிர்வரும் (டிசம்பர்)14ம் திகதி கெய்ரோ பயணமாகவுள்ளார்.
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் கல்வி கற்று 2012ம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்ற இவர் கடந்த 2008ம் ஆண்டில் லண்டன் மாநகரில் நடைபெற்ற அல்குர்ஆன்; மனனப் போட்டியிலும் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டுக்கும் அம்பாரை மாவட்டத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் இலங்கைக்கான எகிப்திய தூதுவராலயத்தில்;; 65 மௌலவிமார்கள் கலந்து கொண்ட 10பேரைத் தெரிவு செய்யும் நேர்முகப்பரீட்சையில் நிந்தவூரைச் சேர்ந்த அல்-ஹாபிழ் மௌலவி யு.சு.முஹம்மது ஆதில்(ஷர்கி)அவர்கள் இரண்டாவதாக தெரிவானவர் என்பதும், அம்பாரை மாவட்டத்தில் இவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும்;, உயர்ந்த குணமும் சிறந்த குரல் வளமும் கொண்ட இவர் நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த அல்ஹாஐ; மௌலவி அப்துல் றஷீது ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியை ஹாஜியானி ஆமினா அப்துல் றஷீது தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், ரு.முயில் வசிக்கும் யு.சு. முஹம்மது அறபாத்தின் சகோதரருமாவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக