அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

ஹியுமன் லிங் நிறுவனத்தின் சர்வதேச வலது குறைந்தோர் தினமும், கலை கலாச்சார நிகழ்வும்.

      -பிரதம அதிதி மாகாண அமைச்சர் மன்சூர் 4 மில்லியன் ஒதுக்கீடு-
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஹியுமன் லிங் நிறுவனத்தின் ஆறு வருட நிறைவையொட்டி நடாத்தப்படுகின்ற சர்வதேச வலது குறைந்தோர் தினமும், கலை கலாச்சார நிகழ்வும் நேற்று மாலை (08.12.2013) மருதமுனை  கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற்பயிற்சி; கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.குணநாதன், சிறுவர் நன்நடத்தை நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் மௌலவி.என்.ஜீ.அப்துல் கமால், ஹியுமன் லிங் தலைவர் கே.முகம்மட் றொசான், தென்கிழக்கப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.ஜமால்டீன் உள்ளிட்ட கல்விமான்கள், சமூக சேவகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மனதை உருக்கும் விதத்தில் வலது குறைந்த சிறுவர்களது கலை கலாச்சார நிகழ்ச்சிகள் பலவும் இடம் பெற்றன.
போட்டிகளில் திறமை காட்டிய பாடசாலை மாணவர்கள், வலது குறைந்த சிறுவர்களுக்கு மாகாண அமைச்சரினால் பாராட்டுப்பத்திரம், பரிசுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இங்கு மாகாண அமைச்சர் மன்சூர் உரை நிகழ்த்துகையில் 'இங்குள்ள வலது குறைந்த சிறுவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது ஊனம் என்பது உடற் குறைபாடே அன்றி, வேறதுவுமில்லை என்பதை நிருபித்துள்ளது. அவர்களும் ஏனையவர்களைப் போன்று சிறு மாற்றங்களுடன் செயற்பட முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இவர்களுக்கு உதவுகின்றவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ் உதவி செய்வான். எனவே, இச்சிறுவர்களுக்கு சமூகத்திலுள்ள தனவந்தர்கள் உதவ முன்வர வேண்டும். இவர்களுக்கு நிரந்தரக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு முதற் கட்டமாக ரூபாய் 4 மில்லியனை எனது அமைச்சிலிருந்து ஒதுக்கியிருக்கிறேன். மேலும் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டங்களினுடாகவும் பல உதவிகளைச் செய்வதற்கு நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழி காட்டுவார் என நினைக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
வலது குறைந்த மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட நினைவுப் பரிசொன்றும் அமைச்சர் மன்சூரிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஏளைரயட: ர்ரஅநn டுiமெ Pசழ.-ஆinளைவநச ஆயணெழழச.                 யுஅpயசய சுயகநநம.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter