அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 25 டிசம்பர், 2013

கிழக்கு மாகாண மூன்று முன்னோடிகள் இணைந்த முப்பெரும் விழா. -கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீட் பிரதம அதிதி-

                ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம், உள்ளுராட்சி கிராம அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சு, பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் இணைந்து நடாத்திய முப்பெரும் விழா நேற்று (16) சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.எல்.இப்றாகீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு, விளையாட்டு, தொழில் நூட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன். செல்வநாயகம், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பாலர் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கல், பயிற்சியை முடித்துக் கொண்ட பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு வழிகாட்டல் கைநூல்கள் வழங்கல், சாதனையாளர்களைக் கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.
தமிழ், முஸ்லிம், சிங்கள பாலர்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இங்கு உரையாற்றிய முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட் ' இதுவரை காலமும்  கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒரு முறையான வழிகாட்டி நூல் இருக்கவில்லை. சிறந்த பயிற்சிகள் இருக்கவில்லை. ஆனால் இன்று அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் முழுவதற்குமான ஒரே வழிகாட்டியை அறிமுகம் செய்துள்ளோம். இனி இவ்வாசிரியர்களிடம் பயிற்றுவிக்கப்படும் சிறுவர்கள் இந்த நாட்டின் சிறந்த பிரஜையாக, சிறந்த கல்விமான்களாக, எங்களை வழிநடத்தக் கூடிய நல்லவர்களாக, வல்லவர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை' எனத் தெரிவித்தார்.
மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உரை நிகழ்துகையில் ' கிழக்கு மாகாணத்தில் 3000 பாலர் பாடசாலை ஆசிரியைகள் இருக்கின்றனர். அவர்களின் தியாகங்களுக்கு விலை பேச முடியாது. ஆனால், அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக மாதமொன்றுக்கு ஒருவருக்கு 3000ரூபாவாவது வழங்க வேண்டும் என எமது முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இவ்வாறு ஒருவருக்கு மாதம் 3000ரூபா வழங்க வேண்டுமென்றாலும் 90,00,000ரூபாய் பணம் தேவையாகவுள்ளது. எனவே, இவ்வருடத்திலிருந்து எமது சபை ரூபாய் ஒரு கோடியை இவ்வாசிரியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென எமது முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.

Visual: CM.Najeeb.A.Majeed & Mini. Manzoor.         Ampara Rafeek.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter