அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

38 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியது சுதந்திர முன்னணி; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!

38 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியது சுதந்திர முன்னணி; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!

Central-Province1
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 16ஆசனங்களையும் ஜனநாயக கட்சி இரண்டு ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மேலதிக 2 ஆசனங்கள் மத்திய மாகாணத்தில் கிடைக்கவுள்ளன.

Metro Mirror

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter