அஸாத் சாலியின் கைதுக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால்
இதனால் வியாபார ஸ்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
எனினும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன வழமை போல் இயங்குகின்ற போதிலும் பாடசாலை மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, நிந்துவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுள்ளது. இதேவேளை பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவில்லை.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் பிரதான வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் வழமைபோன்று போக்குவரத்து இடம்பெறுகிறது. இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக