( நிந்தவூர் தினகரன் விசேட நிருபர்)
.jpg)
நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சி.எம்.மாஹீர் மூலம் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகளைக் கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சி.எம்.பைசால் காசீம் , நிந்தவூர் அமானா வங்கி முகாமையாளர், நிந்தவூர் ஹட்டன் நசனல் வங்கி முகாமையாளர், நிந்தவூர் மக்கள் வங்கி முகாமையாளர் போன்றோருடன் மேலும் நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள் பலரும் பல அன்பளிப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இ;வ்வாறானதொரு நிகழ்வு அண்மையில் (07.05.2013) நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் , வைத்தியதிகாரி எம்.சி.எம்.மாஹீர் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பற்றாக்குறையான மருந்துகள், அன்றாடப் பாவனைப் பொருட்கள், சிறிய அத்தியவசிய உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினர், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக