அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 13 பிப்ரவரி, 2013

சமூக, கலாசார ரீதியாக முஸ்லிம்களை நசுக்க சிங்கள இனவாதிகள் திட்டம்!


Faizal

-இ.முஹம்மட் பாயிஸ்- 
நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற்றி, ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமே இனவாதிகளின் நெருக்கடிகளில் இருந்து முஸ்லிம்கள் விடுபட முடியும் என்று திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான பைசால்  காசிம் தெரிவித்தார்.
கல்முனை வலய மீலாதுன் நபி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பைசால் காசிம் எம்.பி. இதனைக் குறிப்பிட்டார்.
2012ம் ஆண்டின் தேசிய மீலாதுன் விழா போட்டியில் தேசிய ரீதியில் பங்கு கொண்டு  வெற்றி பெற்ற கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலயில் நடைபெற்றது.
கல்முனை கல்வி வலயப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
“முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் தற்பொழுது மிகவும் சிக்கலான கால கட்டத்தில் உள்ளோம், சிங்கள இனவாத குழுக்கள் எம்மை வீண் பிரச்சினைக்குள் இட்டுச் செல்ல காரணம் தேடி அலைகின்றன.
எம்மீது பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி நெருக்கடி கொடுத்து வருகின்ற சிங்கள இனவாதிகள், சமூக, கலாசார ரீதியாக எம்மை நசுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற்றுவதிலும் ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதும் கல்வி ரீதியாக பலம் மிக்கவர்களாக மாறுவதும் மிக அவசியமாகும்.
குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் கலாச்சார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தங்களை வளர்த்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்” என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபீக், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் உட்பட அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சென்ற ஆண்டுக்கான மீலாதுன் நபி விழா போட்டியில் கல்முனை கல்வி வலயத்தில் இருந்து தேசிய மட்டத்தில் 4 மாணவர்களும் மாகாண  மட்டத்தில் 15 மாணவர்களும் வலய  மட்டத்தில் 130 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பரிசில்களும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter