அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

டுபாயில் தங்கத்தினால் எழுதப்பட்ட 450 வருடங்கள் பழமை வாய்ந்த அல்குர்ஆன் பிரதி (படம்)




தூய தங்கத்தினால் எழுதப்பட்ட 450வருடங்கள் பழமைவாயந்த அரிய புனித அல்குர்ஆன் பிரதியொன்று அண்மையில் துபாயில் நடைபெற்ற உலக ஆடம்பரக் கண்காட்சியில் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தது. 

இப்பழமை வாய்ந்த புனித அல்குர்ஆன் பிரதியானது தூய மான் தோலினால்செய்யப்பட்ட பக்கங்களில்,தூய தங்கத்தைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும், இவ் அல்குர்ஆன் பிரதியின் அட்டைகள் தூய பனைமரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பழமைவாய்ந்த புனித அல்குர்ஆன் பிரதியானது டமஸ்கஸ்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்பழமைவாயந்த புனித அல்குர்ஆன் பிரதியானது துபாயின் அகா குழுமத்தினால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.16ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய ஜவ்ஹார் வகையைச்சார்ந்த  வாலுடன்,22கரட் தங்கத்தினால் செய்யப்பட்ட வாலுறையும் துபாய் உலக கண்காட்சியில்அகா குழுமத்தினால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15முதல்17ஆம் திகதிவரை துபாயின் அல் அரப் அல்புரூஜில்,துபாய் உலக ஆடம்பரக் கண்காட்சி இடம்பெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter